“என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் நாம்.....!” –
சிறுகதை...
“அஷோக் சார், இந்த கொட்டேஷனை கொஞ்சம் எடிட் பண்ணி
தரீங்களா?... ரொம்ப குழப்பமா இருக்கு சார்...” மாலினி இப்படி கேட்டு அருகில் வந்து
நின்றபோது, மனதிற்குள் அந்த தருணத்தை ரசித்தபடியே மென்மையாக சிரித்தான் அஷோக்...
“இதுகூட பண்ண மாட்டேனா உங்களுக்காக... இது ஒன்னும்
ப்ராப்ளம் இல்ல மாலு, லாஸ்ட் இயர் வால்யூவை கம்பேர் செஞ்சு ப்ரைஸ் அப்டேட் போட்டா
போதும்... இங்க பாருங்க...” என்றபடி தன் கணினியில் சில வித்தைகளை அஷோக் காட்ட,
அவன் பின்பு குனிந்தவாறு நின்று அதை கவனிக்க தொடங்கினாள் மாலினி... அதுவரை குறுகியபடி
அமர்ந்திருந்த அஷோக், தன் தோள் மாலினியின் மார்போடு உரசுவதற்கு ஏதுவாக அப்போதுதான்
கொஞ்சம் நிமிர்ந்து அமர்ந்தான்... அவ்வப்போது கணினியின் “என்டர்” பட்டனை
தட்டும்போதேல்லாம், காரணமே இல்லாமல் அவன் தோள் குலுங்கிய காரணத்தை மாலினி
அறிந்திருக்கவில்லை....
“ரொம்ப தாங்க்ஸ் சார்...” சொல்லிவிட்டு மாலினி செல்லும்
முன்பு கொடுத்த கையை சில நொடிகள் தடவியபடி விடைகொடுத்தான் அஷோக்....
“தாங்க்ஸ் மட்டும்தானா மாலு?” ஆயிரம் அர்த்தங்கள் பொதிய
கேட்டான்...
“வேற என்ன சார் வேணும்?.. நியாயமா உங்களுக்கு என் சாலரி’ல
பாதி கொடுக்கணும், அந்த அளவுக்கு என் வேலைகள்ல பாதிய நீங்கதான் செய்றீங்க... ஹ ஹ
ஹா...” குலுங்கி சிரித்தாள் மாலினி...
“ரொம்பவல்லாம் ஒண்ணுமில்ல மாலு, இந்த வீக்கெண்ட் டேட்
வேணும்.... அவ்ளோதான்...” சிரித்தான்...
“ஹ ஹ ஹா.... போங்க சார்...” ஆறு முறைகளை தொடர்ந்து, ஏழாவது
முறையாகவும் இந்த கேள்விக்கு சிரித்தே மழுப்பிவிட்டாள் மாலினி... அந்த
அலுவலகத்தில் அஷோக் தொட்டு துளங்காத ஒரே பெண் அவள் மட்டும்தான்... அழகான சிரிப்பு,
தெளிவான தோற்றம், எப்போதும் பட்டாம்பூச்சியை போன்ற துறுதுறுப்பு... மாலினியின்
மீது பித்தாய் அஷோக் மட்டுமல்ல, இன்னும் சில யுக புருஷர்களும் அந்த அலுவலகத்தில்
காத்துக்கிடக்கிறார்கள்...
மதிய உணவு இடைவேளையில், சப்பாத்தியை பிய்த்து வாயில்
வைத்தவாறே, அன்றைய மாலினியுடனான உரசலுக்கு, கண் காது மூக்கு வைத்து கதை
அளந்துவிட்டான் அஷோக்...
“ரொம்ப சிம்பிளான கொட்டேஷன்டா... அதை புரியாத மாதிரி
என்கிட்ட கேட்க வந்து என் பின்னாடி வந்து நின்னு உரசுனா மச்சி...”
“ஐயோ செம்மடா.... அப்புறம்?” இப்படி கதை கேட்டே காதோரத்தில்
நரை பூக்கும் அளவிற்கு நாட்களை கடத்திவிட்ட சீனியர் அலுவலர் ராமு எதை சொன்னாலும்
நம்பிடும் ஒரு “பச்சை குழந்தை”...
“அதை சரி பண்ணி கொடுத்திட்டு என் வேலையை பார்க்குறப்போ,
இந்த வீக்கெண்ட் டேட்டிங் போலாமா?’னு கேட்குறா... டைம் கிடச்சா போகலாம்னு
சொல்லிட்டேன்...”
“உனக்கு எங்கயோ மச்சம் இருக்கு மச்சி... இதுவரைக்கும் ஷைலு,
வினோ, அம்மு... இப்போ மாலு... எல்லாமே செம பிகர்டா.... ஆமா, என்னாச்சு வித்யா
விஷயம்?”
“ஹ்ம்ம்.... அது ஓவர் மச்சி... இந்த வாரம்தான், மகாபலிபுரத்துல
அடிக்கல் நாட்டினேன்... இங்க பாரு...” என்று தன் அலைபேசியில் சில புகைப்படங்களை
காட்ட, அதில் ஒரு பெண் கட்டிலில் அமர்ந்திருப்பதாகவும், உடை மாற்றுவதாகவும், கண்
அடித்து சிரிப்பதாகவும் புகைப்படங்கள் வரிசை கட்டி நின்றன... விரித்த கண்களோடு
ஆச்சரியமாக அவற்றை ராமு பார்க்கும் நேரத்தில், பெருமிதத்தில் மிதக்கத்தொடங்கினான்
அஷோக்....
மாலை வேளையில் அலுவலகம் முடிந்து பைக்கில் தன் வீட்டை
நோக்கி சென்றுகொண்டிருந்த வழியில் திடீரென வண்டியை நிறுத்தி, அலைபேசியை காதில்
வைத்தான் அஷோக்.... அழைப்பு எதுவும் வராவிட்டாலும்கூட அந்த அலைபேசியை காதில்
வைத்தவாறே மெல்ல தன் கண்களை சாலையோரத்தில் அமர்ந்திருந்த மனநலம் பிறழ்ந்த ஒரு பெண்
மீது படரவிட்டான்... இளம் வயது பெண்தான் என்றாலும், அழுக்கேறி கிடக்கும் அவள் உடை
ஆங்காங்கே கிழிந்து இருக்கிறது... தன் கண்களை அவள் மீது ஊடுருவ செய்து, கிழிந்த
ஆடைக்குள் அவள் அங்கங்களை அளவெடுத்தான்.... அவன் மட்டுமல்லாது அந்த “பார்வை
கற்பழிப்புகள்” அங்கு பல ஆண்களால் நடந்துகொண்டிருப்பதை, ஒருவருக்கொருவர்
கண்டுகொள்ளாமல் பெருந்தன்மையாக கடந்து சென்றனர்... அவள் அங்கங்களை கண்களால்
கபளீகரம் செய்துவிட்டு சில நிமிடங்களில் வீட்டையும் அடைந்தான்....
அந்த ஆறு மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பின் வாகன
நிறுத்தத்தில் வண்டியை நிறுத்திவிட்டு, தன் பிளாட் இருக்கும் மூன்றாம் தளத்திற்கு
செல்லும் முன்பு யாரையோ தரைத்தளத்தில் தேடினான்.... அஷோக்கை பார்த்ததும் ஒரு
சிறுமி ஓடிவந்தாள், பதின்மூன்று வயதிருக்கலாம்.... வயதினை மீறிய அங்க வளர்ச்சிகள்,
அவள் ஓடி வரும்போது அப்பட்டமாக வெளிப்பட்டது....
“ஹாய் அஷோக் அங்கிள்...” என்றாள்...
தன் பைக்குள் வாங்கி வைத்திருந்த ஒரு சாக்லேட்டை அவள்
கையில் திணித்துவிட்டு, கொஞ்சம் அக்கம் பக்கம் பார்த்துவிட்டு அவள் கன்னத்தில் ஒரு
முத்தத்தை பதித்துவிட்டு மாடியேற தொடங்கினான்... அந்த முத்தத்தில் எச்சிலோடு
கலந்திருந்த விரசமான எண்ணங்களை, அந்த சிறுமி அறிந்திடாமல் அவள் வாங்கிடும்
எழுபத்திரண்டாவது சாக்லேட் அது...
தன் பிளாட்டின் வெளியில் ஒரு பெண்ணும் ஆணும்
பேசிக்கொண்டிருப்பதை கண்டதும், தன் நடையை வேகப்படுத்தினான் அஷோக்... அஷோக்கை
பார்த்ததும் அந்த ஆண் மெல்ல அங்கிருந்து விலகி செல்வதை போல அவனுக்கு தோன்ற, அங்கு
நின்ற பெண் அருகில் சென்றதும், “யார் அவன்?” என்றான்....
“பக்கத்து பிளாட் ராஜேஷை தேடி வந்தாராம், ஆள் இல்லைன்னு
நம்ம வீட்ல கேட்டாங்க...” கலக்கத்துடன் பதில் சொன்னாள்....
“உனக்கு ஆயிரம் தடவை சொல்லிருக்கேன், இப்டி எவன்கூடயும்
பல்ல இழிச்சுகிட்டு பேசிட்டு இருக்காதன்னு... உள்ள போ....” என்று அதிர்ந்து சொல்ல,
திடுக்கிட்டு நிதானித்த அவன் மனைவி தன் இயலாமையை நொந்தவாறு உள்ளே சென்றாள்...
குளித்து முடித்து, சூடாக காபியை அருந்திவிட்டு அறைக்குள்
சென்றான் அஷோக்... அப்போதுதான் இறுக்கம் களைந்த அவன் மனைவி சீரியல் பார்ப்பதற்கு
ஆயத்தமானாள், அவள் முகத்தில் “நாதஸ்வரம்” மலரை பற்றிய கவலை குடிகொண்டிருந்தது....
அறைக்குள் சென்று கதவை மூடிய வேகத்தில் கணினியை திறந்து,
செக்ஸ் வீடியோக்கள் நிறைந்து கிடக்கும் ஒரு தளத்தில் “கேங் ரேப் (gang rape)” என்று
வீடியோக்களை தேடினான் அஷோக்... அதில் ஒரு பள்ளி மாணவியை நான்கு பேர் கற்பழிக்கும் வீடியோவை
டவுன்லோட் செய்தான்.. அந்த காணொளி டவுன்லோட் ஆகிக்கொண்டிருக்கும் கால
இடைவெளிக்குள், தன் பேஸ்புக் பக்கத்தை திறந்தான்....
சில நொடிகள் யோசித்துவிட்டு, அன்றைய பேஸ்புக் ஸ்டேட்டசை
மிகுந்த அக்கறையோடும், சமூக பொறுப்போடும் பதிவு செய்தான் அசோக்...
“ஓரினச்சேர்க்கையை இந்தியாவில் அங்கீகரிக்க
போகிறார்களாம்...
நம் கலாச்சாரத்தை குழி தோண்டி புதைக்கும் இந்த செயல்களுக்கு
‘மனித உரிமை’ என்று பெயராம்....
என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் நாம்?”... (முற்றும்)
Sariyga solgireergal vijay, perumbalana aangalin indha seigaigaldhan avargaluku perumai endru ninaithu kolgirargal...
ReplyDeleteகருத்துகளுக்கு மிக்க நன்றி சக்தி....
Deleteyes even womens accept this issue but mens are not accepting this.. they think being like this is proud t o them as sakthi said... This mentality should be changed...
ReplyDeleteஉண்மைதான் தம்பி.... இங்கே நல்லவர்களாக தங்களை காட்டிக்கொள்ள விரும்பும் கெட்டவர்கள்தான் அதிகமாக நம்மீது குறையை சொல்கிறீர்கள்...
Deleteellarum keelthanama nadanthukittu nammala keelthanama nadanthukuratha solranga. nethyadi adicheenga anna!
ReplyDeleteநிஜம் தம்பி... உன் கருத்துக்கு நன்றிகள்....
Deleteperfectly right dear friend, a wow of story which talks about reality in our society
ReplyDeleteமிக்க நன்றி நண்பா...
Deleteஉண்மையில் அஷோக் போன்ற ஏராளமானோர் தைரியமாக உலாவரும் நிலையில் நிகழ்முரணாக வஞ்சனையற்ற மாற்று பாலீர்ப்பு/பால்விருப்பு உடையோர் முகமூடி அணிந்து வாழ வேண்டிய சூழல். உச்சகட்ட கொடுமை என்னவென்றால், ஓர்பாலீர்ப்பை எதிர்க்கும் பல ஆண்கள் தங்களது காம உணர்ச்சியை பெருக்க, அவர்கள் காண்பது லெஸ்பியன் பெண்கள் பாலுறவு கொள்வது போல் சித்தரிக்க பட்ட நீலப்பட காணொளிகளையே.
ReplyDeletemutrilum unmai than
Deleteரொம்ப உண்மை கண்ணகி.... பெரும்பாலான எதிர்பால் ஈர்ப்பினரின் அலைபேசியை அலங்கரிப்பது என்னவோ லெஸ்பியன் காணொளிகள்தான்...
Deleteromba sariya sonneenga vijay... metro bus la nadakura pengaluku ethirana theendalgala pakkanum pothu kadupu than varuthu... ovvuru pennum thanooda kuduma nilamaiyin karanama office, illa velaiku, college,school ku padika poranga... ana vakkaram pidicha sila aangal avangala harrase pannuratha paakum pothu... cha neenga yellam oru manusangallanu irukkum ... Apadi paatavangaluku oru warning, neenga eppadi pannum pothu unga sister r mother r wife r ur daughter will also travelling in some bus. be careful
ReplyDeleteரொம்ப உண்மை பாலா.... பெண்களை மனிதர்களாக பார்க்க தெரியாத இவர்கள் தான் மனிதர்களின் பாலீர்ப்பை பற்றி குறை சொல்கிறார்கள்...
Deleteu r rit Bala...
ReplyDeleteno words முகத்திலடித்தது போன்ற கதை...இவர்கள் முதலில் மனிதநேயம் கலாச்சாரம் பின்பற்றட்டும்...தன் தவறை மறைக்க அடுத்தவர் மேல் பழி போடும் இவர்கள் மனிதனாக நினைக்கக்கூடாது...
ReplyDeleteமிக்க நன்றி சாம்....
Deleteenakku remba nala intha doubt irukku anna society-la ippadi mosamana alunga ellam kuda irukkangala enna, enkku shock a than irukku paper la varra news ellam parkkarappa... ana enga ashok kadaisila orina irppukku sappotta pesi nammala asinga paduthituvanonu remba payanthen, appadi illa thanks...
ReplyDeleteDear Sir,
ReplyDeleteYour stories are all very nice
But y dont u write stories apart from gay relations?
I like ur style and imagination.
Ur blog was referred by my friend from Nigeria.
U may know him.
He is (Late) Ajay kumar
He used to praise ur stories very much
So, I visited ur blog today and find very much interesting
God Bless u sir
Ravi R
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை தனது குற்றத்தினை மறைத்து விட்டு மற்றவர்கள் மீது பழி சொல்பவர்கள் தான் இங்கு அதிகம் ... மனிதாபிமானம் செத்துவிட்டது ..இனியாவது திருந்துவார்களா இவர்கள்.,😣
ReplyDeleteநீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை தனது குற்றத்தினை மறைத்து விட்டு மற்றவர்கள் மீது பழி சொல்பவர்கள் தான் இங்கு அதிகம் ... மனிதாபிமானம் செத்துவிட்டது ..இனியாவது திருந்துவார்களா இவர்கள்.,😣
ReplyDelete