என்றைக்காவது நமக்கும் மற்றவர்களுக்கும் இருக்கும் ஒருசில வித்தியாசமான செயல்பாடுகளை கவனித்திருக்கிறீர்களா?.... அதே போல, நம்மைப்போன்ற கே நபர்களுக்குள் இருக்கும் ஒற்றுமைகளை கவனித்ததுண்டா?... நான் இங்கு "கே" என்று சொல்வது, "பை" நபர்களையும் சேர்த்துதான்.... நானும் பை'தான் என்பதால் இதை இங்கு குறிப்பிட்டுள்ளேன்.....
நான் கீழே குறிப்பிட்டுள்ள சில விஷயங்களில் எத்தனை உங்களுக்கு பொருந்தியுள்ளது என்று கூறுங்களே.....
1.சிறுவயதில் பாலியல் வன்முறைக்கு ஆட்பட்டது (உங்களுக்கு விவரம் தெரியாத பருவத்தில் மற்றவர்கள் தங்கள் காம இச்சைகளை தீர்த்துக்கொள்ள உங்களை பயன்படுத்தினார்களா?)
2.எளிதில் உணர்ச்சிவசப்படுவது (ரொம்ப சென்சிட்டிவா இருப்பிங்களா?... கவலை, சோகம், மகிழ்ச்சி என்று எதையும் மிகைப்படுத்துவீர்களா?)
3.பிடிவாத குணம் உடையவரா?
4.நிறைய பொய் சொல்வீர்களா? (அந்த பொய்யை மறைக்கும் திறமையான வார்த்தை ஜாலம் உடையவரா?)
5.விளையாடுவதில் ஆர்வமில்லாதவரா?
6.கடவுள் பக்தி உள்ளவரா?
7.நீங்கள் பணி செய்யும் சூழலில் மற்றவர்களைவிட பொருப்பானவராகவும், திறமையாகவும் செயல்படுவீர்களா?
8.குழந்தைகள் மீது அதிக பாசம் உடையவரா? (குழந்தைகளுடன் விளையாடுவது, சண்டை போடுவது என்று விளயடுவீர்களா?)
9.கொஞ்சம் சோம்பேறியா?
10.கலை, இலக்கியம் போன்ற விஷயங்களில் ஆர்வமுடயவரா?
11.அதிகமான குற்ற உணர்ச்சி கொள்பவரா? (ஏதோ சிறிய தவறுக்காக அதிகமாக குற்ற உணர்ச்சியுடன் வருந்துவீர்களா?)
12.மன அழுத்தம், தற்கொலை எண்ணங்கள் போன்றவை வந்ததுண்டா?
13.நண்பர்களிடம் கூட அதிக பொசசிவ்னஸ் உடையவரா?
நான் மேலே சொன்ன பதின்மூன்று விஷயங்களில் எத்தனை கேள்விகளுக்கு உங்கள் பதில் "ஆம்?" என்று சொல்லுங்கள்..... பெரும்பாலான கேள்விகளுக்கு ஆம் என்றால் , இவை நமக்குள் உண்டான ஒற்றுமை என்று சொல்லலாம்..... சிலர் தனிப்பட்ட பழக்க வழக்கம் மற்றும் வாழ்க்கை முறையால் சில விஷயங்கள் ஒத்துப்போகாமல் இருக்கலாம்.... ஆனால், நான் கண்டு, கேட்டவரை நான் மேலே சொன்ன ஒற்றுமைகள் நம்மை ஒரு நேர்க்கோட்டில் இணைக்கிறது.... நிச்சயம் இந்த விஷயங்களில் பெரும்பாலானவை உங்களுக்கும் பொருந்தியிருக்கும் என்று நினைக்கிறேன்..... சரி, நான் மேலே சொன்ன பதின்மூன்று விஷயங்களும், பெரும்பாலான பெண்களுக்கும் (ஸ்ட்ரைட் பெண்களுக்கு) பொருந்தும்.... அப்படியானால், அந்த ஸ்ட்ரைட் பெண்களுக்கும், கே ஆண்களுக்கும் ஒற்றுமைகள் இருக்கிறதா? என்றால் அதற்கு ஆய்வுகள் நடந்து வருகிறது.... பொதுவாக ட்ரான்ஸ்ஜென்டர் (அரவாணிகள், மாற்றுப்பாலினத்தவர்கள்) உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பெண்களாக தாங்களே உணர்ந்து மாறிக்கொள்கிறார்கள்.... ஆனால், கே நபர்கள் ஒருசில பழக்கவழக்கங்கள், குணாதிசயங்களில் மட்டும் பெண்ணுடன் ஒத்துப்போகிறார்கள்.... நான் மேலே சொன்ன பெண்களுடைய குணாதிசயத்துடன், பெரும்பாலான கே ஆண்கள் ஒத்துப்போவது இதனால்தான்....
இதை நான் எங்கும் படித்தோ, கேள்விப்பட்டோ சொல்லவில்லை... நான் கண்டு கொஞ்சம் ஆராய்ந்த விஷயங்கள் இவை.... இப்படி நான் எண்ணிக்கொண்டிருக்கையில், நான் சமீபத்தில் படித்த ஒரு ஆய்வு முடிவு என் கூற்றை இன்னும் உறுதிப்படுத்துவதாக இருக்கிறது.... சுவீடனில் உள்ள பல்கலைகழகத்தில் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வு மேற்கொண்டனர் (ஏனோ இந்தியாவில் மட்டும் பல்கலைக்கழகங்கள் எவ்வளவோ இருந்தும், இதைப்போன்ற உருப்படியான ஆய்வுகள் எதுவும் செய்வதாக தெரியவில்லை).... அதில் ஸ்ட்ரைட் ஆண்கள், கே ஆண்கள், ஸ்ட்ரைட் பெண்கள், லெஸ்பியன் பெண்கள் என்று நான்கு பிரிவாக பிரித்து அவர்களின் மூளையை பரிசோதனை செய்தனர்.... அதில் மூளையின் அமைப்பு கே ஆண்கள் மற்றும் ஸ்ட்ரைட் பெண்களுக்கு ஒன்றுபோல இருப்பதாகவும், ஸ்ட்ரைட் ஆண்கள் மற்றும் லெஸ்பியன் பெண்கள் ஆகியோருக்கு மூளையின் அமைப்பு ஒன்றாக இருப்பதாகவும் கூறினார்கள்.....
சான்ப்ரான்சிஸ்கோவில் நியூரோ அனாட்டமிஸ்ட் ஆராய்ச்சி மருத்துவரான சைமன் லேவே என்பவர் கூறுவதாவது, “மூளையில் உள்ள செல்களில் உள்ள நியூக்ளியஸ் ஸ்ட்ரைட் நபர்களைவிட, கே ஆண்களுக்கு இரண்டு மடங்கு அளவில் பெரிதாக இருந்தது பிரேத பரிசோதனை முடிவில் தெரிந்ததாம்.... அதேபோல, மூளையின் வலது மற்றும் இடது பகுதிகளை பிரிக்கும் ஆன்டீரியர் கமிசர் எனும் பகுதி பெண்களுக்கு ஆண்களை விட கொஞ்சம் பெரிதாக இருக்குமாம்..... பெண்களின் மூளையில் உள்ள அந்த பகுதி பெண்களுக்கு எவ்வளவு பெரிதாக இருந்ததோ, அதே அளவு கே ஆண்களுக்கும் பெரிதாக இருந்ததாம் பிரேத பரிசோதனையில்...... அதனால், கே ஆண்களுக்கும், ஸ்ட்ரைட் பெண்களுக்கும் இத்தகைய விஷயங்கள் மூளை அமைப்பில் ஒத்துப்போவதால், இத்தகைய ஒற்றுமையான குணாதிசயங்கள் காணப்படலாம்” என்கிறார்.... இந்த ஆய்வு இன்னும் ஆய்வு அளவில் மட்டுமே இருக்கிறது, ஒருவேளை இது உறுதிப்படுத்தப்பட்டுவிட்டால் நிலைமையை கொஞ்சம் யோசித்து பாருங்கள்..... ஒரு சி.டி ஸ்கேன் எடுத்தால் நீங்கள் ஸ்ட்ரைட்டா? கே'யா? என்பது எளிதாக தெரிந்துவிடும்.... அப்போது பலரும் மாட்டுவார்கள்......
சரி, இப்போ புரியுதா நான் சொன்ன குணாதிசயங்கள் பெண்களுடன் எதனால் ஒத்துப்போகிறது என்று.... அதனால்தான் கே நபர்களுக்கு பெண்களைப்போல, ஆண்கள் மீது நாட்டம் வருகிறது..... அந்த ஒற்றுமை செக்ஸ் விஷயத்தில் தொடங்கி, இதைப்போன்ற சின்ன சின்ன விஷயங்களிலும் ஒத்துப்போகிறதை பார்க்கும்போது அந்த ஆய்வு முடிவு நிச்சயம் உறுதியாக இருக்கும் என்று நாம் நம்பலாம்.....
இப்படி பல விஷயங்கள் ஒரு கே’க்கும் , ஸ்ட்ரைட் பெண்ணுக்கும் ஒற்றுமையான குணாதிசயத்தை கொண்டிருந்தாலும், அடிப்படையில் கே’க்கு ஆண்களின் விருப்பங்கள்தான் மேலோங்கும் என்பதற்கு ஒரு சிறு உதாரணம் உண்டு.... அதாவது பொதுவாக ஒரு பெண்ணை கவரும் ஆண்மகன் அழகாக இருக்க வேண்டும் என்பது இரண்டாம் பட்சம் தான்.... அவன் செட்டில்மென்ட் ஆனவனா?, ஹியூமர் சென்ஸ் உடையவனா?, மன தைரியம் மிக்கவனா? இந்த கேள்விகள் எல்லாம் முடிந்தபிறகுதான், அவன் அழகாக இருக்கிறானா? என்பதை பார்ப்பதாக ஒரு சர்வே கூறுகிறது.... ஆனால், ஆண்களை பொருத்தவரை, எத்தகைய கேள்விகளுக்கும் இடமளிக்காமல், அந்த பெண் அழகாக இருக்கிறாளா? என்பதை மட்டும்தான் முதலில் பார்க்கிறான்..... நமக்கு பெண்களின் குணாதிசயம் இந்த விதத்தில் ஒத்துப்போயிருக்கவில்லை.... பொதுவாக ஒரு கே தனக்கு காதலனாகவும், காமதிர்க்காகவும் என இருக்க வேண்டியவன் அழகாக இருக்க வேண்டும் என்று நினைப்பது , பெண்களின் குணாதிசயத்துடன் முரண்பட்ட ஒன்றாகத்தான் இருக்கிறது....
ரஜினி போல ஸ்டைலாகவும், புகழ் பெற்றவராகவும், பணக்காரராகவும் இருக்கும் ஒருவரை பெண்கள் காதலனாக அடைந்தால் சந்தோஷப்படுவார்கள், ஆனால் அதே நேரத்தில் அப்படி ஒரு ஆணை ஏற்பதில் கே தயக்கம் காட்டுவதையும் நாம் கண்டுவருகிறோம்.....
நம்ம மூளை தான் இந்த உலகத்திலேயே சிக்கலான, குழப்பமான ஒரு இடம்.... அதில், இவ்வளவு முரண்பாடுகளையும், ஒற்றுமைகளையும் நாம் மேலோட்டமாகத்தான் பார்க்கிறோம், இன்னும் ஆழமான ஆய்வுகளும், விவாதங்களும் வந்துவிட்டால் நமக்கான முழு தெளிவு கிடைக்கும்..... கிடைக்கும்போது அதைப்பற்றி இன்னும் பேசுவோம்.....
vijay anna, neenga bisexuala..............??????????????/
ReplyDeleteithana nala theriyama pocheeeeeeeeeeeeeeeeeeee
But vicky na, does gender identity influence sexual orientation ? I mean are there really any mach macho men who are gay ? ( i read in yahoo answers, there are really a lot of interesting informations ! ) But have you seen any in real life ? Those manly rough thinking men who are gay ?
ReplyDeletesimilarly those girly girls who are lesbians - please update if you find answers for that ! Thank you !