Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Tuesday, 2 October 2012

கே பற்றிய வரலாற்று ஆய்வு - பகுதி 1இன்றைக்கும் நம்ம மக்கள் பலர் "கே" உறவை மன்னிக்க முடியாத குற்றமாகவும், பாவப்பட்ட செயலாகவும் கருதுகிற காலத்தில் , இருநூறு வருடங்களுக்கு முன்பே இது குறித்து ஆய்வும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியை செய்தவர் ரிச்சர்ட் வான்க்ராப்ட் எபிங் (richard van graft eping) என்னும் ஆய்வாளர் அறிஞர்.... இவர் பக்கம் பக்கமாக எழுதிய கே பற்றிய கருத்துகளில், முத்தாய்ப்பாகவும் சுருக்கமாகவும் சொல்ல வேண்டுமானால் "கே என்பது ஒரு குழந்தை கருவில் உருவாகும்போதே தீர்மானிக்கப்படுகிறது" என்ற கருத்து தான்.... முதன் முதலில் இவரின் ஆய்வு முடிவுகள் பலராலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதுதான் உண்மை.... ஆனால், சமீபத்தில் ஒரு மருத்துவ ஆராய்ச்சியாளர் எபிங் கருத்தை இருநூறு வருடங்களுக்கு பிறகு மெய்ப்பிக்கும்படி ஒரு முடிவை கூறி இருக்கிறார்.... அதாவது, குழந்தை உருவாகும்போது உண்டாகும் ஒரு ஜீன் (மரபணு) தான் இதற்கு காரணம் என்று கூறி இருக்கிறார்.... ஆனால், இவர் சொல்லும் அத்தகைய வகையான ஜீன் லெஸ்பியன்'களுக்கு இல்லை என்றும் கூறுகிறார்..... இவரின் ஆய்வின் அடிப்படையே பலரையும் கேள்வி எழுப்ப காரணம் இதுதான்.... ஆண்-ஆண் ஈர்ப்பும், பெண்-பெண் ஈர்ப்பும் நிச்சயம் இருவேறு காரணங்களால் உருவாகுவது இல்லை என்ற பலரின் வாதத்தால் இந்த கூற்று இன்னும் ஆய்வு வரையில் மட்டுமே இருக்கிறது.... ஒருவேளை இந்த ஆய்வு முடிவு உறுதிப்படுத்தப்பட்டு, கே என்பது ஒரு மரபணுவால் உண்டாவது என்பது உண்மையானால், ஒரு குழந்தை பிறக்கும் முன்னரே அத்தகைய மரபணுவை கண்டுபிடித்து, அதில் மாற்றம் செய்து பிறக்கும் சமுதாயம் "கே இல்லா சமுதாயம்" ஆக உண்டாக வாய்ப்புள்ளது..... சரி, எபிங் சொன்னதை, இன்று ஆய்வு மூலம் மெய்ப்பிக்க முனையும் மருத்துவ ஆராய்ச்சியாளர் சொல்வது உண்மையானால் அதில் பல கேள்விகள் எழுவது நியாயம்..... அதாவது, இதற்கு காரணம் மரபணுதான் என்றால், இது மரபுவழித்தொடரும் ஒன்றா?... அப்படியானால், தாத்தா, அப்பா, மகன், பேரன் என்று இப்படி மரபு வழியாக கே'வாக இருப்பார்களா?.... இது நிச்சயமாக அடிப்படை அற்ற ஒரு விஷயம்.... அதே போல, இதற்கு மரபணு காரணம் என்றால் ஒரு வீட்டில் இருக்கும் அண்ணன் தம்பிகளில் இருவரும் அப்படி இருக்க வேண்டுமே.... ஆனால், ஆய்வு முடிவுகள் அப்படி இல்லையே.... அதே போல ஒட்டி பிறந்த இரட்டையர்களில் கூட ஒருவர் கே'யாகவும் மற்றொருவர் ஸ்ட்ரைட்'ஆகவும் இருக்கிறார்களே, அப்படியானால் இந்த மரபணு இருவருக்கும் ஒன்றாக அல்லவா இருக்க வேண்டும்?..... இத்தகைய அடிப்படை கேள்விகளுக்கு பதில் சொல்லாமல், இந்த ஆய்வை யாராலும் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல முடியாது..... நான் என்னதான் சொன்னாலும், இன்றும் பலர் இதில் உண்மை இருக்குமோ என்றுதான் சொல்லி வருகிறார்கள்.... சரி, வான் கிராப்ட் எபிங் இப்படி சொன்னதோடு சென்றுவிட்டார், அவருக்கு பிறகு அவரது மாணவர் சிக்மண்ட் ப்ராயிட் இந்த விஷயத்தை முன்னெடுத்து ஆய்வுகள் செய்தார்.... வியன்னாவில் இருந்த சிக்மண்ட் அடிப்படையில் நரம்பியல் மருத்துவர் என்றாலும், அவர் செக்ஸ் தொடர்பாக தொடாத விஷயமே இல்லை என்று சொல்லலாம்.... இவர் பெயரை கேட்டவுடன் பலருக்கும் இவருடைய "கனவு கோட்பாடு" விஷயங்கள்தான் நினைவுக்கு வரும்.... ஆனால், கே பற்றி இவரின் இரண்டு கருத்துக்களை நீங்கள் கேட்டால், இவரை எப்போதும் நாம் மறக்க முடியாது.... இரண்டுமே இருவேறு அணு குண்டுகள் என்றே சொல்லலாம்..... முதலில், கே நபர்கள் தங்கள் வாழ்வில் சிறுவயதில் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகி இருப்பார்கள் என்றார்.... அதாவது ஏதோ ஒரு வகையில் சிறுவயதில் மற்றவர்களால் பாலியல் ரீதியாக பயன்படுத்தப்படும் சிறுவர்கள், பிற்காலத்தில் கே'வாக மாறுகிறார்கள் என்றார்.... அடுத்து இரண்டாவது விஷயம்தான் அதிர்ச்சியான ஒன்று, அதாவது எந்த ஆணும் வாய்ப்பும், சந்தர்ப்பமும் அமைந்தால் கே'வாக மாறுவான் என்பதுதான் அந்த விஷயம்..... இது ஆரம்பத்தில் நம்மால் நம்ப முடியாவிட்டாலும் கூட, கொஞ்சம் யோசித்து பார்த்தால் அது உண்மையோ? என்று நமக்குள் கேள்வி எழும்..... சமீபத்தில் ஒரு ஆய்வு முடிவு சொல்வது என்னவென்றால், பெரும்பாலான ஆண்கள் தங்கள் வாழ்வில் ஒரு முறையாவது மற்றொரு ஆணுடன் உறவில் ஈடுபட்டிருப்பார்கள் என்று கூறுகிறது..... பொதுவாக விடுதிகள், ராணுவ முகாம்கள். சிறைச்சாலை, மேன்சன்'கள் போன்ற இடங்களில் இத்தகைய வாய்ப்பு பலருக்கும் அமைந்திருக்கும் என்று உங்களுக்கு தெரியும்.... ஆனால் சிக்மண்ட் சொல்வது இதற்கு ஒருபடி மேல்..... எந்த ஆணும் வாய்ப்பு கிடைக்கும்போது கே'வாக மாறுகிறான் என்கிறார்.... இத்தகைய வகை நபர்களைத்தான் நாம் டாப் என்று சொல்கிறோமா? என்பதும் கேள்வியை எழுப்பியுள்ளது.... சிக்மண்ட்'டின் இரண்டு முடிவுகளுமே இதுவரை எல்லோரும் ஏற்கும்படி உறுதி செய்யப்படவில்லை என்றாலும், நான் முழுமையாக நம்புவது இவரின் கருத்துகளை.... நம்மில் பெரும்பாலான நபர்கள் வாழ்க்கையில் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தின் மூலம் இந்த பழக்கத்திற்கு அடிமையாகிவிடுகிறோம்..... இந்த இருவரின் முடிவுகளையும் நான் நேர்க்கோட்டில் வைத்து பார்த்தால் அதில் ஒரு தெளிவான மனநிலைக்கு நாம் வரலாம்.... அதாவது, கே என்பது நம் மரபணுவின் மாற்றத்தால் உண்டாகும் ஒன்று.... அத்தகைய மாற்றம் சிலருக்கு பிறக்கும்போதே உண்டாகிவிடுகிறது.... அத்தகைய நபர்கள், விவரம் தெரிந்த நாள் முதலாகவே மற்ற ஆண்களின் மீது ஈர்ப்போடு இருக்கிறார்கள்.... இவர்கள் முதல் வகை.... இரண்டாம் வகையை சேர்ந்தவர்கள், பிறக்கும்போது அத்தகைய மாற்றத்தால் உண்டாகாதவர்கள் என்றாலும், அத்தகைய ஜீனில் ஏற்படும் மாற்றம் (ஆங்கிலத்தில் மியூட்டேசன்) என்று கூறுவார்கள் , அதன் மூலம் அப்படி மாறி இருக்கலாமோ? என்று நாம் நினைப்பவர்கள் இரண்டாம் வகையை சேர்ந்தவர்கள்..... அத்தகைய மாற்றம் சிறுவயதில் உண்டாகும் பாலியல் சொந்தரவால் உண்டாகுமா? என்ற நம் கேள்வியும் இன்னும் விடை தெரியாத ஒன்றுதான்..... அதாவது, இவர்கள் இருவரின் கோட்பாட்டையும் நாம் இணைப்பதன் மூலம் நமக்கு புது கோட்பாடு கிடைக்கிறது என்றாலும், எதுவுமே உறுதிப்படுத்தப்படாத விஷயம்தான்.... ஆய்வு முடிவுகளும், மருத்துவ ஆராய்ச்சி முடிவுகளும் இன்னும் நமக்கான இந்த சந்தேகங்களுக்கு முடிவு தரவில்லை என்றுதான் சொல்லனும்.... சரி, இந்த குரு-சிஷ்யன் கருத்துகளை பார்த்துவிட்டோம்..... அடுத்து, இவர்களைவிட தன் ஆய்வு முடிவுகளால் ஒரு புரட்சியையே ஏற்ப்படுத்திய ஒரு நபரை பற்றி அடுத்த பதிவில் கூறுகிறேன்..... ஹிட்லரை பீதியில் உறையவைத்த இரண்டு “கே”க்கள் பற்றி அடுத்த பதிவில்.......

No comments:

Post a Comment