Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Wednesday, 11 December 2013

"டேட்டிங்கில் பிஸியாக இருக்கும் நண்பர்களே, இனி உங்களுக்கும் ஆப்புதான்...! - கழுத்தை நெறிக்கும் 377...

இன்றைக்கு வெளியான உச்சநீதிமன்ற தீர்ப்பில், “ஓரினசேர்க்கை சட்டப்படி குற்றம்தான்... அதிகபட்சம் ஆயுள்தண்டனை கொடுக்கக்கூடிய குற்றசெயல்தான் அது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது....
நமக்கான சட்ட உரிமைக்கான கடைசி அஸ்திரமும் தோற்றுவிட்டது....
இதைப்பற்றி நண்பர்கள் பலரும் விரக்தியாக பேசிக்கொண்டிருக்கும்போது, ஒரு நண்பர் மட்டும் வித்யாசமாக கேள்வி ஒன்றை கேட்டார்...  எதற்காக இந்த உரிமைகள்? இப்பவே எனக்கு புடிச்ச பசங்களோட நான் ஜாலியாத்தான் இருக்கேன், இதுல சட்டமும் சமூகமும் எங்க வந்துச்சு?... நீங்க சொல்ற மாதிரி எல்லா கே’யும் இன்னொரு ஆணை திருமணம் செஞ்சுகிட்டு வாழணும்னு ஆசைப்படுறதில்ல, நாங்கல்லாம் பெண்ணை திருமணம் செய்து இயல்பான வாழ்க்கையை வாழவும், அப்பப்போ சந்தோஷத்துக்காக ஆண்களை தேடிப்போகவும்தான் விரும்புறோம்... இதை எதற்கு விஜய் உரிமை, அங்கீகாரம் போன்றல்லாம் பேசி பெரிதாக பேசுறீங்க?”னு என்கிட்ட கேட்டார், அதற்கான முக்கியத்துவத்தை பற்றி இப்போ பேசவேண்டிய அவசியத்தில் நான் உள்ளேன்.... இது ஏதோ அமைப்புகளுக்கான தோல்வி என்று கருதி, தங்கள் டேட்டிங்கில் பிஸியாக இருக்கும் நபர்களுக்கும் இந்த கட்டுரை பதில் சொல்லும்....
அவர் சொன்ன ஒரு வாக்கியத்தை நான் குறிப்பிட விரும்புறேன்....
////// நீங்க சொல்ற மாதிரி எல்லா கே’யும் இன்னொரு ஆணை திருமணம் செஞ்சுகிட்டு வாழணும்னு ஆசைப்படுறதில்ல, நாங்கல்லாம் பெண்ணை திருமணம் செய்து இயல்பான வாழ்க்கையை வாழவும், அப்பப்போ சந்தோஷத்துக்காக ஆண்களை தேடிப்போகவும்தான் விரும்புறோம்.../////
நண்பர் சொன்ன இந்த வார்த்தைகளிலேயே அவருக்கான பதிலும் இருக்கிறது.... அவர் சொல்வதை போல எல்லா கே’க்களும் பெண்களை திருமணம் செய்துகொண்டு, சந்தோஷத்துக்கு ஆண்களை தேடிப்போக விரும்புவதில்லை.... வாழ்க்கை முழுக்க ஆணுடன் மட்டுமே வாழும் ஒற்றை வாழ்க்கையை விரும்பும் கே’க்களும் இருக்குறாங்க என்பதை அந்த நண்பரே புரிந்துகொண்டுதான் இருக்கிறார், அப்படிப்பட்ட நபர்களுக்காக கே திருமணத்திற்கான சட்ட ரீதியான அங்கீகாரத்தை கேட்பது எப்படி தவறாகும்?... மேலும் அந்த நண்பர் “இயல்பான” வாழ்க்கையாக பெண்ணை திருமணம் செய்துகொள்வதை குறிப்பிடுகிறார், அவர் மனதில் ஆணை திருமணம் செய்துகொள்வது இயல்பை மீறிய விஷயமாக தோன்றி இருப்பதன் வெளிப்பாடுதான் இந்த கேள்வியின் காரணம்.... நான் பல இடங்களிலும் குறிப்பிட்டதை போல ஒரு “Bisexual” நபரால் அப்படிப்பட்ட இரட்டை வாழ்க்கையை அதிக சிரமமில்லாமல் வாழமுடியும்... இப்படி உரிமைகள் வேண்டாம் என்று மறுக்கும் அனேக நபர்கள் பைசெக்சுவல் நபர்களாகத்தான் இருப்பார்கள்.... அதே நேரத்தில் ஒரு கே நபரால் நிச்சயமாக ஒரு பெண்ணுடன், அவர் சொல்லும் அந்த இயல்பான வாழ்க்கையை வாழமுடியாது... அந்த குறிப்பிட்ட நபர் மட்டும் அல்லாமல், அவர் மனைவி என்கிற ஒரு பாவமும் அறியாத ஒரு பெண்ணும் இதன்மூலம் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது....
மேலும் ஒரு கே’யின் உரிமையில் யாராலும் தலையிட முடியாதல்லவா? அப்படிப்பட்டவர்களின் உரிமைக்காக குரல் கொடுப்பது தவறா?....
இவ்வளவு நேரமும் கே திருமணங்கள் பற்றி மட்டுமே பேசிவிட்டேன்... இங்க பலருக்கும் நான் சொன்ன சட்ட மற்றும் சமுதாய அங்கீகாரம் என்கிற விஷயம் “திருமணம்” என்ற வார்த்தையை சுற்றியே சுழல்வதை கவனித்திருப்பீர்கள்....
“சரி, திருமணம் செய்வதற்காக அவர்கள் போராடட்டும், நான் ஏன் போராடனும்?”னு சிலர் கேட்கலாம்.... ஜாலியாக இருக்க சட்ட உரிமை தேவையில்லை என்று சொல்லும் நபர்களுக்காக கீழே அவர்களுக்கான போராட்டத்தின் அவசியத்தை பற்றி  குறிப்பிடுகிறேன்...
ஆனால் நாம் கேட்கும் சட்டம் மற்றும் சமுதாய அங்கீகாரம் என்பது திருமணத்தை தாண்டிய பல விஷயங்களையும் தனக்குள் கொண்டுள்ளது என்பதையும் நீங்கள் அறியவேண்டும்....
ஓரினசேர்க்கையை குற்றங்களின் பட்டியலில் வைத்திருப்பது வரை, இங்கே நண்பர் சொன்னபடி “ஜாலி”க்கு ஆண்களை தேடிப்போவதிலும் ஆபத்து இருக்கிறது....
ஜாலிக்காக செல்லும் பல நண்பர்களும் தங்கள் பணம், பொருள், உடமைகளை இழந்தது பற்றி நானும், பாதிக்கப்பட்ட நண்பர்களுமே பல இடங்களிலும் நிறைய எழுதி இருக்கிறோம்.... பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் இதை படிக்கும் பலர் கூட இருக்க வாய்ப்புண்டு... அப்படிப்பட்ட நபர்களின் உடமைகள் திருடப்பட்டும், மிரட்டப்பட்டும் கூட ஏன் பாதிக்கப்பட்ட நபர்கள் காவல்துறையை அணுகவில்லை?... அதற்கு காரணம் சட்டம் நமக்கு எதிராக உள்ளது என்பதுதான்... திருட்டை பற்றி நாம் புகார் கொடுக்கப்போய், அது மீண்டும் ஓரினசேர்க்கை புகாராக நம் மீதே திருப்பி தாக்கிடும் ஆபத்து இருக்கிறது என்பதை நீங்கள் உணர்கிறீர்களா?... குறைந்தபட்சம் சட்ட ரீதியான உரிமைகள் கிடைக்காதவரை இப்படிப்பட்ட ஒருபால் ஈர்ப்பினர் மீதான வன்முறைகளும் நிச்சயம் குறையாது....
அதுமட்டுமல்லாமல் நாளைக்கே நீங்களும், இன்னொரு ஆணும் “ஒன்றாக” இருப்பதை காவல்துறை கண்டுவிட்டால், ஆபத்து உங்களை தேடி வரலாம்... இனி ஜாலியாக மெரீனா ஸ்விம்மிங் பூலில் ஜல்சா செய்ய முடியாது, திரையரங்கங்களில் இருட்டு காட்சிகளை அரங்கேற்ற முடியாது.... அப்படி செய்தால், உங்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டு, நீங்களும் ஆயுள் தண்டனை கொடுக்கும் அளவிற்கான தண்டனையை பெற வாய்ப்பிருக்கிறது....
சமீபத்தில் நடந்த இரண்டு கொலைகளை பற்றி நான் கட்டுரை எழுதி இருந்தேன்... எப்போது கொலைசெய்யப்பட்டவர்கள் மீது “ஓரினசேர்க்கையாளர்” என்கிற சாயம் பூசப்பட்டதோ, அப்போதிலிருந்து வழக்கு திசைமாறிவிட்டது... கொலை செய்தவர்கள் அப்பாவிகளை போலவும், கொலையுண்டு இறந்தவர் ஒரு காமக்கொடூரன் போலவும் இந்த ஊடகங்கள் தங்கள் ஹோமொஹோபிக் எண்ணங்களை உமிழத்தொடங்கியது.... இறந்தும்கூட அந்த நபர்கள் பாவத்தை சுமக்கும் நிலைக்கு காரணம், நமக்கான அங்கீகாரம் இல்லாத ஒரே காரணம்தான்....
தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் தெஹல்கா தருண் தேஜ்பால் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை அரசியல் கட்சிகள் முதல் ஊடகங்கள் வரை மறுத்து, தருண் தேஜ்பாலுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதை நாம் காணமுடிகிறது... அதே நேரத்தில் சில மாதங்களுக்கு முன்பு ஓரின சேர்க்கை புகாருக்கு உள்ளான ராகவ்ஜி நிலைமை என்ன ஆனது? என்பதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்.... “தருண் தேஜ்பால் மீது ஒரு பெண் பாலியல் புகார் சொன்னார், ராகவ்ஜி மீது ஒரு ஆண் பாலியல் புகார் சொன்னார்” என்பதை தவிர இரண்டு புகார்களுக்கும் பெரிய வேறுபாடு இல்லை.... ஆனால், தருண் தேஜ்பால் இப்போதும் நல்லவர் இமேஜோடு இருக்கிறார், முதுபெரும் அரசியல்வாதி ராகவ்ஜி அரசியலிலிருந்து ஓரங்கட்டப்பட்டு முகத்தை மறைத்து வாழ்கிறார்....
இது ஏதோ ஒரு ராகவ்ஜி’க்கு இழைக்கப்பட்ட கொடுமை இல்லை... இந்த கட்டுரையை படிக்கும் எத்தனையோ பேர் நாளைக்கு மிகப்பெரிய நிறுவனங்களுக்கு அதிபதி ஆகலாம், அரசியலில் கலக்கலாம், இலக்கிய மேதைகளாக உருவெடுக்கலாம், பிரபலங்கள் வரிசையில் இடம்பெறலாம்... அப்போது உங்கள் ஒட்டுமொத்த இமேஜையும் ஒரு நிமிடத்தில் சுக்குநூறாக உடைக்க, இந்த ஓரினசேர்க்கை அஸ்திவாரத்தை உங்கள் எதிரிகள் கையாளக்கூடும்.... யாரோ ஒரு பெண்ணுடன், அவள் விருப்பத்துடன் உறவு கொண்டால் சாமியாராகவே இருந்தாலும் சட்டப்படி தண்டனை கிடையாது என்பதை “நித்திய” நிகழ்வுகளின் மூலம் நான் அறிவோம்.... அதேநேரத்தில் ஒரு ஆணுடன் நீங்கள் உறவில் அவர் விருப்பத்தோடு ஈடுபட்டாலும் கூட உங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டிய நிற்பந்தத்தில்தான் இந்த சட்டங்கள் இருக்கிறது.... இப்படிப்பட்ட ஆபத்துகளில் இருந்து உங்களை தற்காத்துக்கொள்ளவாவது உங்களுக்கு சட்ட ரீதியான உரிமை தேவை இல்லையா?...
நீங்கள் “இயல்பாக” ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு “ஜாலி”க்காக ஆணை தேடி செல்வதற்கு எந்த சட்டமும், சமுதாயமும் சம்மதம் தெரிவிக்க தேவையில்லை தான்... ஆனால், நாளைக்கே அந்த ஜாலியான விஷயம் உங்கள் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் நிர்மூலமாக்கக்கூடும் என்பதையும் நீங்கள் மனதில் நிலைநிறுத்தினால், நான் கோரும் “உரிமைகள்” “அங்கீகாரங்கள்” போன்றவற்றுக்கான காரணம் உங்களுக்கு புரியவரும்...
இதுநாள் வரை வழக்கு நிலுவையில் இருந்த காரணத்தால், காவல்துறை நம் மீதான அடக்குமுறைகளை கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கலாம்.... ஆனால், வெளியான இந்த தீர்ப்பால், நிச்சயம் நம் மீதான வன்கொடுமைகள் சட்ட ரீதியாக அரங்கேற இருக்கிறது என்பதை மட்டும் உணருங்கள்....
ஒரு ஆணும் ஆணும் திருமணம் செய்து, குழந்தையை தத்தெடுக்க மட்டும் நான் உரிமைகளை கோரவில்லை என்பதையும், அது நம் பாதுகாப்பிற்கான அடித்தளம் என்பதையும் நீங்கள் உணர்ந்திருப்பீர்கள் என்பதை நான் நம்புகிறேன்... இனியாவது, இப்படிப்பட்ட உரிமைகளில் உங்களுக்கும் தொடர்பிருப்பதை உணர்வீர்கள் என்றும் நம்புகிறேன்.... இனி உங்கள் பாதுகாப்பிற்காகவாவது போராடுபவர்களின் பக்கம் துணை நில்லுங்கள் நண்பர்களே!... டேட்டிங்கை கொஞ்சம் ஒதுக்கிவைத்துவிட்டு, குறைந்தபட்சம் போராட்டத்திற்காவது ஆதரவை அளியுங்கள்....

12 comments:

  1. அன்பு விஜய் உங்கள் மின்னல் வேக கட்டுரை பலே. தீர்ப்பு அறிவித்த சில மணிக்குள் கட்டுரை பதிவு செய்து உள்ளீர்கள்.
    இதில் நீங்கள் சொல்வதை போல சும்மா ஜாலிக்காக கூடும் மக்களுக்கு இந்த போராட்டத்தின் நியாயம் புரியாது. நான் கூட நினைத்ததுண்டு சட்டம் அனுமதிக்காத போதும் நாம் கூடிக்கொண்டு தானே இருக்கிறோம் . இப்போ சட்டம் போட்டு என்ன ஆக போகிறதென்று. காரணங்கள் அழகாக உரைக்கப்பட்டுள்ளது . மிக நன்று.
    இங்கு நான் ஒன்று சொல்லிக்கொள்ள ஆசைபடுகிறேன் . இந்த தீர்ப்பில் ஒரு நீதிபதி கூறியதாவது. "377 வது சட்டத்தை முழுமையாக நீக்க முடியாது . அது சிறார்களுக்கு எதிரான பாலியியல் வன்முறைக்கு ஆதரவாக பொய் விடும். நாம் செய்யவேண்டியது 377 வது சட்டத்தின் வாக்கியங்களை மிக கவனமாக ஆராய்ந்து அதை திருத்து வது thaan "என்று கூறியுள்ளார்.
    இதனால் 377 சட்டம் மாறினால் நாம் அதிலிருந்து விடிவிக்கபடுவோம் என்ற நம்பிக்கை பிறக்கிறது. நம்பிக்கையோடு காத்திருப்போம்.

    ReplyDelete
    Replies
    1. இது எதிர்பார்த்த தீர்ப்புதான் என்பதால், கட்டுரையின் சாராம்சத்தை யோசித்து வைத்திருந்தேன் அண்ணா.... நீங்கள் சொல்வதைப்போல சட்டப்பிரிவில் திருத்தம்தான் கொண்டுவரவேண்டுமே தவிர, நீக்கக்கூடாது.... அதைப்பற்றி புதிய கட்டுரையில் குறிப்பிட்டு இருக்கிறேன் அண்ணா...

      Delete
  2. wat the hell is gng...?? y they again criminalized the homosex... i totally upset.. I hate this country and its vertics... really disappointed...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கோபம் ரொம்ப நியாயம் தம்பி.... என்ன செய்வது?... நம்மை சுற்றி அவ்வளவு புத்திசாலிகள் இருக்கும்போது...

      Delete
  3. such a wonderful judgement on a beautiful day ! on Bharathi's birthday ! Yeah this is what Bharathi expected and worked for throughout his life ( freedom in all dimensions of life ) it is such a beautiful birthday gift to him.

    yeah, since homosexuality is a disease and it should be cured, we demand the central government ( which they have safely stored in swiss bank ) to give each one of us rs. 1,00,000 to cure this illness. Let us see then. Bull shit people of all kind. this is a basic idea of humankind.

    I could only wonder about this when a country like india which has a rich history in experiencing sexuality of all kinds ( standing proof : kama sutra and other books on the same topic ) brings up THE MOST STUPID OF DECISIONS EVER.

    intha nadu than uruppada poguthakum, nalla vallarasayi kilikka poguthu. If this is unnatural, why nature created this ?

    Vicky na, Isn't there any substantial research proof ( What I mean is a proper research paper or something ) to show them that is caused by birth and CANNOT BE CURED ? Answer me when you have time !

    ReplyDelete
    Replies
    1. Niraiya proof irukku boss!! naanum padichiruken!! enakku kidiacha kandippa share panren!!! unga posts la neenga sonnathu pola ippovum idathu kaila ezhuthura kuzhandaiya adichu valathu kaikku maathura petror irukka samoogam than nammodathu!!! It happened to my cousin when he was young!!! But now, his son who is now 6 years old also writes with his left! And when i went to visit my anna and saw his son writing in the left, i smiled at my bro and said "santoshama irukkuna! un paiyanavathu idathu kai pazhakkam udaiyavanu nee yethukkitiye en mama mathiri avana adikaama" nu!! And he said, "science valarnthuduchu da"
      Ithey than boss namakkum venum!!! en paiyan gay apdinguratha normal ah accept pannikura kaalam varum! varanum!
      I will get the articles if i gind ma!! Vicky anna neengalum kidaicha post pannunga!

      Delete
    2. சந்திரன் சொல்வதை போல நிறைய ஆதாரம் இருக்கு ரெமோ..... எபிஜீன் என சொல்லப்படும் மரபணு காரணி தான் இதற்கு காரணம், இது கருவில் இருக்கும்போதே தீர்மானிக்கப்பட்ட ஒன்று என்று சமீபத்தில்கூட ஒரு ஆய்வில் கண்டுபிடிச்சிருக்காங்க.... ஆனால், இதையெல்லாம் ஏற்கும் மனநிலையில் நம்ம சட்டமும், அரசும் இல்லை...

      Delete
  4. எதுவும் உடனே கிடைத்து விடுவதில்லை...நீங்கள் சொல்லும் ஜாலிக்காக மட்டுமே இருக்கும் நபர்களால் உணர்வை புரிந்து கொள்ள முடியாத விஷயம்...யாரையும் எளிதில் புரிய வைக்க முடியாது...செக்ஸ் மட்டும் தேவை என்று கண்ட இடத்தில்,இதில் முக்கியமாக கே இல்லாதவர்களே அவர்களைப் பயன் படுத்துவதாக எனக்கு தோன்றுகிறது...தெளிவாக இருந்து இதை தவிர்த்தாலே பாதி வெற்றி கிடைக்கும்...எல்லா புராணங்களிலும் ஒரு பிரம்மச்சாரி தான் யாராலும் வெல்ல முடியாத பாத்திரமாக படைக்கப்பட்டிருக்கிறது...திறமையும் ஒழுக்கமாகவும் இருந்தால் நம்மை யாரும் ஒதுக்க முடியாது...சட்டம் மட்டுமே தீர்வு ஆகாது...நம் நடவடிக்கையில் உயர்ந்த மாற்றம் வந்தாலே சட்டம் தானே மாற்றப் படும்...தத்து எடுக்கும் உரிமை நல்ல விஷயம்தான்...அந்த குழந்தைக்கு நம்மால் நல்ல பெற்றோர் என்ற தன்னம்பிக்கை தரும் விதமான சூழ்நிலை இப்பொழுது இல்லை என்றே எனக்கு தோன்றுகிறது...நாம் நம்மை பற்றிய எண்ணங்களை மற்றவர்கள் புரிந்த பிறகே இதில் முழுமையாக வெற்றி பெற முடியும்...sorry if I hurt your feeling...but in real life first we have to prove ourself to get a respect from others and then only we can give a child a good nd comfortable life...

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொல்றது சரிதான் சாம்... ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக மேலெழும்பி வந்த சமுதாயம் கூட, இந்த தீர்ப்பால் பின்னோக்கி யோசிக்க தொடங்கிவிடுவார்கள்.... மதவாதிகள் இன்னும் தங்கள் கருத்தில் பிடியாக இருப்பார்கள்.... இதெல்லாம் நம் மனதை கொஞ்சமாவது மாற்றிட, இப்படிப்பட்ட சட்ட உரிமையும் தேவைதான் நண்பா.... ஆனால், சட்ட உரிமை மட்டுமே போதும் என்று நானும் சொல்லவரவில்லை....

      Delete
  5. romba kastama irukuthu thozharae

    en veetai kooda samalithu vida mudium pola, aanal inda naattai samalipadhu tan kastam pola...

    ReplyDelete