Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Monday 23 September 2013

கலையுலக கடவுளுக்கு சமர்ப்பணம் - 100வது பதிவு....

                                            http://commons.wikimedia.org/wiki/File:Michelangelos_David.jpg 

(உங்கள் விஜயின் வலைப்பூவின் நூறாவது இடுகை இது..... இந்த நூறாவது இடுகையில் மைக்கேல் ஏஞ்சலோ அவர்களை பற்றி சொல்வதில் பெருமைப்படுகிறேன்.... இந்த பதிவு அந்த மேதையின் திறமைக்கும், பெருமைக்கும் சமர்ப்பணம்...)
பரபரப்பான  கடைத்தெருவில், ஒரு பிரம்மாண்டமான கடையின் வாசலில் ஒரு பாறாங்கல் வருவோர் போவோருக்கு இடைஞ்சலாக கிடந்தது... கடையின் முதலாளியோ, “யாராவது அந்த கல்லை எடுக்க மாட்டார்களா?” என்று பார்த்துக்கொண்டே இருந்தார்... ஒரு பாறாங்கல்லை எடுத்து தள்ளிப்போட அந்த பணக்கார கடைக்காரருக்கு, தன் தகுதி இடம் கொடுக்கவில்லை.... ஒருவழியாக அந்த கல்லை தான் எடுத்துக்கொள்ளலாமா? என்று ஒரு வழிப்போக்கர் கேட்க, வாய் முழுக்க புன்னகையோடு “சரி” சொன்னார் கடைகாரர்....
ஆறு மாதம் கழித்து, “புகழ்பெற்ற சிற்பி மைக்கேல் ஏஞ்சலோ அவர்களின் அழகான சிற்பம் ஏலம் விடப்படுவதாக” விளம்பரம் செய்யப்பட்டது... காண்பவரின் கண்களை மட்டுமல்ல, மனதையும் கொள்ளை கொள்ளும் பேரழகான கடவுளின் சிற்பம் அது... காண்போர் எல்லாம் வாய் பிழந்து அதிசயித்தனர்.... ஏலம் விறுவிறுப்பானது, மிகப்பெரிய தொகையை கொடுத்து சிலையை வாங்கினார் கடைகாரர்.... அந்த சிலையை செய்த சிற்பியை வாழ்த்திட கடைகாரர், ஏஞ்சலோவை தேடி போனார்... அப்போதுதான் அவரை முதலில் பார்க்கிறார் கடைகாரர், ஆனாலும் எப்போதோ பார்த்ததாக ஒரு ஞாபகம் அவருக்குள்...
“உங்க சிற்பம் ரொம்ப அழகா இருக்கு.... இவ்வளவு அழகான சிற்பம் செய்ய உங்களுக்கு கல் எங்கே கிடைக்கிறது?” என்றார் கடைகாரர்....
“உங்க கடை வாசலில்தான்” பொறுமையாக பதில் சொன்னார் மைக்கேல் ஏஞ்சலோ.....
இது மைக்கேல் ஏஞ்சலோ பற்றி, அவரின் சிற்ப நுணுக்கங்களை பாராட்டும்போது பலராலும் சொல்லப்படும் சம்பவம்....
புகழ் பெற்ற சிஸ்டைன் தேவாலயத்தின் மேற்கூரையில் ஓவியம் வரைய, அப்போதைய போப் ஆண்டவர் இரண்டாம் யூலியஸ் அவர்கள் ஏஞ்சலோ அவர்களை தேர்ந்தெடுத்தார்.... தான் அடிப்படையில் சிற்பி என்பதால், முதலில் மறுத்த ஏஞ்சலோ, பின்பு போப் அவர்களின் அன்பு கட்டளைக்கு ஒப்புக்கொண்டார்.... இறுதியில், பிரம்மாண்ட ஓவியங்கள், முப்பரிமான தோற்றத்தில் தேவாலயத்தை ஓவிய கண்காட்சி போல ஆக்கியது.... “இயேசுவின் கைகள் தீண்ட, ஆதாம் உயிர் பெற்ற” பைபிளின் காட்சி அது... அதனை பார்த்த அனைவரும் சொன்ன ஒரு வாக்கியம், “முதன்முதலில் ஆதாமை உயிர்ப்பித்தவர் இறைவன்... இரண்டாம் முறையாக அந்த ஆதாமிற்கு உயிர் கொடுத்தவர் மைக்கேல் ஏஞ்சலோ” என்றார்கள்... ஆம், அந்த ஓவியம் உட்பட அந்த தேவாலயத்தில் வரையப்பட்ட 340 ஓவியங்களும் உயிர்ப்புடன் காட்சி அளித்தது.....
இவருடைய ஒரு சலவைக்கல்லால் வடித்த சிற்பம்தான், பண்டைய உலக அதிசயங்களுள் ஒன்றாக கருதப்பட்டது என்பது ஒரு கொசுறு தகவல்......
இப்படி சிற்ப மற்றும் ஓவிய கலைகளில் நூற்றாண்டுகள் பல கடந்தாலும், இன்றளவிலும் அசைக்க முடியாத முதலிடத்தை பெற்றவர் நம் ஏஞ்சலோ என்பதை எவராலும் மறுக்க முடியாது....
ஏஞ்சலோ பற்றி இவ்வளவு சொல்ல காரணம் என்ன?... இல்லாமல் சொல்வேனா?... ஆம், மைக்கேல் ஏஞ்சலோ (Michelangelo di Ludovico Buonarroti Simoni) ஒரு “ஒருபால் ஈர்ப்பு” நபர்... அந்த ஒருபால் ஈர்ப்பு அவருடைய சிற்பம் மற்றும் ஓவியங்களிலும் பிரதிபலித்தது என்பதுதான் நாம் இன்னும் பெருமை கொள்ள வேண்டிய இன்னொரு அம்சம்....
இவருடைய சிற்பங்களில் காணப்படும் ஆண்கள் மிகவும் வீரத்துடன், ஆண்மை மிகுந்து காணப்பட்டனர்... இன்னும் சொல்லனும்னா, அவர் வடிக்கும் பெண்கள் சிற்பங்களுக்கு கூட மாடலாக ஆண்களைத்தான் பயன்படுத்தினார்... இவருடைய பல சிற்பங்களிலும் ஆணுக்கும், பெண்ணுக்கும் உள்ள வித்தியாசத்தை நீளமான முடியை வைத்து மட்டும்தான் கண்டுபிடிக்க முடியும்... அந்த அளவுக்கு ஆண்களின் உடல் மீது அவருக்கு மேலோங்கிய ஈர்ப்பு இருந்தது...
“காதலின் உன்னத நிலையை பெண்களால் உணர முடியாது... அந்த அளவிற்கு உயர்வான இதயம் பெண்களிடத்தில் இல்லை” என்று பெண்களை வெறுக்கும் அளவிற்கு, காதல் ஆண்களிடம் தான் இருப்பதாக அவர் நம்பினார்.... “ஏஞ்சலோ ஒரு ஆண் ஆதிக்கம் பிடித்தவர்.... பெண்ணடிமை தனத்தை ஆதரிப்பவர்” என்று அவர் மீதான எதிர்மறை கருத்துகள் கூட நிறைய சொல்லப்பட்டது உண்டு.... அதனால்தான் என்னவோ, தன் காதலை கூட ஆண்களிடம் தேடினார்....
ஆண்களின் நிர்வாணத்தை ஓவியத்துக்காகவும், சிற்பத்துக்காகவும் ரசித்து, வர்ணித்தே ஆண்களின் மீது ஏஞ்சலோவிற்கு ஈர்ப்பு வந்துவிட்டது என்று சிலர் கூறுவர்....
முதல் காதல் தன் நண்பரும், புகழ் பெற்ற மாடலுமான கெரார்டோ பெரிணி (gherardo perini) என்பவருடன் தொடங்கியது.... அந்த காதல் தோல்வி ஏஞ்சலோ அவர்களை மிகவும் சோர்வான நிலைக்கு தள்ளியது.... தன் வாழ்வின் மிகப்பெரிய துக்க காலமாக ஏஞ்சலோ கருதும் நாட்கள் அவை.... பின்பு தாமசோ என்பவர் நீண்ட காலத்திற்கு பிறகு ஏஞ்சலோவின் காதலரானார்.... உடல் தேவைகளை தாண்டி உணர்வு பூர்வமாக ஏஞ்சலோ  காதலில் திளைத்த நாட்கள் அவை....
தன் 63வயதில் , 47 வயதான விட்டோரியா என்ற இளம் விதவைபெண்ணுடன் காதலில் கலந்தார் ஏஞ்சலோ.... அவருடனான காதலுக்கு பிறகுதான் பெண்களை பற்றிய தன் எண்ணங்களை மாற்றிக்கொண்டதாக கூறப்படுவதுண்டு.... ஆனால், அதிலும் தன் நிலைப்பாட்டை முழுமையாக மாற்றிக்கொள்ளாத ஏஞ்சலோ, “நான் விட்டோரியாவிற்குள் இருக்கும் ஆண்மையைத்தான் காதலிக்கிறேன்” என்று தன் கருத்தில் முழுவதையும் பின்வாங்காமல் வாழ்ந்தார்....
ஏஞ்சலோ அவர்கள் தன் வாழ்க்கையை மிக ரகசியமாக வாழ்ந்தவர்.... தன் வாழ்நாளின் பெரும்பகுதியை வாய்ப்பேசிடாத சிற்பத்துடனும், ஓவியத்துடனும் கழித்தவர்.... அதிகம் மனிதர்களை நம்பாதவர்... அதனால், தான் இறக்கும் முன்பே தன்னை பற்றிய பெரும்பாலான ரகசியங்களை தீயிட்டு கொளுத்திவிட்டார்.... மேலும், அவர் வழித்தோன்றல்கள் கூட ஏஞ்சலோவின் ஒருபால் ஈர்ப்பு உணர்வுக்கான ஆதாரங்களை மேலும் மறைக்க முனைந்தனர்.... ஆனாலும், ஏஞ்சலோ எழுதிய, ஏஞ்சலோவுக்கு எழுதப்பட்ட காதல் கடிதங்கள் சில இன்றும் அவருடைய ஒருபால் ஈர்ப்பு எண்ணங்களுக்கு சான்றாக, ஆதாரமாக நம்மிடையே இருக்கிறது.... அந்த கடிதங்களில் அப்பட்டமாக ஏஞ்சலோ அவர்களின் ஒருபால் ஈர்ப்பு எண்ணங்கள் நமக்கு புலப்படும்... ஒரு கடிதத்தை படித்து, உள்வாங்கி கிரகிக்கும் தன்மை உடைய ஒவ்வொருவரும் அந்த கடிதத்தின் உணர்வுகளை நிச்சயம் புரிந்துகொள்வார்கள்....
ஏஞ்சலோ அவர்களின் சிற்பமும், ஓவியங்களும் இன்னும் எத்தனை காலத்துக்கு போற்றப்படுமோ, அத்தனை காலத்துக்கு அவருடைய ஒருபால் ஈர்ப்பும் அவருடன் பயணிக்கும் என்பதில் மாற்றமில்லை.... நல்லவேளையாக அவர் இந்தியாவில் பிறக்கவில்லை, பிறந்திருந்தால் பாலீர்ப்பு காரணத்தை வைத்தே அவருடைய சிற்பங்கள் உடைக்கப்பட்டிருக்கும், ஓவியங்கள் அழிக்கப்பட்டிருக்கும்.... “ஒரு மனிதரின் திறமையை அவருடைய செயல்களில் பாருங்கள், படுக்கை அறையில் பார்க்காதீர்கள்” என்பதுதான் இந்த ஹோமொபோபிக் சமூகத்துக்கு ஏஞ்சலோ அவர்கள் விட்டு செல்லும் உண்மை.....

12 comments:

  1. வாழ்த்துக்கள் விக்கி உங்களது இந்த தளம் 100வது
    பதிவை எட்டியதற்கு. நாம் அறிந்தடாத நல்ல தகவலை பதிந்தத்கு நன்றி. ஏஞ்சலோ அவர்களின் சிற்பமும், ஓவியங்களுக்கும் காரணம் அவர் ஓர்பால் மீது கொண்ட ரசனையின் வெளிப்பாடு தான். இங்கு பாலிருப்பால நம் பலருடைய திறமை வெளிபடுவதுமில்லை, வெளிப்பட்டாலும் அதற்குறிய அங்கிகாரமும்,அதை ஏற்றுக்கொள்ளும் மணநிலையும் நம் மக்களிடம் இருக்குமானுதெரியல. மனிதரின் திறமையை அவருடைய செயல்களில் பாருங்கள், படுக்கை அறையில் பார்க்காதீர்கள்-
    இதை மக்கள் புரிந்து மாற்றங்கள் வரும் எனும் நம்பிக்கையில் முன்னோக்கி செல்வோம். நன்றி விக்கி.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் ஆதரவுக்கும் மிக்க நன்றி சேகர்...

      Delete
  2. வாழ்த்துக்கள் விக்கி!

    ReplyDelete
    Replies
    1. நன்றி அண்ணாச்சி....

      Delete
  3. Really great nd informative vicky anna!!!

    ReplyDelete
  4. Great info...
    Kudos .....
    Congrats for 100th post... Special Kudos...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பா....

      Delete
  5. வாழ்த்துக்கள் அண்ணா..

    ( பி.கு: தாவீதன் சிற்பம் பற்றி சொல்லாமல் விட்டுவிட்டீர்களே..)

    ReplyDelete
    Replies
    1. நன்றிப்பா.... உண்மைதான்... தாவீது சிற்பம் பற்றி சொல்லவில்லை.... ஏஞ்சலோ பற்றி சொல்லிக்கொண்டே இருக்கலாம், இடம்தான் போதாது...

      Delete
  6. congrats vicky, all the best..........

    ReplyDelete