Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Monday, 16 December 2013

“ஆ... ஹா.... மெதுவா... ஆஆ..... ஹா.... அவ்ளோதான்... இன்னும் கொஞ்ச நேரம்... ஹா.... ஆஹ...ஆஆஅ....” – குட்டிக்கதை....


ங்களுக்கு என்ன பட்டம் கொடுக்க போறாங்கன்னு நினச்சா     குழப்பமா இருக்குண்ணே... ஒருவேளை கருப்பு அண்ணா’னு கொடுப்பாங்களோ?”

“அண்ணாவே கருப்புதானே, இதுல கருப்பு அண்ணாவா?... இன்னும் கருப்பு சாயம் பூசப்படாதது அவர் மட்டும்தான், அவரையாவது விட்டுடு கோபாலு.... எப்டியும் இன்னிக்கு நைட் தெரியப்போகுது, அதுக்குள்ள உனக்கு அவசரமா?”
“இல்லண்ணே... ஒரு ஆர்வத்துல கேட்டேன்...”
“இந்த ஆர்வத்தை கொஞ்சம் வேலையிலையும் காமி.... சென்னை வந்து நாலு மணி நேரமாச்சு, இன்னும் ஒனக்கு ஆள் பிடிக்க முடியலையா?”
“எல்லாம் ரெடி... நீங்க கிளம்பி இருங்க, இன்னும் பத்து நிமிஷத்துல சிக்குனு ஒரு ஐட்டம் வந்து உங்க ரூம் கதவை தட்டும்....” ஆச்சரியத்தில் மணிமாறனின் முகம் மலர, பெருமிதத்தில் சிரித்தபடி நின்றான் கோபால்...
கா.மு.க கட்சியின் முக்கிய பொறுப்புக்கு முப்பது வயதினில் வந்தவன் மணிமாறன் மட்டும்தான்... எதிர்வர இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயம் டெல்லியை நோக்கி பயணிக்கப்போகும் மணிமாறனின் வெற்றி மகுடங்களுக்கு, ஒரு சிறிய வைரக்கல் தான் இப்போது கொடுக்கப்பட இருக்கும் பட்டம் கூட.... “அடைமொழி இல்லாதவன் அரசியலுக்கு லாயக்கில்ல”னு எவனாவது நாக்கு மேல பல்லு போட்டு பேசிடக்கூடாது என்கிற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அவசர அவசரமாக தொண்டர் படையினரால் தயாராகிக்கொண்டிருக்கும் பட்டத்தை சுமக்கத்தான், சென்னைக்கு வாசம் செய்திருக்கிறார் மணிமாறன்...
வழக்கம்போல, மருதம் ரெசிடென்சி நட்சத்திர ஹோட்டலில் அதே 201ஆவது அறைதான்... மணிமாறன் எப்போது இருமுவார்? எப்போது உறுமுவார்? என்று எல்லாவற்றையும் அறிந்துவைத்து அதற்கேற்ப செயல்படுவது அவன் வலது கையான  கோபாலின் இயல்பு... இப்போதும் அப்படித்தான்.... அண்ணனின் மனநிலை, சென்னையின் தட்பவெட்பம் எல்லாவற்றையும் உணர்ந்தே, அவர் சொல்வதற்கு முன்பே ஆள் பிடித்து, அண்ணனின் மனநிலையை செயல்வடிவத்தில் காட்டிவிட்டான்... அதுமட்டுமல்லாமல் தொண்டர்கள் எவருக்கும் அடுத்த ஒரு மணி நேரத்துக்கு அந்த பகுதியில் அனுமதியே கிடையாதுன்னு ஒரு குட்டி “144” தடையுத்தரவே போட்டுவிட்டான்....
பத்து நிமிடத்திற்குள் மணிமாறன் தன்னை தயார்படுத்திக்கொள்ள தொடங்கினார்... முகம் கழுவி, பலவித பூச்சுகளை பூசி, அவசியமே இல்லாமல் ஒரு அயன் செய்த சட்டையை எடுத்து மாற்றிக்கொண்டு தயாராக கட்டிலில் அமர்வதற்கும், அறையின் கதவு தட்டப்படுவதற்கும் சரியாக இருந்தது...
சூழல் கருதி கோபால் எங்கோ சென்றுவிட்டான்.. திறக்கப்பட்ட கதவின் மறுபுறத்தில் ஒரு இளைஞன் நிற்கிறான்.... கல்லூரி மாணவன் போல உடலமைப்பு, முகத்தில் அப்படி ஒரு வசீகரம்... அவனை பார்த்ததும் மணிமாறனுக்குள் நரம்புகள் முறுக்கேற தொடங்கியது, இதயம் படபடப்பாக இயங்கியது... அவசரமாக அவனை அறைக்குள் இழுத்து, கதவை சாத்தினான்.....

                                                                     **********
கொடுக்கப்பட்ட பிரியாணிக்கும், குவாட்டருக்கும் மிகவும் அதிக விசுவாசத்தோடு கூட்டம் திடலை தாண்டி, சாலை வரைக்கும் நீண்டிருந்தது.... “அண்ணன் மணிமாறனை வாழ்த்துகிறோம்” தட்டிகள் சாலைகளை இருபுறத்திலும் ஆக்கிரமித்திருந்தது... மேடையில் அளவான இருக்கைகள் மட்டும்போடப்பட்டிருக்கிறது, கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு மத்தியில் போடப்பட்ட சிம்மாசனம் மணிமாறனுக்காக காத்திருந்தது...
மணிமாறன் சீறிப்பாய்ந்து மேடையில் ஏற, ஆளுயர மாலை ஒன்றை நான்கு பேர் தூக்க முடியாமல் தூக்கி மணிமாறனின் கழுத்தில் பொருத்தினர்... கூட்டம் ஆரவாரத்தில் மிதந்தது....
வரவேற்புரை முடிந்து, மணிமாறன் மைக் பிடிக்க, விசில் சத்தம் நாதஸ்வரம் இசைத்து, கைத்தட்டல் மிருதங்கம் வாசித்து மங்களகரமாக உரையை தொடக்க செய்தது...
“தலைவர் வாழ்க!... வருங்கால முதல்வர் வாழ்க!...எதிர்கால இந்திய பிரதமர் வாழ்க!” கோஷங்கள் காற்றை கிழித்தது....
“என் அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய அன்பான தமிழ் நெஞ்சங்களே!...கழகத்தின் சிங்கங்களே!” தொண்டையை சரிசெய்துகொண்டு மணிமாறன் முழு வேகத்தில் பேச்சை தொடங்கினான்...
“வள்ளுவன் சொன்னதை போல ஐம்புலன்களை மட்டுமல்லாமல், ஆறாவது புலனையும் அடக்க வேண்டிய அவசியத்தை உணராத மா.மு.க கட்சியினரை பார்த்து கேட்கிறேன், உங்களில் ஒருவராவது ஒழுக்க சீடர்கள் இருக்கிறீர்களா?”
“வா... உக்காரு.... ஐயோ! என்னா உதடு... காலேஜ் படிக்கிறியா?... என்கூடவே கடைசி வரைக்கும் இருந்திடுறியா?”
“விரைவில் ஆட்சியின் அதிகாரத்தில் அமரப்போகும் எங்கள் ஆட்சியில் இளைஞர்கள் எல்லோருக்கும் தகுதிகேற்ப வேலையையும், நிறைவான சம்பளத்தையும் நான் உறுதி அளிக்கிறேன்....”
“உன் உதட்டுக்கே ஆயிரம் கொடுக்கலாம்... உனக்காகுற மொத்த செலவையும் நான் பாத்துக்கறேன், நீ வேலையே பாக்க வேண்டாம்...”
“இந்த அரசுகள் இப்போது சட்டப்பிரிவு 377ஐ நீக்க இருப்பதற்கான முயற்சிகளில் இருப்பதாக அறிகிறேன்.... ஓரினசேர்க்கையை தண்டனைக்குரிய குற்றமாக கருதும் சட்டத்தை நீக்கி, இந்திய கலாச்சாரத்தை குழிதோண்டி புதைக்கும் இந்த முடிவை எதிர்த்து உயிர் துறக்கவும் நான் தயங்க மாட்டேன்... கலாச்சாரம் காக்க தீக்குளிக்கவும் நான் கலங்க மாட்டேன்....”
“வா அப்டியே பாத்ரூம்ல குளிச்சுகிட்டே என்ஜாய் பண்ணலாம்....”
“இந்திய கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம் இவற்றையெல்லாம் பற்றி உங்களுக்கு கொஞ்சமாவது தெரியுமா?”
“இந்த காண்டம் எப்டி மாட்டுறதுன்னு உனக்கு தெரியுமா?”
“இறுதியாக ஒன்றை நான் தெரிவித்துக்கொள்கிறேன், இந்திய பண்பாட்டிற்கும் கலாச்சாரத்திற்கும் பங்கம் உருவாகும் நிலைவந்தால் என் வாயிலிருந்து இனி பேச்சு வராது....”
“ஆ... ஹா.... மெதுவா... ஆஆ..... ஹா.... அவ்ளோதான்... இன்னும் கொஞ்ச நேரம்... ஹா.... ஆஹ...ஆஆஅ....”
அண்ணன் மணிமாறன் அவர்களின் சீரான வாழ்க்கையையும், நேர்மை தவறாத வார்த்தைகளையும் நாம் அனைவரும் அறிவோம்... நம் கலாச்சாரம் காத்திட இன்னும் சில நாட்களில் நாடாளுமன்றம் செல்லவிருக்கும் அண்ணன் அவர்களை வாழ்த்தி, நம் தொண்டர்களின் விருப்பத்திற்கு இணங்க, அண்ணன் அவர்களுக்கு “கலாச்சார காவலர்” என்கிற பட்டத்தை சூட்டி மகிழ்கிறோம்....
“கலாச்சார காவலர் மணிமாறன் வாழ்க!” அரங்கமும், திடலும் ஆர்ப்பரிக்க தொடங்கியது.... (முற்றும்)
(கதைக்கு பொருத்தமான இந்த தலைப்பை நாமமாக சூட்டிய நண்பர் Avidக்கு நன்றி...)

21 comments:

 1. தலைப்பு பார்த்து கொஞ்சம் கலவரம் ஆனேன்...கதையில் யதார்த்தமாக ஆனால் நல்ல வலிமையான முறையில் gay நிலைமையை சொல்லிருக்கிங்க...esp that cut shot type of writing is awesome...keep rocking விஜய்

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப நன்றி நண்பா.... "குட்டிக்கதைகள்" இனி அடிக்கடி வரும் சாம்...

   Delete
 2. பேச்சு வழக்கில் சொல்லன்னும்னால் "சும்மா பட்டய கெளப்பிட்டீங்க !" நம்ம அணிக்கு ஒரு விசில போடுன்னு சொல்லும் அளவுக்கு ஒரு சிந்திக்கவைக்கும் குட்டிக்கதை. பகுத்தறிவை கொள்கைகளாக கொண்ட கட்சிகள் பகுத்தறிவின்றி செயல்படுவது தமிழகத்தை பிற்போக்கு நிலையில் தள்ளியுள்ளது. மறுமலர்ச்சிக்கான மொட்டுக்கள் கிள்ளி எறியப்பட்டது போல் தானே அவர்கள் போக்கு இருக்கிறது! :( புரிஞ்சவங்க வரும் தேர்தலில் சிந்திச்சி வாக்களித்தால் மட்டுமே வளமான எதிர்காலம் அமையும்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி கண்ணகி... உண்மைதான், நிச்சயம் இந்த தேர்தலில் நம்ம ஆட்களின் கோபம் வாக்குகளின் அடிப்படையில் வெளிப்படும்...

   Delete
  2. தி.மு.க வின் கொள்கையில் பகுத்தறிவு என்ற சொல் உண்மையான பயன்பாட்டில் இருந்தால், பாலியல்/பால்விருப்பு சிறுபான்மையினரை மறுத்து ஒடுக்கும் கருத்துக்களை மத கொள்கைகளின் அடிப்படையில் வெளியிட்ட பா.ஜ.க வுடன் கூட்டணி அமைக்காது. அவ்வாறு சுயமரியாதையை இழந்து பா.ஜ கட்சியுடன் கூட்டணி அமையுமானால் மண்ணை கவ்வும் தோல்வியை அளிக்க LGBTQIA சமூகமும், நவீன சிந்தனையுள்ள இளைனர்களும், சம உரிமை ஆர்வலர்களும் முன் வர வேண்டும்.

   Delete
  3. நிச்சயமாக ஒவ்வொரு கட்சியும் ஒருபால் ஈர்ப்பு விஷயத்தில் எடுக்கும் முடிவுகள், அவர்களின் தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்கும் தோழி.... இன்னும் சில மாதங்களே, பொறுத்திருந்து பார்ப்போம்....

   Delete
 3. i cant control my laugh...nice.....u took the practical thing.....all the best

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப நன்றி வருண்.... நீண்ட இடைவெளிக்கு பிறகு வந்திருக்கிறீர்கள், மகிழ்ச்சி...

   Delete
 4. Really lovely story vijya.. in the situation.

  ReplyDelete
 5. இந்த கதை யாரை கிண்டல் செய்யுது? ஓரின சேர்க்கையாளர்களைத்தானே? அவர்தான் கதையில் பாசாங்கு செய்கிறார்களா? இனிமேலாவது அவர்களை நேர்மையானவர்களாக காட்டுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. "இனிமேலாவது" என்று எதைவைத்து சொல்கிறீர்கள்? என்பது எனக்கு புரியவில்லை.... என் பெரும்பான்மையான கதைகளில் (ஒன்றிரண்டு கதைகள் தவிர்த்து) ஒருபால் ஈர்ப்பினரை நல்லவர்களாகத்தான் காட்டியிருப்பேன்... மேலும், இங்கு நான் சந்தர்ப்பவாதியாக காட்டுவது, மணிமாறன் என்கிற அரசியல்வாதியைத்தானே தவிர, எல்லா ஒருபால் ஈர்ப்பு நபர்களுக்கும் பிரதிநிதியாக நான் அவனை சுட்டிக்காட்டவில்லை.... அரசியலின் நிலைமையை சுட்டிக்காட்டத்தான் இந்த பாத்திரம் உருவாக்கப்பட்டதே தவிர, ஒருபால் ஈர்ப்பு நபரை வில்லனாக காட்டிட உருவாக்கவில்லை என்பது படிப்பவர்களுக்கு நிச்சயம் புரியும்....

   Delete
  2. நான் இந்த கதை மட்டுமே வாசித்தேன். ஒரு பதம். இந்திய நாட்டில் லஞ்சம் ஊழல், பொது சொத்துகளை சுரண்டல், பெண்களை கொண்டல் செய்தல், பாலியல் கொடுமை செய்தல் தீண்டாமை போன்ற குற்றங்களை மறுபால் சேர்க்கையாளர்கள் செய்கிறார்கள். இவை எல்லாம் நல்லா பண்பாடுகளா என்ன? இவர்களை விட ஒருபால் சேர்க்கையினர் உயர்ந்தவர்கள் என காட்டலாம்.

   Delete
  3. நிச்சயமாக உங்கள் கருத்தோடு எனக்கு மாற்றுக்கருத்து இல்லை.... அதே நேரத்தில் நல்லவர்கள் ஒருபால் ஈர்ப்பினராகவும் இருக்கலாம், எதிர்பால் ஈர்ப்பினராகவும் இருக்கலாம்... பொத்தம் பொதுவாக எந்த தரப்பினரையும் மொத்தமாக குற்றம் சாட்டுவது இரு தரப்பையும் பிரித்துவிடும் சூழலை உருவாக்கிவிடும் நண்பா....

   Delete
 6. super! unmaiya supera sollirukeenga. athulayum manimaran pesumpothu comment pandrathu siripa irukuthu. "kalachara kavalar" pattam super!

  ippallam short storya eluthunalum, kural mathiri periya karutha ulla vachirukeenga!thiramai than ponga!

  eppa thodarkathai eluthuveenga friend?

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப நன்றி நண்பா.... தொடர்கதை பற்றி இப்போ ஐடியா இல்ல, ஒரு குறுநாவல் எழுதும் யோசனையில் இருக்கேன்... பார்க்கலாம்...

   Delete
 7. nalla kadhai na.. Deepan J brother sonna mathari kural mathari chinnatha irunthalum, karuthu perusa iruku.. Lips pathi varnikkumbothu supera irunthathu.. siripum vanthathu.. politicians avangaloda selfish kaga mattum than ellathayum seivanga.. And,
  enakum konja varusathuku munnadi oru Political personoda sex vachikitta experience undu na.. Avar ippo enga uru AIADMK union chairman and one of the district counsellor.. Ippo avar Bolero car la povar.. nan Two-Wheeler poitrupen.. Freeya iruntha car nippatti pesuvar.. eppovadhu call panniyum pesuvar.. help venumna kelu nu sollirukar.. such a nice person..

  ReplyDelete
 8. :-)

  ithe padichutu sirichu sirichu kanle thanniye vandhuduchu... nice one. keep it up Vijay!

  ReplyDelete
 9. Nice na.... Superb!! title also superb.....

  ReplyDelete