Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Thursday 19 December 2013

அரசியலாக்கப்படும் ஓரினச்சேர்க்கை விவகாரம்....



ம் நாட்டில் மட்டும்தான் சட்டங்களை குற்றங்களுக்காக பயன்படுத்துவதை விட, அதிகமாக பழிவாங்கிட பயன்படுத்தும் நூதன முற்போக்குத்தனம் வெகுநாட்களாக இருந்து வருகிறது....

அதிலும் குறிப்பாக “கஞ்சா வழக்குகள், நில அபகரிப்பு வழக்குகள்”போன்றவை அரசியல் மற்றும் தொழில் ரீதி எதிரிகளை பழிவாங்குவதற்காகவே கண்டுபிடிக்கப்பட்ட ஸ்பெஷல் வழக்குகள்... ஆனால், இந்த பட்டியலில் “ஓரினச்சேர்க்கை” வழக்குகளும் இவ்வளவு சீக்கிரமாக இணையும் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை....

“அமெரிக்க தூதரக அதிகாரிகள் யாரெல்லாம் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுகிறார்களோ அவர்களையெல்லாம் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பு அதற்கு பக்க பலமாக இருக்கும். இந்திய அரசு இதை உடனடியாக செய்ய வேண்டும். கம்பானியன் என்ற பெயரில் பல அமெரிக்க தூதரக அதிகாரிகள் ஓரினச் சேர்க்கையில்தான் ஈடுபடுகின்றனர். இவர்களை ஒழிக்க இப்போது சரியான நேரம் கிடைத்துள்ளது” இப்படி பொன்மொழிகளை உதிர்த்தவர் யாரோ ஒரு சாதாரண நபர் இல்லை... முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும், பாஜகவின் முக்கிய தலைவர்களுள் ஒருவருமான யஸ்வந்த் சின்ஹா தான் இப்படிப்பட்ட ராஜதந்திரமான யோசனையை அரசுக்கு முன்வைத்துள்ளார்... மேலும், தூதரக அதிகாரி ஒருவர் கூட இந்த செய்தியை உறுதி செய்யும் வகையில் சில கருத்துகளை கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.... மேலும் “அமெரிக்க தூதரக அதிகாரிகளில் யாரெல்லாம் ஓரினச்சேர்க்கையாளர் என்கிற பட்டியல் எங்களிடம் இருக்கிறது...” என்று அதிகாரி ஒருவர் கூறியுள்ளதை பார்க்கும்போது சிரிக்கத்தான் தோன்றுகிறது...

“சரி, இதில் உனக்கென்ன கவலை?... அமெரிக்கக்காரனுக்கு நீ ஏன் வக்காலத்து வாங்குகிறாய்?” என்று சிலர் என்னை கேட்கலாம்... இந்திய துணைத்தூதர் ஒருவரை, விசா குளறுபடிகள் காரணமாக அமெரிக்க அரசாங்கம் கைது செய்துள்ளது... இதற்கு பதிலடி தரும் விதமாகவே, இந்தியாவிலும் அமெரிக்க தூதரகத்துக்கு கொடுக்கப்பட்ட சிறப்பு சலுகைகள் வாபஸ் பெறப்பட்டுள்ளது.... இதன் தொடர்ச்சியாகவே அமெரிக்க தூதரக அதிகாரிகளை “ஓரினச்சேர்க்கை” வழக்கில் கைது செய்ய வேண்டும் என்கிற வாதம் சிலரால் முன்வைக்கப்படுகிறது... சரி, நான் “இந்திய அரசு பழிவாங்கக்கூடாது” என்றல்லாம் சொல்லவில்லை, அந்த வாதத்திற்கு உள்ளும் செல்ல விரும்பவில்லை.... இப்போது நான் எழுப்பும் கேள்வி, “பழிவாங்கிட எதற்காக “ஓரினச்சேர்க்கை” அஸ்திரத்தை கையில் எடுக்கிறீர்கள்?” என்பதுதான்... இப்போது அமெரிக்கக்காரர்களை அச்சுறுத்த பயன்படுத்தப்படும் இந்த ஆயுதம், நாளை அரசியல் ரீதியாக நம்மவர்களை தாக்கும் ஆபத்து அப்பட்டமாக இருப்பதை நான் சொல்லித்தான் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்கிற அவசியம் இல்லை... 

இன்றைக்கு கஞ்சா வழக்குகள் மூலமாக அரசியலில் எதிரிகள் பழிவாங்கும் நிகழ்வுகளை நான் சொல்லி தெரியவேண்டிய அவசியம் இல்லை, நில அபகரிப்புகள் எந்த அளவில் அரசியலில் கையாளப்படும் ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது? என்பதை நித்தமும் வெளியாகும் செய்திகளில் நீங்கள் அறிந்துதான் இருப்பீர்கள்... இதன் தொடர்ச்சியாக ஒருபால் ஈர்ப்பையும் அரசும், ஆளும் வர்க்கமும், தொழில் அதிபர்களும், பண முதலைகளும் தங்களுக்கு ஆதரவாக பயன்படுத்தும் ஆபத்து இருப்பதை கண்டுதான் நான் அஞ்சுகிறேன்....

இன்னும் சில மாதங்களில் ஆட்சி மாற்றம் ஏற்படப்போவதற்கான அறிகுறிகள் தெரிந்திருக்கும் இந்த தருணத்தில், ஆட்சி பீடத்தில் ஏற வாய்ப்பிருக்கும் கட்சி சட்டப்பிரிவு 377இல் எத்தகைய உறுதிப்பாடு பூண்டுள்ளது? என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்... “மந்தியின் கையில் மலர் மாலையாய்” இந்த சட்டம் உருமாறும் நிலை வந்தால் எக்காலத்திலும் ஒருபால் ஈர்ப்பினருக்கான விழிப்புணர்வும், உரிமையும் கிடைக்கும் வாய்ப்பே வராதோ? என்கிற அச்சமும் எனக்குள் எழுகிறது....

“எதிரியை பழிவாங்க பாலீர்ப்பு ஆயுதமா?” என்பதை ஒரு நிமிடம் சிந்தித்து பார்க்க வேண்டும்...

இப்போது மெளனமாக இதை வேடிக்கை பார்க்கும் அரசியல் கட்சிகளின் மீதும், அரசியல்வாதிகள் மீதும், இதே ஆளும் அரசுகள் நாளைக்கு இந்த சட்டத்தை பாய்ச்சும்போது, அப்போதும் நாம் மௌனியாக இருந்து வேடிக்கைதான் பார்க்கவேண்டும் என்கிற நிலைக்கு நம் எல்லோரையும் தள்ளிவிடாதீர்கள்...

இங்கே “ஓரினச்சேர்க்கை கலாச்சாரத்திற்கு விரோதமானது” என்கிற முத்தான கருத்தை உதிர்க்கும் சில கட்சிகளுக்கு நான் ஒன்றை தெளிவாக சுட்டிக்காட்ட விரும்புகிறேன்....
நீங்கள் உங்கள் மீது கலாச்சார சாயத்தை பூசி, வாக்கு வங்கி அரசியல் வழியாக இந்த சட்டப்பிரிவை பார்க்கிறீர்கள்... உண்மைகளையும், அறிவியலையும் அறிந்த யாரும் இப்படி பொய்யான “கலாச்சாரவாதி” வேஷம் போடும் அவசியம் இருக்காது.... இப்போதைய இளைஞர்களின் மந்திர நாயகன் அரவிந்த் கேஜ்ரிவாலின் “ஆம் ஆத்மி” கட்சி கூட இந்த சட்டப்பிரிவுக்கு எதிராகத்தான் கருத்து தெரிவித்துள்ளது... அவர்களை போல உண்மையை ஒப்புக்கொள்ளும் தைரியமும், துணிச்சலும், நேர்மையும் உங்களுக்கு இருக்கிறதா? என்பது எனக்கு தெரியவில்லை... 

எப்போதும் உங்கள் கண்ணோட்டம் வாக்கு வங்கியை மையமாக வைத்தே சுழலும்... உங்களுக்கு ஒரு சிறிய சென்சஸ் விபரத்தை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்... மொத்த மக்கள் தொகையில் 12% - 18% ஒருபால் ஈர்ப்பு நபர்கள் இருப்பதாக பல ஆய்வுகள் தெரிவிக்கிறது (இந்தியாவில் இத்தகைய சென்சஸ் எடுக்கவில்லை என்றாலும், பல்வேறு உலக நாடுகளில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு இது.... தங்களை வெளிப்படுத்திக்கொண்ட மக்கள் மட்டுமல்லாது, வெளிப்படுத்தாமல், தங்களின் பாலீர்ப்பை மறைத்து வாழும் பல நபர்களையும் கணக்கில் கொண்டுதான் இந்த சதவிகிதம் சொல்லப்படுகிறது...) ஏறத்தாழ பதினைந்து சதவிகிதம் ஒருபால் ஈர்ப்பு நபர்கள் நிச்சயம் இந்தியாவில் இருக்கிறோம்... அதுவும் பெரும்பாலும் இளைஞர்களாக இருக்கும் எங்களின் வாக்குகளும் இங்கே வெற்றிகளை தீர்மானிக்கும் ஒரு சக்தி என்பதை ஒரு நிமிடம் சிந்தித்து பார்த்து, சட்டப்பிரிவை பற்றிய ஒரு முடிவுக்கு வாருங்கள்...

நிச்சயம் சட்டப்பிரிவு 377ஐ பற்றி நீங்கள் எடுக்க இருக்கும் முடிவு, உங்களின் தேர்தல் வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம்.... நாங்களும் காத்திருக்கிறோம், யாருக்கு வாக்களிக்கலாம்? என்கிற கேள்விக்கு, உங்களின் “அறிக்கையை” எதிர்பார்த்து... எங்களை “குற்றவாளியாக்கிடும்” எந்த கட்சிக்கும் எங்கள் வாக்குகள் போய் சேராது, எங்களுக்கான உரிமைகளை குறைந்தபட்சம் அறிக்கைகள் மூலமாவது வெளிப்படுத்தும் கட்சிகளுக்கு மட்டுமே எங்கள் வாக்குகள் வசமாகும்... எங்கள் மக்கள் இதை சத்தம் போட்டு சொல்ல மாட்டார்கள், தெருவில் நின்று கோஷம் போடமாட்டார்கள், பகிரங்கமாக கருத்துகளை வெளிப்படுத்த மாட்டார்கள்... ஆனால் 2014 மே மாதத்தில் இவற்றை எல்லாவற்றையும் விட ஆழமாக, அழுத்தமாக “வாக்கு எந்திரத்தில்” பதிவு செய்வதன் மூலமாக அந்த உண்மையை வெளிப்படுத்துவார்கள்...


நான்கு வரிகளில் எங்களின் வலியை உங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்..... அந்த நான்கு வரிகள்....
“ஜெர்மனியில் இனத்தின் பெயரால் அழிக்கப்பட்டனர்,
இலங்கையில் மொழியின் பெயரால் அழிக்கப்பட்டனர்,
மியான்மரில் மதத்தின் பெயரால் அழிக்கப்பட்டனர்....
இந்தியாவில் எங்களை பாலீர்ப்பின் பெயரால் அழித்துவிடாதீர்கள்....!”

10 comments:

  1. true and painful lyrics...

    ReplyDelete
  2. நல்ல முடிவு விஜய்...அதிகாரம் நல்ல சிந்தனைகளை வளர்க்க பயன்பட வேண்டும்...கண்டிப்பாக அனைவரும் இதை செய்யவேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் இந்த தேர்தலில் நம்மை ஒதுக்குபவர்களுக்கு பாடம் கற்பிப்போம் சாம்...

      Delete
  3. "eriyira kolliyila entha kolli nalla kolli"- athu mathiri than nam naatu katchikalum iruku. avanga target neenga sonna 12-18% makkala kutram solli meetham iruka 82-88% makkaloda oota vaanganumkirathu thane!

    ReplyDelete
    Replies
    1. ஆனால் பெரும்பான்மையினரின் வாக்குகள் சிதறும் வாய்ப்பிருக்கு தீபன்.... நம் வாக்குகள் நிச்சயம் நம் எதிர்ப்பை வலியுறுத்தும் விதமாக அமையும்...

      Delete
  4. nice information @ right time

    ReplyDelete
  5. thanks for the information ant correct time..............
    Thanks to vijayvickey

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி ஸ்ரீதர்...

      Delete