Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Monday 18 November 2013

"தத்துவ மேதைகளின் சொல்லப்படாத தத்துவங்கள்.." - வரலாற்றை கொஞ்சம் புரட்டி பார்ப்போம்...


ஒரு விதையை விதைக்கிறோம். அது மண்ணுக்குள் தன்னை மறைத்துக் கொள்கிறது. அதற்கு நீரூற்றுகிறோம். காத்திருக்கிறோம். அது மெல்ல முளைக்கிறது. இலை விடுகிறது. தண்டு பெரிதாகிறது. கிளைகள் உருவாகின்றன. பூக்கள் உருவாகின்றன. கடைசியில் கனி தருகிறது!

இந்த பயணம் நீளமானது. ஒரு விதை விதைக்கப்படுவதற்கும், அது மீண்டும் கனிக்குள் விதையாய் நம் கையில் தவழ்வதற்கும் இடைப்பட்ட காலம் பெரியது!. பொறுமையுடன் காத்திருக்க வேண்டியது ரொம்பவே அவசியம். பொறுமை கசப்பானது. ஆனால் அது தருகின்ற கனியோ ரொம்ப இனிப்பானது…”

என்ன யோசிக்கிறீங்க?... இவன் என்ன திடீர்னு அரிஸ்டாட்டில் மாதிரி தத்துவமெல்லாம் பேசுறான்னா?... அரிஸ்டாட்டில் மாதிரியல்லாம் இல்லை, உண்மையாகவே இது அரிஸ்டாட்டிலின் தத்துவம்தான்... அதை ஏன் இங்க சொல்றேன்னு யோசிக்காதிங்க... உலகிற்கே தத்துவவியலை கற்றுக்கொடுத்த மாபெரும் தத்துவவாதிகளை பற்றித்தான் இப்ப நான் சொல்லப்போறேன், அதுக்குத்தான் ஒரு சின்ன பில்டப்!....
“சாக்ரட்டிஸ், பிளாட்டோ, அரிஸ்டாட்டில்” இந்த மூன்று நபர்களை தவிர்த்துவிட்டு, தத்துவவியலை பற்றி நாம எழுதினோம் என்றால், நிச்சயம் தொடங்கிய இடத்திலிருந்து நாம நகரவே முடியாது... அந்த அளவிற்கு “கிமு”வில் வாழ்ந்த இந்த மேதைகளின் தத்துவங்கள், இன்றளவும் நம்மால் தவிர்க்க முடியாத அறநெறிகளை தொகுத்து வழங்கிக்கொண்டு இருக்கிறது...

இந்த மூவருமே மேற்க்கத்திய தத்துவத்தின் நிறுவனர்கள் ஆவார்கள்... பிளாட்டோ தத்துவங்கள் மட்டுமல்லாது, கணிதவியலிலும் மிகசிறந்த வல்லுனராக அறியப்படுகிறார்... அரிஸ்டாட்டில் மிகச்சிறந்த இயற்பியல் கோட்பாடுகளை வகுத்தார்... நியூட்டனின் இயற்பியல் தத்துவங்கள், அரிஸ்டாட்டில் தத்துவங்களின் நீட்சி என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்... பிளாட்டோதான் உலகின் முதல் பெண்ணியவாதி... ஆம், இன்றைக்கு நாம பெண்களின் சுதந்திரத்தை பற்றி பேசிக்கொண்டிருக்கும் நிலையில், இத்தகைய சுதந்திரத்தை பற்றி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் சொன்னார் என்றால், ஆச்ச்சரியம்தானே?... “பெண்களை வீட்டிற்குள்ளேயே முடக்கி வைத்து, அவர்களின் திறமைகளை இந்த சமூகம் பாழாக்குகிறது.... ஆண்கள் செய்திடும் அத்தனை பணிகளிலும் பெண்களும் ஈடுபட வேண்டும்... பெண்களை உடல் ரீதியாக பலமானவர்கள் அல்ல என்று சொல்கிறார்கள்... அதுவும் தவறு... ஆண்களைவிட உடலாலும், மனதாலும் பலமான பக்குவப்பட்ட பெண்கள் நிறைய இருக்கிறார்கள்... அவர்களை இந்த சமூகம் தங்கள் முன்னேற்றத்திற்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்... கல்வி, வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்” என்று சொல்லும் பிளாட்டோவை நாம் வியந்து பார்க்கத்தான் தோன்றுகிறது!...
இந்த மூவரின் வாழ்க்கை குறிப்பை பற்றியோ, அவர்களின் தத்துவார்த்தமான கருத்துகள் பற்றியோ இனி நான் சொல்லப்போவதில்லை... இணையத்தில் அது நிறைய கிடைக்கிறது, இப்போ நாம நம்ம விஷயத்துக்கு வரலாம்... இப்போ உங்களுக்கு நான் இரண்டு சுவாரசியமான விஷயங்களை சொல்லப்போறேன்...

1.      நாம் மேற்சொன்ன மூவரும் ஆசிரியர் மாணவர்கள்... அதாவது, சாக்ரட்டிசின் மாணவர் பிளாட்டோ, பிளாட்டோவின் மாணவர் அரிஸ்டாட்டில்... அதுமட்டுமல்ல, அரிஸ்டாட்டிலின் மாணவர் மாவீரன் அலெக்சாந்தர்.....

இப்போ இரண்டாவது சுவாரசியம் சொல்லவா?..
2.      நான் மேற்சொன்ன நால்வரும் (சாக்ரட்டிஸ், பிளாட்டோ, அரிஸ்டாட்டில், அலெக்சாந்தர்) ஒருபால் ஈர்ப்பு நபர்கள்...

நான்காம் இடத்தில் இருக்கும் அலெக்சாந்தர் பற்றி நாம ஏற்கனவே தேவையான அளவு அலசிட்டதால, முதல் மூன்று இடத்தில் இருக்கும் தத்துவவாதிகளை பற்றி இப்ப பார்ப்போம்...

இவங்க மூவரும் ஒருபால் ஈர்ப்பினர் என்றாலும், எந்த ஒரு இடத்திலும் நேரடியாக அவங்க பாலீர்ப்பை பற்றிய அவர்களின் வாக்குமூலத்தை நாம் காணமுடியவில்லை... அதற்கு காரணம், அந்த மேதைகள் வாழ்ந்த காலத்தில் ஒருபால் ஈர்ப்பு என்பது சமூகத்தில் இயல்பாக பார்க்கப்பட்டது... பெண்ணுடன் உறவு கொள்வதை போல, ஆணுடனான உறவும் “ஆச்சரியமாக” பார்க்கப்படாத காலகட்டம்... ஆனாலும், சில இலைமறை காய்மறை விஷயங்களால் நாம் அதை அப்பட்டமாக உணரமுடிகிறது...
பிளாட்டோ எழுதிய “சிம்போசியம்” (Symposium) என்ற நூல் மிகவும் பிரபலமான ஒன்று... அது முழுவதும் உரையாடல்கள் நிறைந்த நூல்.. இருவரோ, ஒரு சபையினரோ சில விஷயங்களை பற்றி உரையாடுவதாக படைக்கப்பட்ட நூல்.... அதில் ஒரு இடத்தில், “ஓரினசேர்க்கை என்பது மக்களின் இயல்பான தினப்படி வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே இருக்கிறது... குறைந்தபட்சம் இந்த நிலைமை உயர்குடி மக்களிடத்திளாவது நாம் சகஜமாக பார்க்க முடிகிறது...” என்று கூறுகிறார் பிளாட்டோ...
சிம்போசியத்தில் ஒரு காட்சி... இரவு விருந்து நடக்கும் விசாலமான அறையில், ஆண்கள் மட்டுமே நிறைந்து காணப்படும் அரங்கம் அது.... அந்த அரங்கில் சாக்ரட்டிஸ் உட்பட பல மேதைகள் வீற்றிருப்பதாக காட்சி அமைக்கப்பட்டுள்ளது.... அதில் பேசும் ஒரு நபர், “காதல் கடவுளின் அருள்பெற்ற நபர்கள், ஆண்களையே காதலிப்பார்கள்... இயற்கையாகவே அந்த நபர்கள் ஆண்களின் மீதே ஈர்ப்பு கொண்டவர்களாக இருப்பார்கள்” என்று கூறுகிறார்....

அந்த அரங்கில் பேசும் சாக்ரட்டிஸ் கூட தன் காதலன் ‘அகோதான்’ பற்றி, “அவனுடனான காதல் என் வாழ்க்கையின் முக்கியமான ஒன்று” என்று குறிப்பிடுகிறார்... இத்தனைக்கும் சாக்ரட்டிஸ் திருமணமாகி, குழந்தையும் அந்த நேரத்தில் பெற்றிருந்தவர்....  மேலும், பிளாட்டோ வரைந்த ஒரு ஓவியமும் சாக்ரட்டிசின் பாலீர்ப்பை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியது... தன் ஆசிரியர் சாக்ரட்டிஸ் ஒரு இளைஞனுடன் உறவு கொள்ளும் காட்சி அது, அந்த தருணத்தில் அவர் தன் சுயநினைவை இழந்து, அதீத மனக்கிளர்ச்சியுடன் இருப்பதை போலவும் ஓவியம் தீட்டப்பட்டிருந்தது....

உலகப்புகழ் பெற்ற தத்துவ மேதைக்கு எதிரிகள் இல்லாமலா இருப்பார்கள்?... அந்த எதிரிகள், அவரை எதிர்க்க தங்கள் கையில் எடுத்த ஆயுதம் “சாக்ரட்டிசின் பாலீர்ப்பு”... மேலும், அந்த காலத்திலும் ஒருபால் ஈர்ப்பை தவறென சொல்லும் சில மக்களும் இருந்தார்கள்... சாக்ரட்டிசின் இத்தகைய செயல்களால் அவர்கள் வெறுப்படைந்தார்கள்... அவரை சட்டப்படி தண்டிக்க ஆட்சியாளர்களை நாடினார்கள்... ஆனால், சட்டமோ அதற்கு வழியில்லை என்று கை விரித்தது... ஆம், அந்த காலத்தில் ஒருபால் ஈர்ப்பை குற்றமாக சட்டம் பார்க்கவில்லை... உடனே, சாக்ரட்டிஸ் மீது ஒரு பொய் வழக்கு போடப்பட்டது... அதாவது, “சாக்ரட்டிஸ் ஏதன்ஸ் சிறுவர்களை பாலியல் தொழிலுக்கு உட்படுத்துகிறார்” என்கிற ஒரு ஜோடிக்கப்பட்ட வழக்கு அவர் மீது பாய்ச்சப்பட, எதிரிகளின் மனம் குளிர சிறையிலடைக்கப்பட்டார் சாக்ரட்டிஸ்....
இறுதியில் சிறையில் கொல்லப்பட்டு, பாலீர்ப்பு காரணங்களால் கொல்லப்பட்ட முதல் அறிஞராக (நாம் அறிந்தவரை) சாக்ரட்டிஸ் இன்றைக்கும் நம் மனதில் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்...

“ஒருபால் ஈர்ப்பால் குழந்தை பிறக்காது என்பது உண்மைதான்... ஆனால், அந்த குழந்தை தரும் மகிழ்ச்சியை போலவும், மேன்மையான உணர்வுகளையும் ஓரினகாதல்கள் நிறையவே கொடுக்கிறது...” என்று சொன்ன பிளாட்டோ, திருமணம் செய்துகொள்ளாமல் ஆண்களுடனான உறவை திகட்ட திகட்ட அனுபவித்த மேதை....
பிளாட்டோவின் ஓரின காதல் தான், அவருக்கு திருமணத்தின் மீதான மதிப்பை குறைத்துவிட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்... பெண்ணுரிமையை பற்றி வானளாவ பேசிய இந்த மேதை, தன் வாழ்வில் ஒருமுறை கூட பெண்ணுடன் காதல் கொள்ளவே இல்லை... அதுமட்டுமல்லாமல், பெண்ணுடனான காதலை பற்றி தன் நூல்களில் சிலாகித்து எழுதியதும் கூட இல்லை....

ஒருபால் ஈர்ப்பு பற்றி தன் வாழ்க்கையில் அனுபவித்தும், தன் நூல்களில் காதல்களை ரசித்தும் எழுதிய மேதை அரிஸ்டாட்டில்... இவரும் பிளாட்டோவை போலவே திருமணம் செய்துகொள்ளாமல், ஆண்களுடன் காதலில் திளைத்தவர்... தான் ரசித்த காதலை, பாத்திரங்களாக உருவாக்கி கதையில் புகுத்தி மற்றவர்களையும் ரசிக்க செய்தவர் இவர்... ஒருபால் ஈர்ப்பு காதலை நிறையவே கதைகளில் புகுத்தியவர் அரிஸ்டாட்டில்தான்...

இப்படி தத்துவ மேதைகள் தங்கள் வாழ்க்கை தத்துவமாக ஒருபால் ஈர்ப்பை இந்த உலகிற்கு கொடுத்து சென்றாலும், இன்றைக்கும் அதை ஒரு “முகம் சுளிக்கும்” விஷயமாக பார்க்கும் மக்கள் என்றைக்காவது நிச்சயம் உண்மைகளை புரிந்துகொள்வார்கள்.... இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் சொன்ன அரிஸ்டாட்டிலின் தத்துவத்தை போல, விதையை நாம் விதைத்துவிட்டோம், நிச்சயம் ஒருநாள் அது கனியாகி நம் பிள்ளைகளின் கையிலாவது தவழட்டும்!....

அரிஸ்டாட்டில் வாழ்வில் நிகழ்ந்த ஒரு சுவாரசியமான குட்டிக்கதையோடு, கட்டுரைக்கு முற்றுப்புள்ளியும் வைக்கிறேன்....
தத்துவமேதை அரிஸ்டாட்டிலைத் தேடி ஒரு இளம் வயதுப் பெண் வந்திருக்கிறாள். அப்பொழுது அவளிடம் வந்த காரணத்தை அரிஸ்டாட்டில் கேட்டபொழுது அதற்கு பதில் கொடுத்த அந்த பெண் எனக்கு ஒரு குழந்தை இருக்கிறது. எப்பொழுதில் இருந்து நான் என் குழந்தைக்கு நன்னெறி பயிற்சி அளிக்கத் தொடங்க வேண்டும் என்று கேட்டு செல்வதற்காகவே வந்ததாக கூறியிருக்கிறார். இதைக் கேட்ட தத்துவமேதை அரிஸ்டாட்டில் இப்பொழுது உங்களின் குழந்தைக்கு வயது என்ன ஆகிறது என்று கேட்க, அந்த பெண்ணோ 6 வயது ஆகிறது என்று பதில் கொடுத்திருக்கிறார். இதற்கு பதில் கொடுத்த தத்துவமேதை அரிஸ்டாட்டிலோ இப்பொழுதே உனது குழந்தையின் ஆறு வருடத்தை வீணாக்கி விட்டாய், இன்னும் தாமதிக்காமல் உடனே சென்று நன்னெறி பயிற்சி அளிக்கத் தொடங்கு என்று சொல்லி அனுப்பி வைத்தாராம்.”

நல்லா இருக்கா கதை?... அரிஸ்டாட்டில் சொன்னது போல, நீங்களும் தாமதிக்காமல் இந்த விஷயத்தை உங்க நண்பர்களுக்கு சீக்கிரம் “ஷேர்” செய்யுங்க!!!...

12 comments:

  1. interesting. this poses a question is it that most same sex lovers are super brainy or that super brainies are all same sex lovers?

    ReplyDelete
    Replies
    1. நன்றி அண்ணா... நீங்க கேட்கும் கேள்வி ரொம்ப சரியானது... உண்மைதான், கே நபர்கள் பொதுவாகவே புத்திசாலியாகத்தான் இருப்பார்கள்...

      Delete
  2. நம்பிக்கை தரும் தகவல்கள்...அவர்களின் திறமை பற்றி அறிந்திருந்தும் இப்போ தான் அவர்களின் பால்யிர்ப்பு பற்றி தெரியும்...மாற்றம் நடக்குமா தெரியல but படிப்பவர்கள் condfident உயரும்...வாழ்த்துக்கள் ...அருமையான தகவல்கள்

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி சாம்...

      Delete
  3. i like it vey much, but as sundar SGV said, i am also a same sex lover but i am not a super brainy :-)

    ReplyDelete
  4. நல்ல சரித்திரம், இது போன்ற செய்திகளை கேட்கும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இது போன்ற செய்திகளை ஊடகங்கள் மூலமாக பரப்பினால் அந்த கனி நாம் அடுத்தததலைமுறைக்கு முன்னதாக நம் கையீலே தவழ்த்தால் கூட ஆச்சிரியப்படுவதற்கில்லை...

    ReplyDelete
    Replies
    1. நன்றி கமல்... உண்மைதான்... ஆனால், நம் ஊடகங்கள் உண்மையை சொல்ல எப்போதும் முன்வருவதில்லை... டீ.ஆர்.பி ரேட்டிங் கண்ணோட்டத்தில் மட்டுமே அவங்க செய்திகளை பார்க்கிறார்கள்...

      Delete
    2. very intersting.,
      keep it up vijay

      Delete
    3. ரொம்ப நன்றி சஞ்சீவ்...

      Delete
  5. தன்னம்பிக்கை தரக்கூடிய தகவல்கள் விக்கி.
    நன்றி.

    ReplyDelete
  6. Super..!!! I am proud that i m being a gay,,!!!

    ReplyDelete
  7. I'm not a gay...but being a gay or lesbian is an individual's priority. ...so respect their feelings...same time forcing to be a gay is absurd

    ReplyDelete