"HOW TO SEDUCE STRAIGHT?"
இந்த தலைப்பை
கேட்டதும், நம்மை போன்ற பெரும்பாலானவர்கள்
ஆர்வத்துடன் வருவார்கள் என்று எனக்கு தெரியும்.... கிட்டத்தட்ட இந்த
கேள்வியை
கேட்காத, மனதிற்குள் தோன்றாத "கே"
இருக்கவே முடியாது
என்றும் சொல்லலாம்.... ஆனால், நாம் எல்லோரும் நம் கண்ணோட்டத்துடன் மட்டுமே இந்த விஷயத்தை
பார்க்கிறோம்.... இதற்கு இன்னொரு முகமும் இருக்கிறது என்று நம்மில் எத்தனை பேர் புரிந்துவைத்திருக்கிறோம்
என்று சொல்லுங்கள் பார்க்கலாம்.... ஆம், ஒரு ஸ்ட்ரைட்
கண்ணோட்டத்தில் இதை குறைந்தபட்சம் நான் என்றாவது யோசித்தாவது பார்த்திருப்போமா?.... உங்களுக்கு பிடிக்காத ஒரு உணவை, அது அமுதமாகவே இருந்தாலும் கூட உங்களுக்கு பிடிக்காமல் அதை
உங்கள் மீது திணித்தால் உங்களுக்கு கோபம் வருமா? வராதா?.... சாதாரண ஒரு
உணவுக்கே இப்படி என்றால், உடல்உறவுக்கு
சொல்லத்தான் வேண்டுமா?.... கிட்டத்தட்ட ஒரு
ரேப் போன்ற விஷயம் தான் இதுவும்.... பொதுவாக நம்மை போன்ற கே நபர்களுக்கு, தங்கள் நண்பர்கள் (ஸ்ட்ரைட் நண்பர்கள்) மீது ஒருவித மோகம்
வருவது இயற்கை... உங்களை அதிகம் புரிந்து, மிகவும் நட்பு
பாராட்டும் சில நண்பர்கள் மீது உங்களுக்கு காதல் வருவதும் இயற்கை தான்.... நீங்கள்
காதலாக பார்க்கும் ஒரு விஷயம், அவருக்கு நட்பு
என்ற எல்லையை தாண்டி யோசிக்க முடியாத ஒன்றாக இருக்கும்.... ஒரு நேரத்தில் உங்கள்
காமத்தை அவர் மீது திணிக்கும்போது உங்கள் மீது உங்கள் நண்பருக்கு வெறுப்புணர்ச்சி உண்டாகும்.... இவ்வளவு நாளும் அவரை நீங்கள் காம கண்ணோட்டத்துடன் பார்த்ததை அவர்
யோசிக்கும்போது அந்த வெறுப்புணர்ச்சி பன்மடங்காகும்.... விளைவு, விலை மதிக்க முடியாத நட்பு முறிந்து போகும்.... இறக்கும்
வரை இருக்கும் உறவான நட்பு, ஒரு இரவில்
மறைந்து போகும்.... இந்த பிரச்சினை நம்மில் பெரும்பாலானவர்கள் கண்ட விஷயம்
தான்.... ஆனாலும், மறுமுறையும் பலர் அதே தவறை செய்வதுதான் தவறாக முடிந்துவிடுகிறது..... இதையெல்லாம் மீறி நான் ஸ்ட்ரைட் நபரைத்தன் காதலிப்பேன், காமத்திற்கு அழைப்பேன் என்று நீங்கள் விடாப்பிடியாக இருந்தால் உங்களுக்கு ஒரு அட்வைஸ்...... முதலில் கே பற்றிய அவர் புரிதலை
தெரிந்துகொள்ளுங்கள்.... நம் சமூகத்தை பொருத்தவரை பெரும்பாலான படித்தவர்கள், கே பற்றி தரக்குறைவான கண்ணோட்டமே வைத்திருக்கிறார்கள்....
ஒரு மனநலன் பாதிக்கப்பட்டவராகவும், காமக்கொடூரனாகவும், சமூக விரோதி போலவும், மனிதத்தன்மை அற்றவராகவும் மட்டுமே பலர் நினைக்கிறார்கள்.... அத்தகைய நிலைப்பாட்டை கொண்டவராக
உங்கள் நண்பர் இருப்பாரேயானால் வேறு வழியே இல்லை, நீங்கள் நட்பை காக்க உங்கள் ஆசையை அடக்கிக்கொள்ளத்தான்
வேண்டும், உளவியல் கலந்தாய்வு சென்று உண்மையை
அறிந்து ஆகத்தான் வேண்டும்.....அடுத்த
வகை சில நபர்கள், கே பற்றி தெளிவான கண்ணோட்டம் உடையவர்களாக
இருப்பார்கள்.... இதுவும் இயற்கை என்று புரிந்தவர்களாக இருப்பார்கள்....
அத்தகைய நபர்களிடம், நீங்கள் உங்கள் நிலைப்பாட்டை விளக்க முயன்று
பார்க்கலாம்.... ஆனால், அதையும் அவர் எப்படி எடுத்துக்கொள்வார்? என்று
நமக்கு முழுமையாக தெரியாது.... இதுவரை சொன்னது காதலுக்காக
மட்டும்தான்..... பெரும்பாலும் பள்ளி, கல்லூரி விடுதிகள், நண்பர்கள் அறை,
சுற்றுலா செல்லும்போது தங்கும் விடுதிகள் இங்கெல்லாம் போதையில்
இருக்கும்போதோ/உறங்கும்போதோ தங்கள் காம இச்சைகளை தங்கள் ஆசை நாயகர்களிடம்
வெளிப்படுத்துவது உண்டு.... பல நேரங்களில், அன்றைய இரவு நெடுநாள் கனவில்
பலனாகவே பலருக்கும் இருந்திருக்கும்.... ஆனால், அடுத்த நாள் முதல் அந்த
கனவு கானல் நீராக காணாமல் போய்விடும்..... முகத்தோடு முகம் பார்த்து
பேசக்கூட உங்கள் நண்பர் விரும்ப மாட்டார், உங்களைவிட்டு விலகி
சென்றுவிடுவார்.... ஒருவேளை அடுத்தடுத்த சில நாட்கள், நீங்கள் அவருக்கு
சேவை செய்வது தொடர்ந்தாலும் , அவருக்கென்று ஒரு காதலோ, துணையோ
வந்துவிட்டால் நீங்கள் அதோகதிதான்.... அப்போது உங்களுக்கு தேவையில்லாத
ஏமாற்றமும், மன உளைச்சலும் மட்டுமே மிச்சம்....
அப்போது உங்கள் நண்பர்
மீது நீங்கள் கோபப்படுவீர்கள், அரிதாக சிலர் தங்கள் செயலை யோசித்து
வருந்துவீர்கள்..... உங்கள் நண்பரை பொருத்தவரை, எப்போ நீங்க அவரை காம
கண்ணோட்டத்தில் பார்க்க தொடங்கிநீர்களோ, அப்போதே உங்கள் மீது அவர்
வைத்திருந்த நட்பை இழக்கிறீர்கள்.... “அதற்கு அவனும்தானே உடன்பட்டான்....
அவனும்தானே அதை ரசித்தான்” என்று உங்கள் தரப்பை நியாயப்படுத்த
பார்ப்பீர்கள்.... உண்மை அதுவல்ல, நீங்கள் அவரின் உணர்ச்சிகளை கிளர்ச்சி
அடைய செய்யும் விதம் சில விஷயங்கள் செய்யும்போது, எந்த ஒரு மனிதனும் அதை
உதறித்தள்ளிவிட்டு செல்லும் மகான் அல்ல, அந்த நேரத்தில் அதை ரசிக்கவே
செய்வான்....ஆனால், அந்த நிகழ்வுக்கு பிறகு அவன் யோசிக்கும்போது, நீங்கள்
எவ்வளவு பெரிய தவறு செய்திருக்கிறீர்கள் என்றும், அந்த தவறுக்கு அவர்
உடன்பட்டதை எண்ணி வருந்தியும் யோசிப்பார்..... அவ்வளவு நாளும் நீங்கள்
அவரை நட்பாக அணுகாமல், காம நோக்கத்தில் அனுகியதாகவே அவர் நினைப்பார்,
இயற்கைக்கு முரணாக நீங்கள் தவறு செய்வதாக யோசிப்பார், உங்களோடு பழகினால்
அந்த கே பழக்கம் அவருக்கும் ஏற்படுமோ என்று அஞ்சுவார், தன்னையும் பிறர்
தவறாக எண்ணுவார்களோ என்று நினைப்பார், மறுபடியும் அந்த தவறு நடக்கா வண்ணம்
ஒதுங்க நினைப்பார்..... இந்த காரணங்கள் எல்லாம் உங்களையும், உங்கள்
நட்பையும் துறக்க அவருக்கு போதுமானதாக இருக்கும்.... இவ்வளவு இழந்துதான்
உங்கள் ஆசையை நீங்கள் தீர்த்துக்கொள்ள வேண்டுமா? என்று யோசித்து அடுத்து
முடிவெடுங்கள்....சரி ஸ்ட்ரைட் நண்பர்களை பற்றி இவ்வளவு நேரம் பேசினோம்.....
அடுத்து சமூக வலைதளங்களில் ஸ்ட்ரைட் நபர்களை செட்யூஸ் செய்கிறேன் பேர்வழி என்று தன் தரத்தையும் இழந்து, சமூகத்தில் கே பற்றியும் தவறான அபிப்ராயத்தை ஏற்படுத்துகின்றனர்....
சமீபத்தில் என் ஸ்ட்ரைட் நண்பர் ஒருவர் என்னிடம் சொன்ன ஒரு செய்தியே அதற்கு உதாரணம்.... யாஹூ சாட்டில் ஒருவருடன் செக்ஸ் சாட்டில் ஈடுபட்டிருக்கிறார் அந்த நண்பர்....சிறிது நேரத்தில் அது ஆண் என்று தெரிந்ததும், என் நண்பர் தனக்கு விருப்பமில்லை என்று கூறி இருக்கிறார்..... கிட்டத்தட்ட அரை மணி நேரம், ஒரு ஸ்ட்ரைடை செட்யூஸ் செய்வதாக நினைத்து அந்த யாஹூ நபர் செய்த அத்தனையும் கேவலமானவை.... கடைசியில் மிகவும் கீழிறங்கி, தான் என்ன வேணாலும் செய்வதாகவும், ஐந்து நிமிடம் சந்தித்தால் போதும் எனவும் சொன்னதை கேட்டு என் நண்பர் இரண்டு நாள் அந்த யாஹூ நபரை கரித்து கொட்டினார்..... என் நண்பரின் கண்ணோட்டம் அந்த தனிப்பட்ட நபரோடு முடியாமல், அவரோடு இணைத்து ஒட்டுமொத்த கே சமூகத்தையுமே அவர் இப்போ வரை மிகவும் தரக்குறைவாக நினைத்து வருகிறார்.... இப்படி ஒவ்வொரு நாளும் சமூகத்தின் மத்தியில் கே பற்றிய புரிதலை நம்மில் பலரே குறைத்து காட்டி வருகிறார்கள்..... உங்கள் பசியை தீர்க்க ஆயிரம் வழிகளும், ;லட்சக்கணக்கான நபர்களும் இங்கிருக்க, எதற்காக இது பற்றிய விருப்பமே இல்லாத ஒரு நபரிடம் உங்கள் ஆசையை திணிக்க வேண்டும்?..... உங்கள் சுயமரியாதையும் இழந்து, கே பற்றிய அவமரியாதையையும் மக்கள் மத்தியில் நீங்கள் புகுத்தி தான் உங்கள் ஒருநாள் ஆசையை தீர்த்துக்கொள்ள வேண்டுமா?.....
அதே போல பொது இடங்களில், குறிப்பாக திரை அரங்கங்கள், பேருந்துகள், ரயில் வண்டிகள் போன்றவற்றில் ஸ்ட்ரைட் நபர்களை செட்யூஸ் செய்வதாக நினைத்து, பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அந்த ஸ்ட்ரைட் நபர் கொஞ்சம் அப்பாவியானவராக இருந்தால், எந்த அளவுக்கு தர்ம சங்கடத்தில் நெளிவார் என்பதை உணர்ந்திருக்கிறீர்களா?.... ஆர்குட்டில் ஒரு நபர், ட்ரெயினில் தான் அப்படி அப்ரோச் செய்த ஒருநபர் பொது இடம் என்றும் பார்க்காமல் தரக்குறைவாக திட்டியதாகவும், அடிக்க வந்ததாகவும் கவலை பட்டார்..... பிடிக்கவில்லை என்றால் அமைதியாக போயிருக்கலாம் அல்லவா? என்று வருந்தினார்.... அதைப்படித்து பலரும் அவருக்கு ஆறுதல் கூறினார்கள்.... அந்த மனிதர் பொது இடத்தில் இவரை இப்படி திட்டியது தவறுதான், ஆனால் அதே அளவு தவறை நம்மவரும் செய்திருக்கிறார் என்பதை நம்மில் பலரும் ஏற்க தயங்குவோம்.....
பொது இடங்களிலும் இவ்வாறு நடந்துகொள்ளத்தான் வேண்டுமா?.... நான் சொல்வது சிலருக்கு கோபம் கூட வரலாம், அதில் நியாயம் கூட நீங்கள் கற்பிக்கலாம்.... ஒசாமா பின்லேடன் கூட தான் செய்யும் தவறுக்கு ஒரு நியாயம் வைத்திருப்பான் என்பதால் நாம் அதனை ஏற்க முடியுமா என்ன?.... நான் இதை பெரிய தவறாக சித்தரிப்பதாக நினைக்காதிங்க நண்பர்களே, இதைப்போன்ற சிறு சிறு தவறுகள்தான் , கே பற்றிய சமூகத்தின் கண்ணோட்டத்தில் பெரிய தவறாக மாறிவிடுகிறது.....
உங்கள் விருப்பங்களை, உங்களை ஒத்த நபர்களிடம் சொல்லுங்கள், செய்யுங்கள்..... எல்லாம் சுபமாக இருக்கும் என்று நம்புவோம்..... நன்றி நண்பர்களே.....
விஜய்.. நீங்கள் சொல்வது நூறு சதவிகிதம் சரி. நம் மனம் ஒத்த நண்பர்களுடன் மட்டுமே "கே" உறவு வைத்துக்கொள்ள வேண்டும்.
ReplyDeleteஎன் அனுபவம் ஒன்றை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
என் நண்பர்களுள் ஒருவனிடம் நான் மிகவும் ஈர்ப்பு கொண்டேன். படு ஸ்மார்ட்டாக கலக்குவான் அவன். அவனுடன் உடல் ரீதியான உறவுக்கு என் மனம் ஏங்கியது. அவனுடன் மிகவும் நெருக்கமாக பழக ஆரம்பித்தேன். அவனும் என்னைப் போல நண்பன் கிடைப்பது ரொம்ப அரிது என்று நினைக்க ஆரம்பித்தான். இருவரும் மனம் விட்டு பலவற்றையும் பேசினோம். எந்த அளவு தெரியுமா? அவன் ஒரு மருத்துவரிடம் பகுதிநேரமாக வேலை பார்க்க ஆரம்பித்தபோது அவரது மனைவியுடன் உடலுறவு கொண்டு அவரை தாய்மை அடையச் செய்ததை கூட என்னிடம் வெளிப்படையாக கூறினான். நான் அவனை தவறாகவே நினைக்கவில்லை. இதெல்லாம் சம்பந்தப்பட்ட இருவரின் சம்மதத்தோடு நடப்பது. இதில் என் நண்பன் எந்தத் தவறும் செய்யவில்லை..என்று கூட நினைத்தேன். அவனது இப்படி முறை தவறிய காமத்தை கூட நியாயப் படுத்தி பேசுகிற அளவுக்கு உண்மையாக நடந்துகொண்டேன். ஆனால் அவனோ..
அவன் வீட்டில் ஒரு இரவு இருவரும் தனித்து இருக்கும் வாய்ப்பு கிடைத்தபோது என் மனதில் உள்ள ஆசையை அவனிடம் கூறி... "உன் கூட அம்மணமா கட்டிபிடிசுக்கிட்டு படுத்துக்க ஆசையா இருக்குடா" என்று நான் சொன்னது தான் தாமதம்..
அடுத்த நாள் முதல் என்னை விட்டு விலக ஆரம்பித்தான். ஒரு நாள் எங்கள் இருவருக்கும் பொதுவான இன்னொரு நண்பன் அவனிடம் "என்னடா நீங்க இப்போவெல்லாம் முன்னைப்போல இருக்கறது இல்லே போல இருக்கே" - என்று கேட்டபோது.. அவன் ஒன்று அப்படி எல்லாம் ஒன்னும் இல்லேடா.. என்று சொல்லி இருக்கலாம்.. இல்லை என்றால்.. "எனக்கும் அவனுக்கும் ஒத்துவரலே" - என்றாவது சொல்லி இருக்கலாம்..
ஆனால் அவன் என்ன சொன்னான் தெரியுமா? " டேய்.. அவன் ஒரு மாதிரி.. ஆம்பிளை கூட உறவு வச்சுக்க அலையுறவன். அவன் கிட்டே கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துக்க" என்றான்.
என் இதயம் அப்படியே நொறுங்கி விட்டது. அடுத்தவன் மனைவி கூட உறவு கொண்டு அவளை தாயாக்குவதை ஆண்மையின் கவுரவம் என்று சகஜமாக ஏற்றுக்கொள்ளும் இந்த சமூகம்... நம் போல "கே" உறவுகளை எப்போதும் அருவருப்பாகவே பார்க்கிறது. ஆகவே.. நாம் இந்த விஷயத்தில் மிகவும் கவனமாகவே இருக்கவேண்டும்.
நம்முடன் ஒத்த அலைவரிசையில் சிந்தித்து நம்மை propose பண்ணும் நண்பர்களுடன் மட்டுமே உடல் ரீதியாக நெருங்கவேண்டும். அப்படி இல்லாமல் நாமாக உடல் ரீதியாக உறவுக்கு அழைத்தால் எப்படிப்பட்ட நண்பனாக இருந்தாலும்... dearest ஆக இருந்தாலும்.. அவருக்கு "கே" உறவில் நாட்டம் இல்லை என்றால்... நாம் அசிங்கப் படவேண்டியதாக ஆகிவிட நேரும். ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ளலாம்.. ஆனால் அவமானத்தை...? - fridger
உங்க ஆதங்கம் எனக்கு புரியுது நண்பா...... நிச்சயம் தெளிவான இது பற்றிய புரிதல் இல்லாமை தான் இதற்கு காரணம்.... உங்கள் மனதின் வலி ஒவ்வொரு கே'க்கும் புரியும்...... நிச்சயம் இந்த வலியை அனைவரும் உணரும் ஒருநாள் வரும் என நம்புவோம்....
ReplyDeletenaana yaaraiyum ithu varaikkum kuptathillai.
ReplyDeleteenakku athu pudikkathu.
enakku pudikatha aal kaile nanum poka matten
ya vijay... your ideas are right and u justified that....
ReplyDelete@Ajay, i m also like u oly
Vijay, what you said is correct. but in my case it was totally different experience that i had.
ReplyDeleteWhen i was in UG college, my Junior guy who looks so smart and attractive. I loved him a lot. but dint express it to him. later, he himself started to become close and i also accepted his friendship. we became such a close friends to share everything except sex. he also loved me truely. he is straight. He is a remo among the girls. entire college, he is top most wanted guy among the girls. daily he used to call me and we talk for an hour and more. i feel so happy whenever he is with me. i used to go to his home. he also came to my home. we slept together. he always hugs me and sleep.
he was in love at that time. but later, he dint like her character, so both of them mutually. All this story happened in 2002 to 2005. after my UG college, i pursued my PG degree. i adviced him to do PG. but he refused and went to chennai and worked in a call centre. he was totally upset. he went in a wrong way such that he started to seduce girls and had sex with them. After i started to do my PG, i concentrated on my studies and dint diverted any where. after 2 years. i met him again accidently in coimbatore [our native]. he came on leave. i couldn't believe my eyes. he became so lean and looked like sick man. then i took him to my room and i talked him for 4 hours. i asked him to do PG. he started to do PG for his career in coimbatore itself. i used to go and meet him/he used to meet me once in a month. later in my third year of my PG [MCA] i got placed in Chennai IT company. for my final year projects i went to Bangalore in the same company branch. but no salary. we have to take care of our expenses. Im basically studying my PG with bank loan. no support from my family. i did a part time job and managed my expenses. but at point time, i couldn't manage my financial situations. i usually share everything with him. what he did immediatly, he sold his bike and gave me the money to do my project. that time, i felt like anything. i was hanging in the air without any support. he gave me the confidence back as i did for him earlier. then i could complete my project and done my PG. after my degree, i got call from company and i joined in chennai branch. i stayed with my PG friends. he did PG [ MSC]. after that i dint get any update from him reason i fully engaged with my busy schedule. after one year, i got a call from unknown number. that is him. i was so happy to speak with him. now he is searching for job.. since he dint get a job, most of the time he was free. so he more adicted to sex. i asked him to come to chennai to stay with me and searching for a job. but he refused as he thought he will be over burden for me. but i dint leave. i booked the ticket and sent him the ticket and asked him to start. he came at last to chennai. he stayed with me. now he was in love with a girl. before that he was stuck into a girl;s problem unknownly. it became a police case. he borrowed some 1 lack rupees from someone and solved that matter. i dont like spoling the family with these kind of issues. so i dint support him. but took care of his all day to day expenses.then i made him and trained him to get knowledge in basic langueges like C, C++.
after six months of training, he got a job. he could able to manage his financials. he loved that new girl sincerely and both of them are in deep love. but still, in the night, he wont sleep without me. we were together for 2 years[2010-2012]. all these times he always sleep hugging me. also he used to tell me he feels more confident and protected if he sleep with me. that made me to be more proud and i also loved him so much. but he is in love with that girl sincerely. he knows that i love him a lot. but, practically that is not pssobile for us to get to gether. so, i never expressed that i love him so much. he got some stomache problem bacuase of his drinking habit. i admitted him in hospital and stayed with him for a week and took care of him. she also came and supported him all these days. i was waiting for my VISA to US. so he was so sad that i'm going to US. i also feel very bad for that. but my family situation, i have to go.
ReplyDeleteone fine day [it happened recently feb 2012], when we are sleeping, he hugged me so tightly. power gone. i told him in sleep that 'dai, romba uppasama irukkuda. romba nerukkadha nu.'. he smiled and put his arms around my necks. suddenly power came. so i slept again. he kissed me in forehead suddenly. i dont know whether he kissed me in my forehead before this when i was sleeping. but this time, i noticed it. i was so happy at this moment. i felt like i'm air.
appadiye en thalaya thadavi, enna parthan. i hugged him back and slept. he was erected at that time. i could feel that. he was too hot.
the next night, again we were sleeping together, he kissed me in my lips. he started to do all the activities. he seduced me [Actually i should do that. but i felt so lucky] i cooperated with me [this time, i couldn't control. as vijay said, 'na onnum mahan illaye. refuse panna'].
he wanted me to be the master. he wanted me to have sex with him. but i refused it pollitely and had only kisses and played each other and masturbate each other.
we dint feel ashamed moreover i feel love is increased now. we used to sleep as usual. but, we will not do these often. once in a month.
this continued till may 2012. now i got my visa. i came to US in June. we used to talk over the phone for hour or more. weekly once.
i miss him a lot. i sent a gift from here. Samsung s3 galaxy. He loved it. he continue his love with that girl. Both of them have small problem. they are trying to solve it.
here, though he is straight, he have an affection on me. i love him. moreover it's like given take policy.
i like girls. but basically i afraid to move forward with girls and i dont have any other relationship with guys. i used to go to Facebook and Orkut. will have chat and read stories. I dont know where it will take me to. but I'm well prepared to handle any situation.
solla vandha karuthai kachidhamaga thelivaga koorum ungal thiramaikku valthukkal. sonna vishayamum mukkiamana ondru.
ReplyDeleteidhu ungal katturaiyai padikum nan ungaluku anupum mudhal karuthu ....