5ஆண்டுகள் என்று சொல்வதைவிட 60
மாதங்கள் என்றோ 1826 நாட்கள் என்றோ சொன்னால் அந்த
காலத்திற்கான முக்கியத்துவத்தை நாம் அதிகம் உணரமுடியும்.... குடும்பம் என்கிற
கட்டமைப்பிற்குள் ஆயிரம் கட்டாயங்களுக்கு மத்தியில் வாழும் ஒரு கணவன் மனைவி
தம்பதியால் கூட இத்தனை நாட்களும் எவ்வித முரணும் இன்றி வாழமுடியாத அளவிற்கான இந்த
அவசர யுகத்தில், இந்த ஐந்து ஆண்டுகள் என்கிற திடமான காலகட்டத்தில் தங்கள் இல்லற
வாழ்க்கையை இனிதே நிறைவு செய்திருக்கிறார்கள் இந்த ஒருபால் ஈர்ப்பு காதல்
தம்பதி....
சாதி மாற்று திருமணத்தை கூட கொஞ்சம் அந்நியமாகவே
பார்க்கின்ற நம் தமிழ் சமூகத்தில், ஒருபால் ஈர்ப்பு இல்லற வாழ்வை இத்தனை காலம்
இனிதே கொண்டுசெல்வது என்பது நிச்சயம் எளிதான ஒருவிஷயம் இல்லை... மிகவும் கடுமையான
இந்த ஹோமொபோபிக் சமூகத்தில், அத்தனை இடர்பாடுகளையும் களைந்து காதலில் திளைத்து
வாழும் இந்த தம்பதியின் துணிவும், போராட்ட குணமும் போற்றுதலுக்கு உரிய ஒன்று...
தனிப்பட்ட முறையில் அமைப்பு ரீதியாக எனக்கு இவர்களுடன் சில
முரண்பாடுகள் இருந்தாலும் கூட, நானே வியப்பது இந்த காதல் தம்பதியின் மாசற்ற
காதலையும், அந்த காதலுக்காக இவர்கள் எதிர்கொண்ட சவால்களையும் பார்த்துதான்....
இன்று ஐந்தாம் ஆண்டு
இல்லற வாழ்க்கையை நிறைவு செய்திடும் இந்த இணை, இன்னும் பல ஆண்டுகள் இதே
புத்துணர்வோடும், புரிதலோடும் இனிதே வாழ்ந்திட மனதார வாழ்த்துகிறேன்....
அடுத்த ஆண்டு எனது வாழ்த்தை நான் தெரிவிக்கும் தருணத்தில்,
சட்ட ரீதியாகவும் இவர்கள் தம்பதிகளாக மாறிட நல்லதொரு மாற்றத்தை வெகுவிரைவில் நான்
எதிர்பார்க்கிறேன்....
ஐந்தாண்டுகள் குற்றவாளிகளாக உங்களை பார்த்திட சட்டம்,
ஆறாவது ஆண்டினில் சட்ட மற்றும் சமூக அங்கீகாரம் பெற்ற மண வாழ்க்கை தம்பதிகளாக
உருமாறிட இறைவனை பிராத்திக்கிறேன்...
அப்படி ஒரு சூழல் வந்திடவும், இப்போதை போல எப்போதும்
எல்லாமும் பெற்று இனிதே வாழ்ந்திடவும் என் சார்பாகவும், உங்கள் விஜயின் வலைப்பூ
வாசகர்களின் சார்பாகவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்...
வாழ்த்துகள்
விக்ராந்த் பிரசன்னா மற்றும் ரூபேஷ் ரெட்டி...
நலமும் வளமும்
புடைசூழ பலமும் பெற்று நூறாண்டு வாழ்க!... வளர்க!...
வளம் பெற வாழ்த்துக்கள் ......
ReplyDeleteMY hearty wishes also to Vikranth and Rupesh!!! I pray Almighty to shower you with all the happiness and bless you with several more anniversaries! :)
ReplyDeleteVery nicely written.. I just wish u guys all the very best for ur future..
ReplyDeleteVery nicely written.. I just wish u guys all the very best for ur future..
ReplyDeleteVery nicely written.. I just wish u guys all the very best for ur future..
ReplyDeleteVery nicely written.. I just wish u guys all the very best for ur future..
ReplyDeleteகருத்துகளுக்கு நன்றி லெனின்.....
Deletemuthalil en manamarntha vaalthukkal!. intha kadhal vaalkai muluthum thodara vendum. athu than mulu vetri.
ReplyDeletesalikira varaikum paapanga. avlothan. 5 varusama sernthu vaalrathu enaku aacharyamavum, poramaiyavum irukunga.
வாழ்த்துக்கள் விக்ராந்த் ரூபேஷ் ! விஜய் நீங்கள் கூறுவது போல் நல்ல மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கிறேன்.
ReplyDeleteமாற்றம் ஏற்படும் நண்பா...
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteHappy Anniversery... Congratz...
ReplyDeleteHappy anniversary to Prasana & Rubesh Reedi....................
ReplyDelete