கே நபரால் ஸ்ட்ரைட்டாக முடியுமா?.... ஒரு பால் விருப்பத்தை மாற்றி, எதிர்பால் மீது ஈர்ப்பு வருமாறு செய்ய முடியுமா?....
“முடியும்” என்று சொல்கிறது சில அமைப்புகள்.... அவங்க இப்போ சொல்லல, கிட்டத்தட்ட முப்பது வருடங்களாக அதற்கு சிகிச்சையும் (?) செய்து வருகிறார்கள்.... இதை நான் சொன்னதும், நீங்க இவர்களை லேகியம் விற்கும் ஆசாமிகள் என்று நினைத்து விடாதீர்கள்... சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான இந்த இயக்கங்கள், நிறுவனங்கள், அமைப்புகள் பற்றி பார்ப்போம்.... இவர்களுக்கு பொத்தம் பொதுவாக ex-gay movement என்று பெயர்....
ex-gay movement இயக்கங்கள் ஒருபால் விருப்பம் கொண்டுள்ள கே நபர்களை, எதிர்பால் மீது ஈர்ப்பு வரும் அளவிற்கு செய்வது இவர்கள் முக்கியப்பணி...... பேட்டிசன் (E. Mansell Pattison) என்பவர் முதல் முறையாக எண்பதுகளில் இந்த வார்த்தையை பயன்படுத்தினார், செக்சின் அடிப்படையை மாற்றுவதாகவும் இதற்கு விளக்கம் கூறினார்.... அதன் பின்பு பல அமைப்புகள் இதை வலியுறுத்தி தொடங்கப்பட்டன......
கே உணர்வை குற்றமாகவும், மனித இனத்திற்கும் மதத்திற்கும் எதிரான ஒன்றாகவும் கே பற்றி பிரச்சாரம் செய்தார்கள் இந்த அமைப்பினர்........ தவறான பழக்கத்திலிருக்கும் நபர்களை மறுவாழ்வு மூலம் மாற்றுவதாகவும், இயற்கையோடு அவர்களையும் மீண்டும் இணைப்பதாகவும் பெரிய அளவில் பரப்புரைகள் செய்தனர்...... முதன்முதலில் 1973இல் Love in Action என்ற அமைப்பு தான் இப்படி தொடங்கப்பட்ட முதல் அமைப்பு.... பின்னர் Exodus International, என்ற அமைப்பு மிகப்பெரிய அமைப்பாக உருவாகி உலகளவில் பிரசித்தி பெற்றது.... சமீபத்தில் இந்த அமைப்பு தன் முப்பத்தி நான்காவது வருடத்து சேவையை தொடங்கியுள்ளது...... அதேபோல மத ரீதியான சில அமைப்புகளும் உருவாகின.....கத்தோலிக்க கிறித்தவர்களுக்காக Courage International என்ற அமைப்பும், யூதர்களுக்காக ஜோனா என்கிற அமைப்பும் உருவானது.... conversion therapy என்ற சிகிச்சை மூலம், ஒருவர் தன் பால் மீதான விருப்பத்தை முழுமையாக அகற்ற முடியும் என்றும், எதிர்பால் நபர்கள் மீது ஈர்ப்பு உண்டாக்க முடியும் என்றும் இந்த இயக்கங்கள் விளம்பரப்படுத்தின.... இதில் ஒருசில கொடுமைகளும் நடந்தன.... அதாவது பதின் வயது மற்றும் அதற்கு கீழ் வயதுள்ள குழந்தைகளை இந்த அமைப்புகள் நடத்தும் சிகிச்சைக்கு அனுப்பினார்கள் பெற்றோர்கள்.... அந்த சிகிச்சைகள் கேவலமான ரகத்தவை.... கட்டாயமாக அந்த சிறுவர்களை பெண்களுடன் உறவுகொள்ள செய்வது தொடங்கி அது குழந்தைகளின் மீதான பாலியல் கொடுமையாக மாறி, பின்னர் சில அமைப்புகள் சட்ட ரீதியாக இந்த பிரச்சினையை அணுகினார்கள்.... சில அமைப்புகள் மட்டும்தான் இப்படி செய்தார்கள்.... பெரும்பாலும் இதை மத ரீதியாக மாற்ற முனைந்தவைதான் பல அமைப்புகளும், நிறுவனங்களும்.... ஆனால், சிலர் இயற்கையாக கே விருப்பத்திலிருந்து விடுபட்டதும் உண்டு.... இன்னும் சிலர் மதரீதியாக மாற்றப்பட்டதும் உண்டு.... உதாரணமாக American Journal of Psychiatry செய்த ஆய்வு ஒன்றில் பதினொரு நபர்கள் தங்கள் கே விருப்பத்தை மறந்து, இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிட்டார்களாம்.... அவர்களுக்கு செய்த ஒரே சிகிச்சை பெந்தகொஸ்தே தேவாலயத்தின் தொடர் கலந்தாய்வு மட்டுமே..... தானாக மாறியவர்களும், இப்படி மதம் மூலம் மாரியவர்களும், சூழ்நிலைகளால் தங்களை மாற்றிக்கொண்டவர்களும் தவிர இந்த அமைப்புகள் சொல்லும் சிகிச்சையால் எவரும் மாறியதாக தெரியவில்லை..... இவர்கள் சொல்லும் சில காரணங்களும் யோசிக்க வைப்பவையாக இருக்கிறது......
கே நபர்களில் 85% அதிகமானோர் சிறுவயதில் பாலியல் வன்முறைக்கு ஆளானதால், இப்படி மாறியுள்ளார்கள்... அப்படியானால், மனம் தான் இதற்கு காரணம் என்றால், இதை மனதை வைத்தே மாற்ற முடியுமல்லவா? என்கிறார்கள்.....
Cnversion therapy, reparative therapy போன்று தங்களுக்குள் சிகிச்சைகளை வைத்துக்கொண்டு பெரிய அளவில் பணமும், புகழும் இந்த அமைப்புகள் ஈட்டின என்றுதான் சொல்ல வேண்டும்.....
ஆனால் பல அறிவியலாளர்கள், இப்படி மாறுவது ஆபத்தான விளைவுகளை கொடுக்கும் என்று எச்சரித்தார்கள்.... 2012இல் Pan American Health Organization இதை மிகக்கடுமையாக தவறென்று சொன்னது... ஒரு கே'வை மருத்துவ ரீதியாக குணப்படுத்த, அந்த எண்ணம் நோய் அல்ல, அது இயற்கையான ஒரு நிகழ்வு என்று கூறுகிறது ... சிகிச்சைகள் மூலம் இதை குணப்படுத்த இது நோய் அல்ல என்றும் இந்த இயக்கங்கள் தலையில் கொட்டு வைத்தது அமெரிக்க சுகாதார அமைப்பு..... அதே போல புகழ் பெற்ற அமைப்பான, American Psychological Association இத்தகைய இயக்கங்களை பற்றி கூறியதாவது, "இந்த இயக்கங்கள் கே'க்களை தத்துவங்கள் மூலமாகவும், மத ரீதியான கருத்துக்கள் மூலமாகவும் , சில எடுத்துக்காட்டுகள் மூலமாகவும் உணர்வு ரீதியாக கருத்துக்களை செலுத்தி எதிர்பால் மீது நாட்டம் வர முனைகிறார்கள்.... கே பழக்கத்தால் சமூகம் மற்றும் குடும்பத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்ட நபர்கள் இத்தகைய இயக்கங்களை வந்தடைந்தனர்.... இத்தகைய இயக்கங்களால் இந்த நபர்களை கே அடையாளத்திளிருந்து மாற்ற முடிந்ததே தவிர, கே விருப்பத்திலிருந்து மாற்ற முடியவில்லை.... “ என்று கூறியது.....
அது உண்மை என்றுதான் சொல்ல வேண்டும்....இதற்கு ஒரு நகைச்சுவையான உதாரணம் கூற வேண்டுமானால், ஒரு திரைப்படத்தில் கடவுளை காட்டுவதாக வடிவேலு ஊர் மக்கள் அனைவரையும் ஒரு மலை மீது அழைத்து சென்று ,”எவன் பொண்டாட்டி பத்தினியோ அவன் கண்ணுக்குத்தான் கடவுள் தெரிவார்” என்று கூறியதும், அங்கிருக்கும் அனைவரும் கடவுள் தெரிவதாக கூறுவார்கள் அல்லவா?.... அதைப்போலத்தான், இந்த இயக்கங்களும் மதத்தை தங்கள் ஆயுதமாக பயன்படுத்தினர்.....
“தன் பால் மீது ஈர்ப்பு உள்ளவன், கடவுளின் எதிரி..... இயற்கைக்கு எதிரான உறவு இறைவனுக்கு எதிரானது” என்றெல்லாம் மக்களை உளவியல் ரீதியாக மிரட்டி பணியவைத்தனர் என்றே சொல்ல வேண்டும்.... சிலர் இறைவனுக்கு பயந்து மாறினார்கள், சிலரோ மாறவில்லை என்றால் விடமாட்டார்கள் என்று பயந்து மாறிவிட்டதாக கூறினார்கள்... இப்படி மாறியவர்களை வைத்து விளம்பரப்படுத்தி, மேலும் பலரை தங்கள் அமைப்புகளுக்குள் இழுத்தன இத்தகைய அமைப்புகள்.... இது தவறல்ல என்றும், இயற்கைக்கு முரண் அல்ல என்றும், இதற்கும் இறைவனுக்கும் தொடர்பில்லை என்றும் புரியாத மக்கள் மட்டுமே இத்தகைய சிகிச்சைக்கு சென்று, நொந்து திரும்பினார்கள்.... அப்படியானால் மாறவே முடியாதா? என்றால், சிலர் மாறியதுண்டு என்பதையும் நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்.... இயற்கையாக ஒருவருக்குள் உண்டான இத்தகைய உணர்வு, இயற்கையாகவே சிலரை விட்டு விலகியதுண்டு.... அதற்கு காரண காரியங்கள் இல்லை.... நான் குறிப்பிட்ட மதத்தை பற்றி தவறாக கூறியதாக நினைக்க வேண்டாம்.... அத்தகைய அமைப்புகள் மேற்குலக நாடுகளில் இருந்ததால், அந்த மதங்களை பற்றி இங்கு கூறவேண்டி உள்ளது.... இன்னும் இந்தியாவிலும், இந்து மதத்தை காரணம் காட்டி இதை எதிர்க்கும் மக்கள் இருப்பதையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.....இ.பி.கோ 377 சட்டத்திருத்தத்தை நீக்க கூடாது என்று இங்கு போராடும் அமைப்புகள் தங்கள் மத சாயத்தை பூசித்தான் எதிர்க்கிறார்கள்...... சாதி, மதம், நாடு, மொழி எல்லாம் கடந்தது இத்தகைய உணர்வுகள்..... இந்த உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுக்க அந்த இறைவன் தான் அவர்களை வழிநடத்த வேண்டும்.....
இன்னொரு கொசுறு செய்தியையும் சொல்லிக்கொள்கிறேன், இதுவரை வாலிப, வயோதிக அன்பர்களுக்கு நடு நிசியில் அறிவுரை சொன்ன போலி மருத்துவர்கள், இப்போ தங்கள் பார்வையை கே நபர்கள் மீதும் திருப்பி வருகிறார்களாம்..... “கே பழக்கத்தை ஆறே வாரத்தில் போக்கி காட்டுவதாக” கூறி சிகிச்சைக்கு அழைக்கிறார்களாம்..... அந்த ஆசாமிகளிடம் சென்று, பணத்தை இழந்து, நிம்மதி இழந்து தவிக்காதிங்க நண்பர்களே.....”டேய் நாயே, நீ செய்றது தப்புடா..... அறிவில்லையா உனக்கு?.... நாசமா போகப்போற நீ” என்று ஏகமாக பேரப்பிள்ளைகளை திட்டும் அந்த தாத்தா வைத்தியர்கிட்டையும் போய்டாதிங்க.... மன ரீதியாக உங்களுக்கு குழப்பம் இருந்தால், ஒரு நல்ல மனநல மருத்துவரிடம் கலந்தாய்வு செல்லுங்கள்.... அது போதும்..... இறுதியாக நம் ஹர்ஷ்பீல்ட் சொன்னது போல, “பொதுவாக பலரும் வலது கை பழக்கம் உடையவர்களாக இருந்தாலும், சிலர் இடது கை பழக்கம் உடையவர்களாக இருப்பது தவறல்ல.... அதே போல, பலரும் எதிர் பால் மீது விருப்பம் உடையவர்களாக இருப்பதால், சிலர் தன்பால் மீது விருப்பம் உள்ளவர்களாக இருப்பதும் தவறல்ல.... அது ஒரு நோயும் அல்ல...” நாமும் தெளிவு பெறுவோம், மற்றவர்களையும் தெளிவாக்குவோம்..... நன்றி....