2013ஆம் ஆண்டு உங்கள் விஜயின் வலைப்பூவை பொருத்தவரை மிகுந்த முக்கியத்துவம்
வாய்ந்த ஆண்டு.. ஏறத்தாழ 90 பதிவுகளுக்கும் மேல் இந்த
ஆண்டில் நான் எழுதி உங்கள் பார்வைக்கு பதியப்பட்டிருந்தாலும், வாசகர்கள் அதிகம்
படித்த, மிகவும் வரவேற்புக்கு உள்ளான 2013ஆம் ஆண்டின் சிறந்த 10 பதிவுகளின் பட்டியலை உங்கள்
பார்வைக்கு கொண்டு சேர்ப்பதில் மகிழ்கிறேன்...
இந்த
ஆண்டின் 10வது இடத்தில் இருக்கும் பதிவு..
நம்ம
ஊரு அரசியல்ல பேசவே தயங்குற ஒருபால் ஈர்ப்பு விஷயத்தை, வெளிப்படையாவே சொல்லி,
நேபாள அரசியல்ல கலக்கிய ரியல் ஹீரோ சுனில் பாபு பான்ட் பற்றிய ஒரு சின்ன
முன்னோட்டம்தாங்க இந்த கட்டுரை....
“அரசியலில் கலக்கும் கே அரசியல்வாதி...” – ரியல் ஹீரோ சுனில் பாபு
பான்ட்...
9வது இடத்தை பிடித்திருக்கும் பதிவு, ஒரு சிறுகதை...
ஏதோ
ஒரு சமூக அழுத்தத்தால ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணிக்குற ஒருபால் ஈர்ப்பு நபரான
மதுராந்தகன் என்ற நாற்பது வயசை கடந்த ஒரு சமூகமே மதிக்குற நபர் சந்திக்குற
பிரச்சினைதாங்க இந்த சிறுகதை...
“இதுவும் கடந்து போகும்...” – சிறுகதை...
8வது இடம் கிடைத்திருக்கும் பதிவு, சிகிச்சைகள் பற்றியது... ஓரினச்சேர்க்கைக்கு
என்னதான் சிகிச்சை?னு என்கிட்ட கேட்குற பலருக்கான பதில் இதுதான்ங்க... நிஜத்துல
இப்படிப்பட்ட சிகிச்சைகள்தான் இந்தியால கொடுக்குறாங்க....
“இந்தியாவில்
கொடுக்கப்படும் ஓரினச்சேர்க்கைக்கான சிகிச்சை முறைகள்....”
ஒருபால் ஈர்ப்பை நம்ம பாலிவுட்
முதல் கோலிவுட் வரை சினிமா எப்டி பார்க்குது? இந்த கேள்விக்கு கொஞ்சம் ஆராய்ந்து
பார்த்து பதிந்த பதிவுங்க.... சினிமா அலசல் பற்றிய இந்த கட்டுரை பிடித்திருக்கும்
இடம் “ஏழு”...
“பாலிவுட் முதல் கோலிவுட்
வரை...” – ஒரு கே பயணம்....
6வது இடத்தை பிடித்திருக்கும் ஒரு கதையை பற்றி இப்போ பார்க்கலாம்....
வெளியூரில்
இருக்குற தன் காதலனை பார்க்க வர்ற ஒரு இளைஞன், இருட்டிய சூழலில் தான் கடக்குற
பாதையில் சந்திக்கும் நிகழ்வுகள்தான் கதை... கொஞ்சம் அமானுஷ்யமும், பரபரப்பும்
பற்றிக்கொண்டே கதையோடு நீங்களும் நகர்வீர்கள்..
“நான்... அவன்.... அது...” – சிறுகதை....
எல்லா
கே நபர்களோட மனசுலயும் ஏதோ ஒரு தருனத்துல இந்த கேள்வி நிச்சயம் தோன்றிருக்கும்....
அந்த கேள்விக்கு என்னோட அனுபவத்தின் வழிலையும், ஆய்வறிந்த சில நிகழ்வுகளின்
வழியிலும் எழுதிய கட்டுரை.... இனி யாரும் இந்த கேள்வியை கேட்க மாட்டிங்க என்ற
நம்பிக்கையோடு எழுதிய இந்த கட்டுரைக்கு கிடைத்திருக்கிற இடம் “ஐந்து”....
“ஸ்ட்ரைட் நண்பனை செட்யூஸ் செய்யனுமா?....”
தொடர்கதை
டெஸ்ட் மேட்ச் போல, சிறுகதை ஒன் டே போல என்றால், இந்த குட்டிக்கதை ட்வென்டி-
ட்வென்டி போல... அந்த அளவுக்கு சுறுக் நறுக்கான குட்டிக்கதைகளின் முதல் முயற்சி
இது.... கவின் என்ற குட்டிப்பையனின் வாழ்க்கையில் நிகழும் சம்பவங்களால்
உருவாக்கப்பட்ட இந்த குட்டிக்கதை 4வது இடத்தோடு உங்கள் பார்வைக்கு...
“அது உனக்கு புரியாது....!” – குட்டிக்கதை...
மூன்றாம்
இடத்தை பிடித்திருக்கும் இது ஒரு அதிர்ச்சியான கட்டுரைதான்... நம்ம சமூகத்து
இளைஞர்கள் எந்த அளவுக்கு ஒவ்வொரு நாளும் விற்பனை செய்யப்படுறாங்க’ன்னு ஒரு
அதிர்ச்சிகரமான கட்டுரை... இதைப்பத்தி விசாரிச்சப்போ மிகப்பெரிய அதிர்ச்சிகளால
நானே புருவம் உயர்த்தினேன்... ஆபத்து இருப்பதா சிவப்பு விளக்கை நான் காட்டிட்டேன்,
ஆபத்தை புரிஞ்சுக்க வேண்டியது நீங்கதான்...
அதிர்ச்சியான “கால் கே நெட்வொர்க்” (call gay network)....
ஓரினச்சேர்க்கை
தளங்கள் சமீப காலமா சமூக விரோதிகளின் பிடியில் சத்தமில்லாமல் சிக்கிக்கொண்டு
இருப்பதை நம்ம மக்களுக்கு வெளிக்கொண்டு வர நான் எடுத்த இந்த முயற்சி, உங்களால
மிகப்பெரிய வெற்றியை அடைந்ததற்கு இந்த கட்டுரை இரண்டாம் இடம் வந்ததே சாட்சி....
“சமூக விரோதிகளின் பிடியில் ஓரினச்சேர்க்கை தளங்கள்....”
இந்த
வருடத்தின் “மிக பாப்புலர்” பதிவு என்ற தகுதியை உங்களின் ஏகோபித்த ஆதரவோடு
“விலையில்லா இன்பம்” கதை பெற்றுள்ளது.... அபி என்கிற கால் பாய் தன் வாழ்வில்
சந்திக்கும் சுகங்களும், துக்கங்களும் தான் கதை... உங்களின் ஆதரவால் ஏற்கனவே
இரண்டாம் பாகத்தை பெற்ற இந்த கதை, இப்போது மூன்றாம் பாகத்தையும் நோக்கி
முன்னேறிக்கொண்டு இருக்கிறது என்பதை மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறேன்....
“விலையில்லா இன்பம்...” – சிறுகதை...
மேலும் இந்த ஆண்டுதான் உங்கள் விஜய் வலைப்பூவிற்கு “சிறந்த
வலைப்பூ” விருதும், எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் பாராட்டும் கிடைத்தது...
சிறுகதைகள் தளத்தில் என் சில கதைகள் வெளியானதின் மூலம், ஒருபால் ஈர்ப்பு சமூகத்து
கதைகளுக்கும் பொதுத்தளங்களில் அங்கீகாரம் உண்டு என்று நான் உணர்ந்த ஆண்டு....
உங்கள் ஆதரவும், ஊக்கமும், கனிவான கருத்துகளும் மட்டுமே இந்த வலைப்பூ அடையும்
ஒவ்வொரு “மைல் கல்” வளர்ச்சிக்கும் முக்கிய காரணம்... என்றைக்கும் உங்களின் ஆதரவை
மறவாத விஜயாக உங்கள் குரலை உலகிற்கு எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்பேன், நீங்கள்
உடன் இருக்கும் ஒரே தெம்போடு...
வலைப்பூவின் அத்தனை வாசக நண்பர்களுக்கும் எனது புத்தாண்டு
வாழ்த்துகளை தெரிவிப்பதோடு எனது சிரம் தாழ்ந்த நன்றியையும் செலுத்தி
விடைகொடுப்போம் 2013ஆம்
ஆண்டிற்கு....
இதோ வருகிறோம் புலிப்பாய்ச்சலோடு “2014”ஆம் ஆண்டே....!
advance happy new year anna. "vilai illa inbam-part3"kaga wait pandren. thank you anna. 2014-m aandil neenga innum sirappa elutha,melum uyara vaalthukal.
ReplyDeleteendrum anbudan .........ungal deepan
உன்னோட தொடர் ஆதரவுக்கும் நன்றி தம்பி.... விரைவில் விலையில்லா இன்பம் மூன்றாம் பாகம் வரும் தம்பி.... மிக்க நன்றி...
Deletevery happy to see this post...advance wishes nd praying god to get more good things in your life...
ReplyDeleteரொம்ப நன்றி சாம்.... ஸி.ஜி காலம் முதல் இன்று வரை தொடர்ந்து என் பதிவுகளோடு பயணித்து வரும் உங்களின் பங்களிப்பும் என் வெற்றிகளில் நிறைய இருக்கு நண்பா...
Deletefirst of all congratz na.. and i wish u a happy new year and may this year brings u many appreciations and awards.. Thank u and All the best..
ReplyDeleteரொம்ப நன்றி தம்பி... "தம்பியுடையான் படைக்கு அஞ்சான்"
Deleteனு சொல்வாங்க... உங்களை போன்ற தம்பிகள் இருக்கும்வரை என் பயணம் பயம் என்பது சிறிதும் இல்லாமல் பயணிக்கும் தம்பி....
Congz to vijay vickey..............
ReplyDeletei`m toooooooooooooo happy to see tis post......................
மிக்க நன்றி ஸ்ரீதர்.... சமீப காலங்களில் அதிக முறை "சிறந்த 5 கருத்து பதிவாளர்கள்" பட்டியலில் இடம் பெற்றவர் நீங்கதான்... அந்த அளவிற்கு இந்த வலைப்பூவில் மிகுந்த அக்கறையோடு வலம் வரும் உங்களுக்கும் எனது நன்றிகள் நண்பா...
Delete