Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Tuesday 12 November 2013

கணினி அறிவியலின் தந்தை கடித்த "கடைசி ஆப்பிள்" - ALAN TURING துக்க வரலாறு...



    ன்றைக்கு கணினி என்பது நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது... முதன்முதலில் இந்த கணினி கண்டுபிடிக்கப்பட்டபோது, அதன் பயன்பாடு என்பது ஒரு கால்குலேட்டர் அளவாகவே இருந்தது... ஒருவேளை நான் இங்கே சொல்லப்போக்கும் ஒரு நபர் பிறக்காமல் இருந்திருந்தால், அந்த பெரிய அளவு கால்குலேட்டர் என்பது இன்றைக்கு நாம் பயன்படுத்தும் அதிநவீன அம்சங்கள் நிறைந்த கணினியாக மாறி இருக்குமா? என்பது சந்தேகமே... ஆமாங்க, கணினி அறிவியலின் தந்தையாக போற்றப்படும் ஆலன் மாத்திசன் தூரிங் (Alan Mathison Turing) என்பவர்தான் கணினி அறிவியலில் கருவாக கருதப்படும் செயற்கை அறிவை கணினிக்குள் புகுத்தியவர்... கணினி அறிவியலின் தந்தை மட்டுமல்லாமல், இவரின் கணித திறமை என்பது இன்றைக்கும் பலரும் அதிசயிக்கும் விஷயமாகவே பார்க்கப்படுகிறது... அவர் வாழ்ந்த நூற்றாண்டின் மிக சிறந்த கணினி மேதையும் கூட இவர்.... கணினி மொழியில் அவ்வளவாக பரிச்சயம் இல்லாத என்னை போன்ற ஒரு நபரால், தூரிங்கின் கணினி திறமையை பற்றி இதற்கு மேல் கூறிட முடியாது...
பிரிட்டனில் தன் பள்ளி கல்வியை இவர் கற்றபோதே, தூரிங்கின் திறமையை பள்ளி ஆசிரியர்கள் கண்டுபிடித்துள்ளனர்... ஆசிரியரை விட மாணவன் திறமை மிகுந்தவனாக இருந்தால், எந்த ஆசிரியரால்தான் அதை ஏற்கமுடியும்?... “தூரிங் எங்கள் பள்ளிக்கு சரிபட மாட்டான், அவனுக்கு பள்ளி பாடம் கற்பதிலெல்லாம் ஆர்வமில்லை” என்று அவர் பெற்றோரிடம் ஆசிரியர்கள் புகார் செய்துகொண்டிருந்த அதே நேரத்தில், ஆலன் தூரிங்கோ ஐன்ஸ்டினின் கூற்றை ஆராயந்துகொண்டு இருந்தார்... காசநோயால் தன் நண்பன் இறந்தபிறகு, தூரிங் ஒரு தீவிர இறை மறுப்பாளராக மாறிவிட்டார்... பள்ளியில் படிக்கும்போதே இவர் பகுத்தறியும் பக்குவம் நிறைந்தவராகவும், பாடத்திட்டத்தை தாண்டி சிந்திப்பவராகவும் இருந்ததில் தூரிங்கின் பெற்றோருக்கே ஆச்சரியம் தான்...
புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் கல்லூரி பயின்ற தூரிங், தனக்கு மிக பிடித்தமான கணித துறையில் முதன்மையான மாணவராக தேர்வானார்... அதன்பிறகுதான் தூரிங் மெஷின் அவரால் கண்டுபிடிக்கப்பட்டு புதிய பரிணாமம் வளர வழிவகுத்தார்... ஆம், இந்த தூரிங் மெஷின்தான் இன்றைய அதிநவீன கணினிகளுக்கான முதல் “அகரம்”...
அதுமட்டுமல்ல, தூரிங்கின் இன்னொரு முக்கியமான புகழை பற்றி சொல்லியே ஆகவேண்டும்... இரண்டாம் உலகப்போரில் தூரிங்கின் பங்கு பலரும் வியக்கும் ஒன்று.... தன் கணினி அறிவின் அடுத்தகட்ட பரிமாண வளர்ச்சியின் விளைவால் உலகப்போரில் தூரிங் மிகப்பெரிய அதிசயங்களை நிகழ்த்தினார்.... ஜெர்மன் நாட்டு மேதைகளால் வடிவமைக்கப்பட்டு, தங்கள் ராணுவ மற்றும் பாதுகாப்பு ரகசியங்கள் சங்கேத குறியீடுகளாக மாற்றப்பட்டு பரிமாற்றப்படும்... அத்தகைய சங்கேத குறியீடுகளை, அதன் உண்மையான உருவாக்கத்தை தூரிங் மிக அழகாக கண்டுபிடித்து ஜெர்மன் ராணுவத்தை நிலைகுழைய வைத்தார்... ஜெர்மன் நாட்டின் ராணுவம் இதனால் நிலைகுழைந்து போனது... தன் “கணினி அறிவு, கணித திறமை, அதீத புத்திசாலித்தனம்” இவற்றை இணைத்தது மூலமே  தூரிங்கால் “உலகப்போர் நாயகன்”ஆக உருவாக முடிந்தது...
தூரிங்கின் கணித திறமை, கணினி துறையின் பங்கு, உலகப்போரில் ஆச்சரியப்படுத்தியது போன்ற விஷயங்களை பற்றி இன்னும் நிறைய சொல்லலாம் என்றாலும், நான் சொல்ல வேண்டிய முக்கியமான விஷயம் கருதி இத்தோடு அவரின் திறமைகள் பற்றிய எழுத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன்..
தூரிங்கை பற்றி நான் இவ்வளவும் சொல்ல காரணம் என்ன?னு இதுவரை உங்களுக்கு புரியாமல் இருந்திருக்காது... ஆமாங்க, தூரிங் ஒரு “ஒருபால் ஈர்ப்பு நபர்”... அதுமட்டுமல்ல, தன் பலீர்ப்பால் மிகவும் கொடுமைகளுக்கு ஆட்படுத்தப்பட்ட உலகின் மிகப்பெரிய பிரபலம் இவர்தான்...
தன் நாற்பதாவது வயதில் தூரிங், 19 வயதான அர்னால்ட் முர்ரே (Arnold Murray) என்ற இளைஞனுடன் இணைந்து இல்லற வாழ்வு வாழத்தொடங்கினார்.... முர்ரேயின் நண்பர்கள் சிலரால் தூரிங்கின் வீடு களவு போனபோது, காவல்துறையில் புகார் செய்தார்... காவல்துறை விசாரணையில் வேறு வழியின்றி முர்ரே உடனான தன் உறவை பற்றி சொல்ல வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டார் தூரிங்.... விளைவு?... ஆம், ஆபத்து தூரிங்கின் பக்கம் திரும்பியது...
ஓரினசேர்க்கை சட்டப்படி குற்றமாகவும், அத்தகைய செயல்களில் ஈடுபட்டோர் கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்படுவதும் அன்றைய ஹோமொபோபிக் பிரிட்டனில் இயல்பான ஒன்றாக இருந்த காலம்... குற்றம் நிரூபிக்கப்பட்டு, தூரிங்கை நோக்கி இரண்டில் ஒரு தண்டனையை தேர்ந்தெடுக்குமாறு நீதிமன்றம் பணித்தது... “சிறை செல்கிறாயா? ஹார்மோன் சிகிச்சை எடுத்துக்கொள்கிறாயா?” என்பதுதான் அந்த இரண்டு வாய்ப்புகள்... தன் குடும்பத்தினரின் நிர்பந்தத்திற்கு இணங்கி, ஹார்மோன் சிகிச்சைக்கு தன்னை ஆட்படுத்திக்கொண்டார் தூரிங்.... அநேகமாக தூரிங், தன் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறே அந்த சிகிச்சைக்கு ஒப்புக்கொண்டதாகத்தான் இருக்கும்....
தூரிங்கின் காம உணர்வை குறைக்கும் சிகிச்சையாக ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அவருள் செலுத்தப்பட்டது... (அப்போதைய பிரிட்டன் அரசை பொருத்தவரை, ஓரின சேர்க்கை என்பது காம உணர்வு மிகுவதால் ஏற்படுகிறது என்று நம்பினார்கள்.. அதனால், அந்த காம உணர்வை கட்டுப்படுத்தினால் ஓரின சேர்க்கை எண்ணத்தை குறைக்க முடியும் என்று முட்டாள்த்தனமாக நம்பினார்கள்)... ஹார்மோன் சிகிச்சையின் விளைவால் தூரிங் தன் ஆண்மையை முழுமையாக இழந்தார்...
அதன் பிறகு சில மாதங்களில், தூரிங் தற்கொலையும் செய்துகொண்டார்... ஆப்பிள் ஒன்றில் சயனைட் விஷம் கலக்கப்பட்டு, அது ஒரு கடி கடித்ததோடு தூரிங் இறந்து கிடந்த காட்சி இன்றைக்கும் கணினி அறிவியலின் ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று மட்டும் உறுதியாக சொல்ல முடியும் (தூரிங்கின் நினைவாகவே இன்று பிரபலமாக நாம் விரும்பும் ஆப்பிள் நிறுவனத்தின் லோகோ “கடித்த ஆப்பிள்” வடிவமைக்கப்பட்டதாக “ஆப்பிள்” நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் கூறியுள்ளார்)...
ஹார்மோன் சிகிச்சை என்று சொல்லப்பட்டு செலுத்தப்பட்ட மருந்துகளின் விளைவால், உடலளவில் மட்டுமல்லாமல், மனதளவிலும் மிகுந்த பாதிப்புகளுக்கு உள்ளாகியிருக்கிறார் தூரிங்... அதன் விளைவாகவே தன் நாற்பத்தி இரண்டு வயதில் தற்கொலையை நாடி சென்றார் இந்த கணினி அறிவியலின் தந்தை...
அவர் இறப்புக்கு பிறகு தூரிங்கின் பெயரால் கொடுக்கப்படும் விருதுகள், அவர் புகழை நினைவூட்டும் சிலைகள், ஆலனின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம், அவரை அங்கீகரித்து பல்வேறு உலக அமைப்புகளும் கொடுக்கும் பாராட்டு அம்சங்கள் என எல்லாவற்றையும் சொல்லவேண்டுமானால், நிச்சயம் இன்னும் நான்கு பக்கங்கள் கூடுதலாக வேண்டும்...
ஆனால், இதை எல்லாவற்றையும் விட சமீப காலத்தில் பிரிட்டன் அரசு தன் மன்னிப்பை தூரிங் அவர்களுக்கு, தங்கள் நாட்டின் சட்டம் செய்த தவறை உணர்ந்து கேட்டதுதான் இவ்வளவு ஆண்டுகளுக்கு பிறகு தூரிங்கிற்கு கிடைத்திருக்கும் உண்மையான மரியாதை என்று சொல்லவேண்டும்... “அந்த அபாயகரமான தண்டனைக்கு தூரிங் ஆட்படுத்தப்பட்டதற்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” என்று இங்கிலாந்து உணர்ந்து சொல்ல, அந்நாட்டிற்கு ஐம்பது ஆண்டுகள் தேவைப்பட்டதுதான் கொடுமை..... காலம் கடந்து கேட்கப்படும் இந்த மன்னிப்பு தூரிங் என்ற ஒரு தனி மனிதனுக்கானது மட்டுமல்ல, தூரிங்கை போல அந்த “ஓரினசேர்க்கை எதிர்ப்பு சட்டத்தால்” பாதிக்கப்பட்ட மற்ற ஐம்பதாயிரம் நபர்களுக்கும் கொடுக்கப்படும் இறுதி மரியாதையும் கூட (அந்த ஐம்பதாயிரம் நபர்களில் பிரபல ஆங்கில எழுத்தாளர் ஆஸ்கர் வைல்ட்’உம் ஒருவர்)...
இன்னும் ஒருபால் ஈர்ப்பை சட்டத்தின்படியும், சமுதாயத்தின் பார்வையிலும் தவறாக கருதும் இந்தியா போன்ற நாடுகள்தான் இதை இன்னும் உணரவே இல்லை... அநேகமாக, இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகு, இப்போது பிரிட்டிஷ் அரசு கேட்கும் மன்னிப்பை போல, அப்போதைய இந்திய பிரதமர் கேட்பாரோ என்னவோ!... ஐம்பது ஆண்டுகளிலாவது அந்த மாற்றம் வந்தால் சந்தோஷமே!... வருமா?...


(கணினி அறிவியல் மற்றும் சங்கேத குறியீடுகள் பற்றியெல்லாம் எனக்கு புரியும்படி விளக்கிய நண்பர் ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு நன்றி!)

14 comments:

  1. really something new and interesting facts obtained from this article. continue to load more such articles

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி அண்ணா... அடுத்தவாரம் இன்னுமொரு சுவையான வரலாற்று பதிவை பதிகிறேன்...

      Delete
  2. படிக்க கஷ்டமாக இருக்கிறது...ஆனால் அவர் திறமை பிரமிக்க வைக்கிறது...இது உங்களின் சிறந்த பதிவில் ஓன்று...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சாம்...

      Delete
  3. மிக அழகான கட்டுரை, அறிவார்ந்த கருத்துகள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்தும் கூட அழகாக இருக்கிறது சஞ்சீவ்... நன்றி!

      Delete
  4. Something quite interesting (of course shocking)

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பா....

      Delete
  5. Replies
    1. ரொம்ப நன்றி மதன்....

      Delete
  6. Once again a wonderful article from you Vijay anna.. A worthy tribute to a genius, whose discoveries have impacts on day-to-day life even today! (As I comment in this post, I have to solve the CAPTCHA challenge, which is in turn based on one of Turing's discoveries, the Turing's test!!)

    But the Apple logo isn't for Turing's memory. Ofcourse, it might me the most miscontributed icon in the recent history and it has many legends most of which or not true.

    The important factor that gave suspicion to this "Turing Tribute" idea is that, the apple logo, when it took the current form (An apple with a bite taken), had multicolor stripes, which resembled LGBT rainbow flag. But, the true reason behind, as told by the company is, apple is the first multicolor user environment system (Others were all monochrome by then), and the multicolor stripes denote the ability to produce colors in the monitor.

    And the reason behind the bite is, just to distinguish the apple from cherry fruit, as told by the designer.

    The question, "Is the apple logo a tribute to Alan Turing?" is asked many times in many occations, to Steve Jobs and the designer of the logo. He didn't admit it ever, but once said, "It isn't, but I wish it should be".

    Ofcourse, Even if they designed it in the memory of a famous personality, they would not admit it. After all, the world is filled with homophobics and they wont want to displease them. Would they?

    ReplyDelete
    Replies
    1. நீண்ட நாட்களுக்கு பிறகு தம்பியின் கருத்தை கண்டத்தில் மகிழ்ச்சி... உமது நீண்ட கருத்துக்கும் நன்றிப்பா... ஆப்பிள் லோகோ பற்றிய சர்ச்சை உண்மைதான்... ஆனால், விக்கிப்பீடியாவில் கூட அது ஆலன் தூரிங்கின் நினைவாக வைத்திருப்பதாக எழுதிருக்காங்க... அதை வைத்துதான் இங்கும் நான் சொன்னேன்.... மீண்டும் உனக்கு நன்றிப்பா...

      Delete
  7. ஆப்பிள் லோகோவுக்ககு பின்னாடி ஒரு சரிததிர நாயகனின் வலியை உணர்த்திய இந்த பதிவுக்கு உங்களுக்கும் உங்கள் நண்பருக்கும் நன்றி விக்கி.

    ReplyDelete
  8. அருமையான பதிவு...நன்றி மணி(www.payilagam.com)

    ReplyDelete