“சாதிய இனவாத காரணங்களால் உண்டாகிய ஏற்றத்தாழ்வுகள் எவ்வளவு
மூடத்தனமான விஷயம் என்பதை நாம் உணரவே நமக்கு பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டது...
அதைப்போல பாலீர்ப்பு காரணங்களால் குறிப்பிட்ட மக்கள் புறக்கணிக்கப்படும் நிலைமை
மாறிட இன்னும் எவ்வளவு காலம் ஆகும்? என்பது தெரியவில்லை... முதலில் ஒருபால்
ஈர்ப்பு என்பது, ஒரு மனிதன் தன் விருப்பத்தின் பேரில் தேர்ந்தெடுப்பதில்லை... அது
மரபணு சார்ந்த விஷயம், பிறக்கும்போதே தீர்மானிக்கப்பட்ட ஒன்று....
அப்படிப்பட்டவர்களை, “நீ எதிர்பாலினத்தவரிடம்தான் ஈர்ப்புக்கொள்ளவேண்டும் என்று
கட்டாயப்படுத்துவது எப்படி சரியாகும்?”... ஒருபால் ஈர்ப்பு என்பது ஏதோ நாகரிக வளர்ச்சியின்
விளைவாக பலரும் நினைக்கிறார்கள், ஆனால் மனித இன தோன்றிய காலத்திலிருந்தே ஒருபால்
ஈர்ப்பும் மனிதர்களோடு இணைந்தே பயணிக்கிறது என்பதை நாம் உணரவேண்டும்..... கடவுள் நம்
எல்லோரையும் வித்தியாசமாகத்தான் படைத்திருப்பார்... ஒருவர் குள்ளமாக, ஒருத்தர்
ஒல்லியாக, ஒருத்தர் கருப்பாக என்று விதவிதமாக படைத்திருப்பார்... ஆனால்,
எல்லோரையும் மனிதனாகத்தான் படைத்திருக்கிறார், நமக்குள் கடவுளின் படைப்புகளில்
காணப்படும் வேறுபாடுகளால் சண்டை வரக்கூடாது... உலகின் மிகப்பெரிய மேதைகள், அறிவு
ஜீவிகள், கலைஞர்கள் எல்லோரும் ஒருபால் ஈர்ப்பு கொண்ட நபர்கள்தான்.... ஒரு மனிதனுக்கு தான் விரும்பிய வாழ்க்கையை வாழவிடாத சமூகம் என்பது,
இன்னும் இருண்ட காலத்திலிருந்து மீளவில்லை என்றுதான் அர்த்தம்....” நான் மேற்சொன்ன கருத்துகளை ஊடகங்களில்
பகிர்ந்துகொண்டவர் பிரபல பாலிவுட் நாயகன் “ஹ்ரித்திக்
ரோஷன்”...
நிஜமாகவே மிகப்பெரிய “சல்யூட்” அடிக்க
வேண்டிய மனிதராக தெரிகிறார் ஹ்ரித்திக்... பாலிவுட்டில் இப்போதெல்லாம் ஒருபால்
ஈர்ப்பு என்பது மிக சாதாரண ஒரு விஷயமாக மாறிவிட்டது... பிரபல நாயகன்கள் பலரும்
அத்தகைய வேடங்களில் நடிப்பதை கொஞ்சமும் வித்தியாசமாக பார்ப்பதில்லை... மக்களும்,
அதை வேறுவிதமான கண்ணோட்டத்தில் பார்க்கவும் இல்லை... ஆனால், இவ்வளவு முற்போக்கான
மன மாற்றத்திற்கு, பாலிவுட் உலகம் வந்திட அவர்கள் கடந்த தூரம் மிக அதிகம்....
அந்த தூரங்களுக்கு மைல் கல்லாக விளங்கிய சில
திரைப்படங்களை பற்றிய ஒரு குட்டி முன்னோட்டத்தை உங்களுக்கு முன்வைக்கிறேன்....
முதன்முதலாக ஒருபால் ஈர்ப்பு
திரைப்படங்களுக்கான ஒரு புதுமையான பாதையை உருவாக்கியவர் தீபா மேத்தா... தன் “fire” (1996) திரைப்படத்தின் மூலம் இரண்டு லெஸ்பியன்
பெண்களின் காதலை மிக நேர்த்தியாக கையாண்டிருப்பார்... இந்த திரைப்படம்
வெளிவருவதற்கு முன்பும் பின்பும் அந்த “படைப்பாளிகள்” பட்ட துயரங்களை இந்திய
ஊடகங்கள் நிறையவே வெளிக்காட்டியது....
அதன்பிறகு 2002இல் வெளியான மகேஷ் தட்தானி இயக்கிய “Mango
Soufflé” திரைப்படம், பாலீர்ப்பு விஷயங்களை பாலிவுட் சினிமா
உலகம் இயல்பாக கையாள ஒரு அடித்தளம் அமைத்தது... அதனை தொடர்ந்து வெளியான ‘Straight’
திரைப்படமும் அதே பாணி நகைச்சுவை ஒருபாலீர்ப்பு கதைதான்... நகைச்சுவையாக பாலீர்ப்பு இங்கு சொல்லப்பட்டிருந்தாலும்
கூட, நெகட்டிவ் பிம்பம் திணிக்காமல் சொல்லப்பட்ட கதைகள் இவை...
இதற்கு பிறகு ஒருபால் ஈர்ப்பு என்பது, பாலிவுட்
சினிமாக்களில் இயல்பாக கையாளப்படும் ஒரு அம்சமாக ஆகிவிட்டதை பின்னர் வெளியான
திரைப்படங்கள் மூலம் நாம் அறியமுடிகிறது....
‘Kal Ho Na Ho’ (2003) திரைப்படத்தில் ஷாருக் கான் மற்றும் சையப் அலி கான் இருவருக்குமான உறவை, ஒருபால்
ஈர்ப்பு உறவாக நினைக்கும் சிலரால் கொஞ்சம் நகைச்சுவையோடு கதை நகர்கிறது.... கரன் ஜோஹரின் கதை இது...
அதன்பிறகு அதே கரன் ஜோஹரின் திரைப்படங்களான தோஸ்தானா
மற்றும் பாம்பே டாக்கிஸ் இரண்டும், ஹிந்தி சினிமா பார்க்கும் ஒவ்வொருவரின்
வீட்டு ஹாலிற்கும் ஒருபால் ஈர்ப்பை பற்றிய பேச்சை கொண்டு சேர்த்தது....
நகைச்சுவை என்ற அம்சத்தை தாண்டி பலரையும் சீரியசாக யோசிக்க
வைத்த படம் “Fashion”... மாடலிங் உலகில் இயல்பாக காணப்படும்
பாலீர்ப்பு தொடர்பான பிரச்சினைகளை முன்னிறுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம்.. நடுத்தர
வர்க்கத்து இளைஞர்களின் வலியை எளிதாக திரையில் வடித்த திரைப்படம் இது...
‘My Brother Nikhil’ திரைப்படம் ஒருபால் ஈர்ப்பையும், எயிட்ஸ் நோயையும் ஒன்றுபடுத்தி மக்கள்
மனதில் நிறைக்கப்பட்டிருந்த மூடநம்பிக்கையை தகர்க்க வழிவகுத்தது....
தொடக்க காலத்தில்
அப்படிப்பட்ட திரைப்படங்கள் வெளியிட இருந்த கடுமையான எதிர்ப்புகள் மாறி, சமீப
காலங்களில் முன்னணி நடிகர்களே ஒருபால் ஈர்ப்ப்புள்ள நபர்களின் வேடங்களில்
நடிக்கிறார்கள்... அதுமட்டுமல்லாமல் முன்னணி “ஒருபாலீர்ப்பு இதழ்” ஒன்றிற்கு
பாலிவுட் கனவு நாயகன் “இம்ரான் கான்” போஸ் கொடுப்பது வரை, அங்கே ஒரு பாலீர்ப்பு என்கிற
விஷயம் மக்களோடு இரண்டற கலந்துவிட்டதை நாம் அறியமுடிகிறது....
சரிதான்... பாலிவுட் சினிமா உலகம் இவ்வளவு
முன்னேற்றப்பாதையில் பயணிப்பதை நாம் காணும் அதே நேரத்தில், நம் தமிழ் சினிமா
உலகமான “கோலிவுட்” பற்றியும் கொஞ்சம் அலசுவது அவசியமாகிவிட்டது...
ஒருபக்கம் நகைச்சுவை என்கிற பெயரில் ஒருபால் ஈர்ப்பை
எவ்வளவு முடியுமோ அவ்வளவு கொச்சை படுத்துகின்ற தமிழ் திரையுலகம், மறுபக்கம்
வில்லன்களின் குணநலன்களில் ஒன்றாக ஒருபால் ஈர்ப்பை நிர்ணயித்துவிட்டார்கள்.... மிகவும்
முற்போக்கு கலைஞர்களான பாலு மகேந்திரா, கமல் ஹாசன் போன்றோர் கூட ஒருபால் ஈர்ப்பை
பற்றிய மிகத்தவறான பிம்பத்தைதான் மக்கள் மனதில் விதைக்கிறார்கள்....
பாலு மகேந்திரா அவர்களின் “அது ஒரு கனாக்காலம்...”
திரைப்படத்தில், தனுஷை செட்யூஸ் செய்யும் ஒரு “கே”... யார் மீதான கோபமோ பாலு
அவர்களுக்கு, அந்த “கே” நபரை சாகும் வரை அடித்து தீர்க்க வைத்துவிட்டார்....
அடுத்ததாக கலையுலகமே கொண்டாடும், உலக நாயகன் “கமல்ஹாசன்”
அவர்களின் “வேட்டையாடு விளையாடு” திரைப்படம்... எப்படி கமல் சார்
உங்களுக்கு இப்படி ஒரு பிற்போக்கான எண்ணம் உதித்தது?... மனநலம் பாதிக்கப்பட்ட,
சைக்கோ சீரியல் கொலைகாரர்களாக இரண்டு ஒருபால் ஈர்ப்பு நபர்களை காட்டி
இருக்கிறீர்கள்.. இதன்மூலம் அவர் சொல்ல வருவது என்ன?ன்னு எனக்கு தெரியல... ஒருபால்
ஈர்ப்பை ஒரு மனநோய் என்று சித்தரிக்க முயல்கிறாரா? வெளிநாட்டு கலாச்சாரம் என்று
திரிக்கப்பார்க்கிறாரா? என்பதும் எனக்கு புரியவில்லை...
சமீபத்தில் தன் திரைப்படம் ஒன்றிற்கு வெளியிடுவதில் சிக்கல்
வந்தபோது, தான் வெளிநாட்டில் குடியேறிவிடுவதாக மக்கள் முன்பு கண் கலங்கினார்....
வேட்டையாடு விளையாடு திரைப்படத்தை ஒருவேளை அந்த வெளிநாட்டு கலைஞர்கள்
பார்த்திருந்தால், “தயவுசெய்து எங்கள் நாட்டிற்கு வந்துவிடாதீர்கள்!” என்று
கோரிக்கை வைத்திருப்பார்கள்... அந்த அளவிற்கு மிகவும் பிற்போக்குத்தனமான
கருத்துகள் நிறைக்கப்பட்ட திரைப்படம் “வேட்டையாடு விளையாடு”....
“முப்பொழுதும் உன் கற்பனைகள்” திரைப்படம் கூட கமல் அவர்களின் இந்த
பிற்போக்கான கருத்துகளை வழிமொழியும் எண்ணத்துடன் உருவாக்கப்பட்ட ஒரு இயக்குனரின்
திரைப்படம் தான்... அதிலும் கொலைகார வில்லன் கூட்டம் “கே” நபர்களாம்... இன்னும்
எவ்வளவு கொடுமைகளை இப்படி திரைவழி பார்க்கப்போகிறோம்? என்பதை நினைத்தால் கொஞ்சம்
பயமாகத்தான் இருக்கிறது....
“அவனா நீ?, கொரில்லா செல்” போன்று கொச்சைப்படுத்திய
நகைச்சுவை தொடங்கி, ஒருபால் ஈர்ப்பு நபர்களை சீரியல் கொலைகாரர்களாக சித்தரிப்பதுவரை
இந்த தமிழ் திரையுலகம் தன்னாலான
பாலீர்ப்புக்கான விழிப்புணர்வை மக்களுக்கு சேர்த்துவிட்டது...
ஆனால், நிஜமாகவே ஒரு தமிழ் திரைப்படம் பல
வெளிநாட்டிரைக்கூட, “அட!.. தமிழ் சினிமாவில் இவ்வளவு முற்போக்கான கருத்தா?” என்று
ஆச்சரியப்பட வைத்தது என்பதையும் நாம் ஏற்றாக வேண்டிய ஒரு திரைப்படம் தான் “கோவா”...
வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான கோவா திரைப்படத்தில்தான், முதலும் கடைசியுமாக
(இதுவரை) ஒருபால் ஈர்ப்பை பற்றிய நேர்மறையான கருத்தை இந்த திரையுலகம்
பதிவுசெய்தது.... சம்பத் மற்றும் அரவிந்த் இருவருக்கும் இடையிலான காதலை மிக அழகாக
காட்சி படுத்தியிருப்பார் இயக்குனர்... ஒரு காதலருக்கே உரிய “பொசசிவ்னஸ்”,
“புரிதல்”, “அன்பு” எல்லாம் தன் அளவினை மீறிடாமல் அந்த படத்தில்
கோர்க்கப்பட்டிருந்தது...
வெங்கட் பிரபு மட்டும்தான் தமிழில் ஒருபால் ஈர்ப்பை பற்றிய
உண்மை கருத்துகளை திரையில் பதித்த ஒரே கலைஞர்....
ஆனாலும், அவரின் மற்ற படங்கள் அடைந்த வெற்றியை “கோவா”
பெற்றிடவில்லை... பல ஊடகங்களும் கூட அந்த படத்தை பற்றிய எதிர்மறையான கருத்துகளை
பரப்பியது கூட அந்த தோல்விக்கு ஒரு காரணமாக இருக்கலாம்... விளைவு, வசூலில்
எதிர்பார்த்த வெற்றி அந்த படத்திற்கு கிடைக்கவில்லை....
அதுவரை எதிர்மறை விமர்சனங்களை மட்டுமே பாலீர்ப்பை பற்றி
பரப்பி வந்த தமிழ் திரையுலகில், முதன்முதலாக நேர்மறையான உண்மை கருத்தை பதித்த அந்த
திரைப்படத்தை மக்கள் ஏற்கவில்லை... ஒருவேளை, தோஸ்தானா திரைப்படம் போல, நகைச்சுவை
கலந்து இந்த கருத்தை வெளிப்படுத்தியிருந்தால் மக்கள் ஏற்றிருப்பார்கள் என்றே
தோன்றுகிறது....
இனி நிச்சயம் ஒருபால் ஈர்ப்பை பற்றிய நல்ல பல திரைப்படங்கள்
வரும் என்கிற நம்பிக்கை, வெங்கட் பிரபு போன்ற ஒருசிலரை பார்க்கும்போது உருவாகிறது....
அந்த வகையில் அவருடைய முதல் முயற்சி நிச்சயம் தோல்வி கிடையாது, வெற்றிக்கான முதல்
படி என்றுதான் சொல்லணும்... அந்த படியில் ஏறி எதிர்கால திரையுலகம், தமிழில் பல
நல்ல ஒருபால் ஈர்ப்பு நேர்மறை சிந்தனைகளை விதைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு
வருகிறது....
என் முதல் சல்யூட்டை எப்படி “ஹ்ரித்திக் ரோஷன்” அவர்களுக்கு வைத்து
இந்த பதிவை தொடங்கினேனோ, அதைவிட ஒரு ராயல் சல்யூட்டை “வெங்கட் பிரபு” அவர்களுக்கு
அடித்து இந்த கட்டுரையையும் நிறைவு செய்கிறேன்....
Thannudaiya peruvaariyaana padangalil orina serkkai patri sitharitha oru iyakunar madhur bhandarkar! "Chandini Bar" il Tabuvin maganai molest seiyum kaatchi thuvangi, "Page 3@ il Konkona Sen Sharma vin kaathalan orina serkkaiyil eedupaduvathu, "Fashion" il anaittthu fashion designerga;ume gay enbathu pol kaamithirunthaat! "JAil" padathlum etho kaatchi irup[athaaga kelvi patten!
ReplyDeleteAanaal, Madhurum kooda GAY STEREOTYPING seithirunthaar avar padangalil! pugalukaaga orina serkkaiyil eedupadugirargal, orina serkaiyalargal elaarume feminine aaga irupaargal enbathu pol thaan avarum sitharithu irunthaar!!
"My friend Nikhil" unmailiye arputhamaana padam!! Aanal Anna, innum Bollywoodilum mainstream nadigargalukku nijamaana Gay rolil nadikka thairiyam kidaiyaathu enbathu thaan unmai!! Abhiskekum johnum dostana vil nadithatharku kaaranam antha characters gay aaga nadipathaal mattume!! Karan Johar, Manish Malhotra pondra pabalam aanavangale ippo varaikum veliya solla mudiyalaye!! athu thaan inga nilamai!! Aana nichayam Bollywood kollywood a vida oru padi mela thaan!! Rahul Bose mathiri niraiya per thairiyama nadikuraanga!!!
"Goa" naan parkala! aana niraiya peru aan-penn kaathal polave azhaga irunthathaa sonaanaga! Venkat prabhu antha padathula antha kaatchigala vachathu romba paadu pattatha ipppo than recent ah oru TV show la sonnaru!!
Kamal Hassan elaam niraiya vishayathula periya Hypocrite!! athai namma vera idathil pesuvom!!! Tamizh cinema evalavo vishayangala maara vendiyirukku!! vanmurai padangal sameega kaalathula trend aanathe epdinnu theriala!!
Maatram varumnu nambuvom!!!
நிறைய புதுமையான விஷயங்களை நீங்களும் சொல்லி இருக்கீங்க..... ரொம்ப நன்றி நண்பா..... கோவா பாருங்க, நல்ல திரைப்படம்....
DeleteNichayam paakuren nanbaa! :)
DeleteA nice Article.Not only Tamil industry makes mockery of this communit All south indian movies are showing negative shades only.. You had missed out a HINDI movies which is 100% gay movie where zeenat Aman has acted as mother of one of gay couple. I don't remember the name of the movie it is "do you know why Kyounki" or something
ReplyDeleteWhen you talk about Tamil, our neighbor Malayalam industry has come up with some interesting movies like MUMBAI POLICE, Appoorva ragangal, and Asura viththu movies where the hero is openly projected as a gay. in the first movie mentioned above the hero "PRITHIVIRAJ"(who acted in mozhi, Ravanann, sathhtham podathey) is a gay police who kills his own close straight friend who is also in the police , for the reason that he saw him having relationship with his gay friend. In the other movie the hero ASif Ali is portrayed as gay and Psycho. South is narrow compared to North Geographically and mentally.
மும்பை போலிஸ் படம் பற்றி நானும் கேள்விப்பட்டேன் அண்ணா.... நிஜத்தில் நான் வேற்றுமொழி படங்கள் அதிகம் பார்ப்பதில்லை... இங்குள்ள நிறைய கருத்துகள் கூட நான் குறிப்பிட்டுள்ள நண்பர் சொன்னதை வைத்து எழுதியதுதான்... நிச்சயம் நான் நீங்க சொன்ன படங்களை பார்க்க முயல்கிறேன்.... ரொம்ப நன்றி....
Deleteஉண்மையிலே இருவருக்கும் நாம் நன்றி சொல்ல வேண்டும்...இன்னும் நிறைய திறமைசாலிகள் தோன்றும்போது இது தானாகவே மாறும்...so we must show our talents that we are unique than those idiots...
ReplyDeleteமிக்க நன்றி சாம்... மாறும்னு நம்புவோம்...
Deleteநல்ல மாற்றங்கள் விக்கி. நம்மளுடைய உணர்வுகளை இந்த சமுதாயத்திற்கு எளிதில் கொண்டு செல்லனும்ணா இவர்களைப் போன்றவர்களின் ஆதரவான கருத்துக்கள் அவசியம். அவ்விருவருக்கும் இதை பதிவு செய்த உங்களுக்கும் நன்றி விக்கி.
ReplyDeleteஉண்மைதான் நண்பா... நிச்சயம் இனி வரும் காலங்களில் நாம் விரும்பும் வகையில் மாற்றங்கள் நிகழ்வும்னு நம்புவோம்.... ரொம்ப நன்றி சேகர்....
Deletevijay vicky
ReplyDeleteenaku bolywood pathi avalova theriyathu paaaaa
but goa padam parthen athila niraya katchigal la delete panitaanga
but those scenes i watched in youtube, parthapothu romba santhosapateen, ipadi kooda padam edupargala endru?
enaku romba pidithathu, hats off to "Venkat Prabhu"
உங்கள் கருத்துகளுக்கு ரொம்ப நன்றி நண்பா,,,,
DeleteReally i hate our tamil industry... And ofcourse kamal made tat idiotic information... Hats off to bollywood and venkat prabhu...
ReplyDeleteReally i hate our tamil industry... And ofcourse kamal made tat idiotic information... Hats off to bollywood and venkat prabhu...
ReplyDeleteReally i hate our tamil industry... And ofcourse kamal made tat idiotic information... Hats off to bollywood and venkat prabhu...
ReplyDeleteகருத்தை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி தம்பி....
DeleteAnna you forget this superb hindi gay movie "dunno y na jane kyun " released in 2010...please vicky anna and other friends watch this ....its there in you tube ...just type the movie name it will come ....watch it your eyes will definitely shed a tears
ReplyDeleteகருத்துக்கு நன்றி தம்பி... அந்த படம் நான் பார்க்கவில்லை இன்னும், நிச்சயம் பார்க்கிறேன்பா....
Deleteungaluku naan ondrai gnabaga padutha virumukindren. friendsoda pesikitu irukum pothu thaan oru gay-nu therinjuda koodathungurathukaga, gay pathi antha gay-ve mathavangala vida romba athigama thappa pesuvan.
ReplyDeleteAthu mathirithan ithuvum. gay pathi purithal irunthalum kooda, mathavanga thappa nenachuda koodathunu ivangalum thapu thapa padathula pesurathu.
Innoru vasayamum iruku. makkal purinjukatha itha vachi oti oti kaasu paakurathu. yaraiyavathu kurai solliye aganumla!
கருத்தினை பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா...
Delete