Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Tuesday 2 October 2012

துரோகம் - சிறுகதை



"ஹலோ  அஷ்வின், காலைலேந்து எத்தன தடவ உனக்கு ட்ரை பண்ணேன் தெரியுமா?... ரெஸ்பான்ஸ் பண்ண மாட்டியா?" என்ற சிவாவின் குரல் செல்லமாக சினுங்கியது... மறுமுனையில் பதட்டமான அஷ்வின், " ஐயோ சாரிடா செல்லம்... பாத்ரூம்ல இருந்தேன்.... சாரி சாரி.... காலைலேந்து உன்கிட்டேந்து கால் வரும்னு மொபைலை பார்த்துட்டே இருந்தேன் தெரியுமா?..... இன்னைக்கு ஈவினிங் ஸ்பென்சர்ஸ்’ல மீட் பண்ணலாம்..." என்ற சமாதான விவாதங்களுக்கு பிறகு ஒருவழியாக அலைபேசியை துண்டித்தான் அஷ்வின்... அலைபேசியை துண்டித்த பின்பு கொஞ்சம் நிம்மதியான அஷ்வின் அறையை விட்டு வெளியே வந்தான்... ஏற்கனவே வெளியூர் பயணத்திற்கு ஆயத்தமாகிக்கொண்டிருந்த அவன் அம்மா, "அஷு, நாங்க வர எப்டியும் ஒன் வீக் ஆகிடும்.... அதுவரைக்கும் வெளில சுத்தாம ஒழுங்கா படி, காலேஜை கட் பண்ணாம ஒழுங்கா போ... முக்கியமா அந்த கழிசடை பையன் வினோத் கூட சேராத " என்று கட்டுப்பாடுகளை தட்டுப்பாடு இல்லாமல் அடுக்கினார்.... "ஐயோ அம்மா.... காலைலயே ஆரமிச்சுடாத... நான் ஒன்னும் சின்ன பையன் இல்ல, நீ அப்பா கூட சண்டை போடாம ஊருக்கு போயிட்டு வர்ற வழிய பாரு" என்று அம்மாவை பதிலுக்கு வாரிய அஷ்வின் ஒருவாராக அம்மாவையும், அப்பாவையும் வெளியே அனுப்பிவிட்டு உள்ளே வந்ததும் முதல் வேலையாக வினோத்திற்கு அலைபேசி வீட்டிற்கு வருமாறு அழைத்தான்.... அடுத்த பத்து நிமிடத்தில் வினோத் வந்த பிறகு, பகல் என்றும் பாராமல் மது , புகை என்று வீடே பாரானது.... போதை நெடியேற அஷ்வினை பார்த்து, "மச்சான், இன்னக்கி எதுவும் சீன் இல்லையா?.... ரொம்ப சூடா இருக்கேன்டா.... எதாவது அரேஞ் பண்ணுடா" என்றான்....
"அடப்போடா மாப்ள, போன வாரம் இப்டிதான் அரேஞ் பண்ணேன், கடைசி நேரத்துல அந்த பய போட்ட சத்தத்துல அக்கம் பக்கத்து ஆளுங்கள்லாம் வந்துட்டாங்க.... அம்மாகிட்ட போட்டுக்கொடுத்துட்டாங்க.... அம்மாவும் ஏதோ வீட்ல பிரச்சினைன்னு நினச்சுட்டாங்க  ... இந்த விஷயம் எதுவும் தெரியாமலேயே அம்மா பயங்கரமா திட்டுனாங்க, இதல்லாம் தெரிஞ்சா கொன்னே போட்ருவாங்க.... சீன் கொஞ்சநாள் கழிச்சு வச்சுக்கலாமே?" என்றான் அஷ்வின்....
இடியென சிரித்த வினோத், "இதுக்கல்லாம் பயப்படுவியா?.... சரி, எவனாச்சும் அம்பி மாதிரி ஆளுங்க இருப்பானுகள்ள, அது மாதிரி ஒருத்தனை ஓகே பண்ணலாமே?" என்றான்...
யோசித்த அஷ்வின், தன் அலைபேசியை எடுத்து ஒவ்வொரு பேராக வாசித்தான்..... ஏதோ நினைவு வந்தவனாக, "டேய் மாப்ள, ஒருத்தன் ஓகேடா... சரண் அவன் பேரு.... ரொம்ப பவ்யமான ஆளு.... முத்தம் கொடுத்தா கூட சத்தம் வரக்கூடாதுன்னு பயப்படுற ஆளு.... இன்னைக்கு ஈவினிங் வரச்சொல்றேன்" என்ற அஷ்வின் அலைபேசியில் இருந்த சரணின் எண்ணை தொடர்பு கொண்டான்....
“ஹாய் சரண்”
“ஹலோ அஷ்வின், எப்டி இருக்க?”
“ஹ்ம்ம்... ஓகேடா.... இன்னைக்கு ப்ரீயா?... மீட் பண்ணலாமா?” என்று நேரடியாக கேட்டுவிட்டான் அஷ்வின்....  எப்போதும் எந்த விஷயத்தையும் பூசி மொழுகாமல், நேரடியாக பெசிவிடுவான்......
“சரி.... கேகே நகர்ல உங்க வீட்டுக்குதானே, வந்திடுறேன்.... நம்ம முதல் மீட்டிங்குக்கு அப்புறம் உனக்கு நான் நெறைய தடவை கால் பண்ணேன், ஏன் நீ அட்டென்ட் பண்ணல?” இந்த கேள்வி அஷ்வின் எதிர்பார்த்ததுதான்.... தயாராக வைத்திருந்த பதிலை சரணிடம் கூறினான் அஷ்வின் ...”சாரி... கொஞ்சம் வொர்க் பிஸி.... இப்போ ரிலாக்ஸ் ஆனதுக்கப்புறம் உனக்குத்தான் கால் பண்றேன்” இதை கேட்டதும் மனம் உருகிய சரண், சில கொஞ்சல்களோடு அழைப்பை துண்டித்தான்.... மேலே, நான் சொல்வதற்கு முன் இந்த அஷ்வினை பற்றி சொல்லியாகனும்..... சென்னையில் பிரபல கல்லூரியில் அஷ்வின் இறுதியாண்டு படித்து வருகிறான்.... அவனை பார்க்கும் ஒவ்வொருவரையும், தன் அழகால் வசியப்படுத்திடும் மன்மதன்.... அழகு எவ்வளவு ஆபத்து என்பதை அஷ்வினை பார்த்ததும் தெரியாது, பழகியவர்கள் நிச்சயம் புரிந்துவைத்திருப்பார்கள்.... சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமான இந்த அழகனின் கண்ணில் பட்டவர்களை கை படாமல் விட்டதில்லை.... அதேநேரத்தில் கை பட்டவர்களை, மறுமுறை கண்ணாலும் பார்க்க நினைப்பதில்லை.... அப்படி ஒருமுறை அனுபவித்த இந்த சரணை, தன் நண்பன் வினோதிற்காக அரை மனதுடன் ஒப்புக்கொண்டான்...  அஷ்வினின் அம்மா சொல்வதைப்போல அஷ்வினை வழிதவறி செலுத்துபவனே வினோத்தான்.... எப்படி? எதனால்? இவ்வாறு சொல்கிறேன் என்பதை கதையின் போக்கில் புரிந்துகொள்வீர்கள்..... அன்று மாலை சீன்’க்காக காத்திருந்தான் அஷ்வின்.... சொன்ன நேரத்திற்கு சரியாக வந்த சரணை வாசலுக்கே வந்து உள்ளே அழைத்து சென்றான் அஷ்வின்.... முன்பு பார்த்ததைவிட இப்போது இன்னும் பொலிவாகவும், அழகாகவும் தெரிந்தான் அஷ்வின்.... பின்னர் இருவரும் குளிர்பானம் குடித்தபிறகு, நிறைய ஆசைகளோடு படுக்கை அறைக்கு சரணை அழைத்து சென்றான் அஷ்வின்.... உள்ளே சென்றதும் ஆசைகளை அடக்க மாட்டாமல், அஷ்வினின் உதடுகளில் முத்தம் கொடுத்தான் சரண்... அப்போது எதேச்சையாக படுக்கையை பார்க்க, அங்கு அரை நிர்வாணமாக படுத்திருந்தான் வினோத்.... அதை பார்த்ததும் பதறிய சரண், விலகி சென்றான்....பதட்டத்தில் அஷ்வினை பார்த்து குழப்பத்தோடு, “அஷு, இது யாரு?.... “ என்றான்...

சிரித்த அஷ்வின், “ஒன்னும் பயப்படாத நம்ம ஆளுதான் இவன்.... ஜஸ்ட், இது ஜாலிக்குதான்.... வா, அவனும் என்ஜாய் பண்ணுவான்” என்றான் ....
பதறிய சரண், “சாரி அஷு.... எனக்கு க்ரூப்’லயல்லாம் இன்ட்ரஸ்ட் இல்ல.... நான் வீட்டுக்கு போறேன்” என்று அறையை விட்டு வெளியே செல்ல முயன்ற சரணை கையை பிடித்து நிறுத்திய அஷ்வின், “எங்கடா போற?... நில்லு.... போறதுக்கு முன்னாடி இந்த வீடியோவை பாத்துட்டு போ” என்றான்... படுக்கையில் படுத்திருந்த வினோத், தன் கையில் வைத்திருந்த லேப்டாப்பை திறந்து ஒரு காணொளியை காண்பித்தான்.... அதில், சரண் அஷ்வினுடன் உடலுறவில் ஈடுபட்ட வீடியோ ஓடியது.... இதை பார்த்ததும் திகைத்துப்போனான் சரண்... பொதுவாகவே மிகவும் மென்மையான சுபாவம் உடைய சரண், இந்த விஷயத்தில் தன் பயத்தை காட்டிக்கொள்ளாமல், “ஏய், என்ன மிரட்டுறீங்களா?.... அக்கம் பக்கத்துல ஆளுங்கள கூப்புடவா?... போலிஸ்’ல கம்ப்ளைன்ட் பண்ணினா என்ன ஆகும்னு தெரியுமா?” என்றான்...
பலமாக சிரித்த வினோத், “அட உத்தமபுத்திரரே.... இந்த மொபைல், யாருக்கு வேணாலும் போன் பண்ணு, நான் இப்டியே இதை நெட்ல விட்டேன்னு வச்சுக்க, ஓவர்நைட்ல நீ உலகம் பூராவும் அசிங்கமாகிடுவ.... செய்யவா?.... போலிசை கூப்பிடு, முடிஞ்சா ஆர்மியவே கூப்பிடு.... கூப்டு என்ன சொல்லுவ?... நீ பண்ணின விஷயத்தைத்தானே நான் வீடியோ எடுத்தேன்னு நான் சொன்னா என்ன செய்வ?.... நானே போலிஸ்’கு கால் பண்ணவா?” என்றான்...
அதற்கு மேலும், அந்த பயத்தை மறைத்தவனாக சரனால் பேச முடியாமல், அழுதுவிட்டான்.....
அழுவதைத்தவிற அந்த நேரத்தில் எதையும் செய்ய முடியாத இயலாமையில் இருந்தான் சரண்.... அந்த இயலாமையை தன்னால் இயன்ற அளவுக்கு பயன்படுத்திக்கொண்டான் வினோத்... சிறுத்தையின் குகையில் சிக்கிய சிறு மானாக மாட்டிக்கொண்டான் சரண்... எல்லாம் முடிந்து கந்தல் துணியாகிப்போன சரண், நடக்க முடியாமல் உடலாலும், மனதாலும் சிதைக்கப்பட்டு அங்கிருந்து வெளியேறினான்....பார்ப்பதற்கு வினோத் மனிதனைப்போல இருந்தாலும், உள்ளே மிருகமாக குணம் படைத்தவன் அவன்... பொதுவாக துன்புறுத்தி அதில் அதிக இன்பம் காண்பது அவன் வாடிக்கை, அதற்கு அஷ்வினின் அழகையும், அவன் திறமையையும் பயன்படுத்திக்கொண்டான்.... மற்ற வகையில் அஷ்வினுக்கு எத்தகைய பிரச்சினைகள் வந்தாலும், அதில் எந்த எல்லைக்கும் சென்று அஷ்வினை காப்பாற்றி நன் நன்றியை காட்டுவான்.... இன்று சரணுக்கு நடந்தது போல, மாதம் இருமுறையாவது “சீன்” என்கிற பெயரில் பலரை சீரழிப்பது இரண்டு வருடங்களாகவே நடக்கும் ஒன்று..... எல்லாம் முடிந்து படுக்கையில் படுத்திருந்த அஷ்வினின் அலைபேசி அடித்தது.... அதை பார்த்த வினோத், “மச்சான், யாருடா ‘இம்சை’னு போன் வருதே... அட்டன்ட் பண்ணவா?” என்று சிரித்தான்....
படுக்கையில் இருந்து படபடப்புடன் எழுந்த அஷ்வின், அந்த அலைபேசியை பிடுங்கி வழக்கம்போல, “செல்லம், டார்லிங், மம்மு” என்று கொஞ்சிவிட்டு அலைபேசியை துண்டித்துவிட்டு பெருமூச்சு விட்டான்....
“என்னடா மச்சான், அடுத்த ட்ராக்கா?... அப்போ கூடிய சீக்கிரமே சீன் உண்டுன்னு சொல்லு..... யாருடா பார்ட்டி?” என்றான் வினோத்....
சிரித்த அஷ்வின், “ஹ்ம்ம் பார்க்கலாம்......பார்ட்டி பீ.ஆர்’லதான் மாட்டுச்சு... ஆளு செம்மையா இருக்கான்... ஆனா, வழக்கமான ஜாலிக்கு ஒத்துக்க மாட்டானாம்... உண்மையான லவ்வர் வேணுமாம், நிறைய ஷேர் பண்ணனுமாம், லைப் லாங் ஒருத்தர் கூடவே இருக்கனுமாம்.... அதான் அவன் ட்ராக்லேயே போயி ஓகே பண்ணிட்டேன்.... இன்னும் நாலு நாள்ல வீட்டுக்கு கூட்டிட்டு வந்து முடிச்சிடலாம்.... இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா தொட்டு பேச ஆரமிச்சுருக்கேன்... நாலு நாள்ல முடிச்சிடலாம்” என்றான்....
அதீத உற்சாகமான வினோத், “தாங்க்ஸ் டா... இந்த மாதிரி குடும்ப குத்துவிளக்கு பசங்க தனி கிக்கு தான்டா... பையன் ரொம்ப ஹார்ஷ் இல்லைல?” என்றான்....

“இல்லடா.... பேரு சிவராம கிருஷ்ணன்.... ரொம்ப சென்சிட்டிவ், பொசசிவ், டீசன்சி.... நம்ம சீனுக்காகவே ஆண்டவன் படைச்ச ஒரு ஜந்து அவன்..... இந்த தடவை இன்னொரு பென் கேமரா ரெடி பண்ணிடு, ரெண்டு வியூவுல எடுத்து படம் காட்டனும்... ஸ்பென்சர்ஸ்’ல இப்ப அவனை நான் மீட் பண்ணனும்.... அவன் போடுற மொக்கைக்கு ஆமா போடணும்.... நான் போயிட்டு வரேன், நீ கேமரா ரெடி பண்ணிடு.... ஓகேவா?” என்று அஷ்வின் சொல்ல உற்சாகமான வினோத்தும் அது தொடர்பான வேலைகளை தொடங்கினான்.... சிவாவை அஷ்வின் வீட்டிற்கு அழைத்து வரும் நாளும் வந்துவிட்டது.... அஷ்வினைவிட வினோத் இன்னும் ஆர்வமாக இருந்தான்.... வினோத் இயல்பாகவே கொஞ்சம் சைக்கோ குணாதிசயங்கள் கொண்டவன்.... அப்பாவியாக இருக்கும் பையன்களிடம், ஆக்ரோஷமாக உடலுறவில் ஈடுபடுவது அவனுக்கு பிடிக்கும்.... அதுவும் அடுத்தவர்கள் கண்ணீரை பார்த்தால் வினோத்தின் வேகம் அதிகரிக்கும்.... வினோத்தின் இந்த செயல்களை மறுக்கவோ, வெறுத்து ஒதுங்கவோ முடியாத அளவிற்கு அஷ்வின் மூலம் எடுக்கும் வீடியோவை பயன்படுத்தி இதுவரை பலரையும் மிரட்டி தனக்கு பணியவைத்து விடுவான்.... அதிலும் சிவாவின் புகைப்படத்தை பார்த்ததும் வினோத்தின் வெறி இன்னும் அதிகமாகும் அளவிற்கு அப்பாவி போலவும், அழகாகவும் இருந்தான்.... அஷ்வினின் படுக்க அறையில் பேசியபடியே இரண்டு பென் கேமராக்களை காணொளி எடுக்குமாறு பொருத்திவிட்டு, சிவாவின் வருகைக்காக இன்னொரு அறையில் காத்திருந்தான் வினோத்..... சிவா வந்ததும் அவனை வரவேற்று ஹாலில் அமரவைத்தான் அஷ்வின்.... வழக்கமாக சந்திக்கும்போது படபடவென்று பேசும் சிவா அன்று அதிக சத்தமில்லாமல் இருந்தான்....
“என்ன சிவா, இன்னைக்கு இவ்ளோ அமைதியா இருக்க?.... உடம்பு எதுவும் சரி இல்லையா?” என்று கூறிவிட்டு சிவாவின் நெற்றியில் கைவைத்து பார்த்தான்.... ஏற்கனவே பயத்தில் இருந்த சிவாவிற்கு இன்னும் உதறல் அதிகமாகி வியர்க்க தொடங்கிவிட்டது..... அஷ்வினின் கைகளை விலக்கியபடி, “இல்லடா ஒன்னுமில்ல..... கொஞ்சம் வேர்க்குது, அவ்ளோதான்” என்றான்....
தானாகவே சிவா வலையில் விழுவதை உணர்ந்த அஷ்வின், “ஓ அப்டியா?.... சரி வா ரூமுக்கு போகலாம்.... அங்க ஏசி இருக்கு” என்று கூறிவிட்டு சிவாவின் பதிலை எதிர்பார்க்காமல் அவன் கையை பிடித்து இழுக்க, மறுப்பின்றி சிவாவும் அறைக்குள் சென்றான்....
குளிர் காற்று வீசும் அந்த அறையிலும் சிவாவின் பதட்டம் குறையாமல் வியர்வை அதிகமானது.... கைகள் நடுங்க அங்கிருந்த படுக்கையில் அமர்ந்தான்..... சிவாவிடம் ஒரு டவலை கையில் கொடுத்து, “இன்னும் உனக்கு வேர்க்குதுடா.... வேணும்னா, ஷர்ட்’ஐ கழட்டிக்கோ.... இந்த டவல் தொடச்சுக்கோ” என்று கூறிவிட்டு சிவாவை எதுவும் கேட்காமல் அவன் சட்டை பொத்தான்களை கழற்றினான்.... ஒதுங்கி நின்ற சிவா, “பரவால்ல அஷு.... இப்ப கொஞ்சம் ஓகே.... குடிக்க கொஞ்சம் தண்ணி தாயேன்” என்றான்....
சிவாவின் இந்த செயல் ஏமாற்றமாக இருந்தாலும், அதை காட்டிக்கொள்ளாமல் “சாரிடா.... நீ பக்கத்துல இருந்தா நான் என்னையே மறந்திடுறேன்” என்று கூறிவிட்டு ஹாலுக்கு சென்று குளிர்பானத்தை எடுத்துக்கொண்டு அறைக்குள் வந்தான்.... அறையில் இருந்த ஆளுயர கண்ணாடி முன்பு நின்று முகத்தை பார்த்துக்கொண்டிருந்தான் சிவா..... அஷ்வினை பார்த்ததும், வெட்கப்பட்டவாறே அருகில் வந்து அவன் கொடுத்த பானத்தை வாங்கி குடித்தான்.....இப்போது சிவாவின் படபடப்பு வெகுவாக குறைந்துவிட்டது, ஆனாலும் அதிகம் அவனால் பேச முடியாமல் இருந்தான்....
“வீட்ல எல்லாரும் எங்க போய்ட்டாங்க அஷு?”
“மாசத்துல இருபது நாள் அம்மா மீட்டிங், அது இதுன்னு எங்கயாச்சும் போய்டுவாங்க... அப்பா, வீட்ல இருக்குறதே என்னைக்காவதுதான், அவர் எக்ஸ்போர்ட் விஷயமா பாரின் போய்டுவார்....”
“ஓஹோ.... அப்போ எப்பவும் நீ தனியாத்தான் இருப்பியா?”
“ஹ்ம்ம்.... இதுவரை தனியாத்தான் இருந்தேன், இனிமே உன்கூட இருப்பேன், வாழ்க்கை முழுசா” என்று அஷ்வின் சொன்னதும் மனம் உருகிய சிவா, வெட்கத்தில் தலை குனிய, அதை தனக்கு கிடைத்த பச்சை கோடியாக நினைத்த அஷ்வின் தன் வேலைகளை தொடங்கினான்.... குனிந்திருந்த சிவாவின் தலையை நிமிர்த்திய அஷ்வின் உதட்டோடு உதட்டால் ஒத்தி எடுத்தான்.... கண்களை திறக்காமல் அதை ரசித்தான் சிவா.... இதழ்களின் சுவையை இன்னும் தித்திப்பாக்கும் வகையில் நாவினால் வருடினான்.... மெல்ல அங்கத்தையும் தன் அங்கத்தால் தழுவி சூடேற்றினான்.... சிறிது நேரத்தில் மொத்தமும் முடிந்து, படுக்கையில் களைப்பால் படுத்திருந்தனர் இருவரும்.... இன்னும் இருவரும் கட்டி அணைத்தபடி, தழுவல்களில் திளைத்திருன்தனர்..... இறுதியாக சிவாவிற்கு முத்தம் கொடுத்துவிட்டு, அங்கிருந்து எழுந்து துண்டை கட்டிக்கொண்டு அறைக்கு வெளியே சென்றான்.... சிவா இன்னும் அந்த மயக்கத்திலிருந்து மீளாதவனாக படுக்கையில் கிடந்தான்.... மீண்டும் தன் உடலை யாரோ தீண்டுவதைப்போல உணர்ந்த சிவா, அஷ்வின் அடுத்த ஆட்டத்திற்கு தயாராகிவிட்டானோ? என்று நினைத்தவாறே மெல்ல கண்களை திறந்த சிவா அதிர்ச்சியில் உரைந்தவாறே படக்கென்று எழுந்துவிட்டான்..... காரணம், அங்கு சிவாவின் உடலை வருடியது வினோத்..... அதிர்ச்சியில் உறைந்து நின்ற சிவா தன் உடலை மறைக்க அருகில் இருந்த போர்வையை எடுத்து மறைத்தபடி, “ஏய், நீ யாரு?..... அஷ்வின் எங்க?..... “ என்றான் தடுமாறிய வார்த்தைகளால்....
“பதறாத சிவா.... கூலா இரு... அஷ்வின் பாத்ரூம் போயிருக்கான்.... அதுவரைக்கும் நாம என்ஜாய் பண்ணலாம்....” வினோத் எவ்வித உறுத்தலும் இன்றி கூறினான்....
நடப்பது எதுவும் புரியாமல், வினோத்தை கவனிக்காமல், “அஷ்வின்.... அஷ்வின்.... ப்ளீஸ் ஹெல்ப் மீடா” என்று கத்தினான் சிவா......

சரியாக அந்த நேரத்தில் உள்ளே வந்த அஷ்வின், சிவாவை பார்த்து சிரித்துவிட்டு, வினோத்திடம், “என்னடா பண்ற?.... டைம் ஆச்சு, முடிச்சுட்டு அனுப்புடா.....” என்றான்....
இதை சற்றும் எதிர்பார்க்காத சிவா, திகைத்தவாறே, “அஷ்வின்.... நீயா?.... உன்னைப்போய் நம்பினேன் பாரு..... இப்பவே நான் வெளில போறேன், எதாவது பண்ணிங்கன்னா கத்தி ஊரையே கூப்பிடுவேன் பாத்துக்கோங்க” என்றான்....
“அய்யய்ய.... டேய் வினோத், அந்த வீடியோவை போட்டுக்காமிடா..... சவுண்டு ஓவரா போகுது” அஷ்வின் கூற, வினோத் வழக்கம்போல அந்த காணொளிகளை காண்பிக்க, திகைத்து நின்றான் சிவா....
பதில் கூற முடியாமல் , அழுதான் சிவா....
பலமாக சிரித்த அஷ்வின், “பார்த்தியா?... மத்த எல்லாருக்கும் ஒரு வியூவ் தான்... உனக்காக ஸ்பெஷலா ரெண்டு வியூல ஷூட் பண்ணிருக்கோம்” என்று கூற சிவா, கைகளால் முகத்தை மூடியபடி இன்னும் அழத்தொடங்கினான்....
தன் பணி முடிந்ததோடு ஒதுங்கி நின்ற அஷ்வின், வினோத்திற்கு வழிவிட்டான்.... மெல்ல சிவாவின் அருகில் வந்து சிவாவின் தோள்களை தொட்ட வினோத், சிவாவின் முகத்தை மற்றொரு கையால் உயர்த்தினான்.... வினோத் சற்றும் எதிர்பாராத விதமாக சிரிக்க தொடங்கினான் சிவா...
“டேய், இவனுக்கு பைத்தியம் பிடிச்சிடுச்சு போல .... சிரிக்கிறாண்டா” வினோத் சொல்ல, அஷ்வின் அருகில் வந்தான்....
சிவாவோ இன்னும் பலமாக சிரித்தபடி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வினோத்தின் கைகளை முறுக்கி , கழுத்தில் வைத்தான்....
வினோத்தை சிவா பிடித்த பிடி, உடும்பு பிடியாக இருந்தது.... மெல்லிய தேகமும், அப்பாவி குணமும் கொண்ட சிவாவின் பிடியா இப்படி? என்று ஒருநிமிடம் திகைத்து போனான்... பின்னர் வினோத்தை அப்படியே பிடித்து தள்ள, அவன் தடுமாறி கீழே விழுந்தான்.... அந்த விழுந்ததில் வினோத் நிலைகுலைந்து போனான்....
சிரித்தபடியே, தான் இருவருக்கும் தெரியாமல் கண்ணாடி அருகில் மறைத்து வைத்திருந்த சிறு கேமராவை எடுத்து அஷ்வினிடம் காண்பித்து, “டேய் பாடு, என்னைய பாத்தா சொம்பு மாதிரி தெரியுதா உனக்கு?... ஓத்தா..... நீலாம் லோக்கல் கேடி, நான் இன்டர்நேசனல் கேடிடா.... ஆமா, நீயும்தான் வீடியோ காமிச்ச, நான் எடுத்த வீடியோ பாத்தியா?.... எட்டு மெகாபிக்சல் கேமரா, இன்ப்ராரெட் வசதியும் இருக்கு.... இருட்டுல கூட பயங்கரமா க்லாரிட்டி இருக்கும்.... சங்கர் படத்துக்கு போட்டி போடுற அளவுக்கு தெளிவா இருக்கு பாத்தியா?.... இந்த காலத்துல வந்து பென் கேமரால வீடியோ எடுக்குறீங்களே, இன்னும் வளரவே இல்லையாடா?” என்றான் சிவா....
இவ்வளவு பேச்சையும், செயலையும் அதிர்ச்சி விலகாமல் பார்த்துக்கொண்டிருந்த அஷ்வின், வாய் திறக்காமல் அதிர்ந்து நின்றான்.... கொஞ்சம் நிதானித்தவனாக, “டேய், என்ன மெரட்டுரியா?... போலிஸ்’ல சொன்னா என்ன ஆகும் தெரியும்ல?.... இப்பவே பக்கத்துல இருக்குறவங்கள கூப்பிடவா?... உயிரோட போக முடியாது பாத்துக்க, ஒழுங்கா ஓடிடு” என்று மிரட்டினாலும், அந்த மிரட்டலிலும் இன்னும் அச்சம் கலந்திருந்தது அப்பட்டமாக தெரிந்தது....
இதை கேட்டு இன்னும் பலமாக சிரித்த சிவா, “டேய் கம்முனாட்டி, என்ன மெரட்டுரியா?.... போலீசை கூப்பிட போறியா?.... நீ ராணுவத்தையே கூப்பிடு, முடிஞ்சத பாத்துக்கலாம்.... கூப்பிட்டு நடந்தத நீயும் சொல்லு, நானும் சொல்றேன்.... வர்றவன் உன் மூஞ்சில காரி துப்பிட்டு போவாணுக.... உன்ன பெத்த பாவத்துக்கு உங்க அம்மாவும் அப்பாவும் தூக்குல தொங்குவங்க.... ஹ்ம்ம்.... முடிஞ்சத செய்டா பாடு” என்று பலமான வார்த்தைகளை இன்னும் பலமாக கூறினான்....
“ப்ளீஸ்..... என்ன வேணும் உனக்கு?..... போய்டு.... நான் செஞ்சது தப்புதான்.... நானும் ஒன்னும் பண்ணல, நீயும் ஒன்னும் பண்ண வேணாம்” அஷ்வின் சொன்னான்....
“டேய், என்னைய மொக்கைன்னு நெனச்சியா?... ஒழுங்கா நீ போட்டிருக்குற நகை, வீட்ல இருக்குற பணம், உன் லேப்டாப், மொபைல் எல்லாத்தையும் குடு.... இல்லைனா, இப்பவே இந்த வீடியோ நம்ம லோக்கல் கேபிள் சேனல் முதல் இன்டர்னட் வரைக்கும் போய்டும் பாத்துக்க” என்று மிரட்டும் தொனியில் கூறவே, அதுவரை அமைதி காத்த வினோத் நீண்ட இடைவெளிக்கு பிறகு அஷ்வினை பார்த்து, “டேய் அஷ்வின், அவன் சொன்னத கொடுத்துடு.... சீக்கிரம் அவனை அனுப்பிடுடா.... ப்ராப்ளம் எதுவும் ஆகிடக்கூடாது” என்றான்....

அதைப்பார்த்த சிவா, “பரவால்லையே, இந்த மண்ணாங்கட்டி மண்டயன் கூட அறிவா பேசுறானே.... ஹ்ம்ம்.... சீக்கிரம் தா” என்றான்...
வேறு வழி இல்லாமல் எல்லாவற்றையும் எடுத்துக்கொடுத்தான் அஷ்வின்.... எல்லாவற்றையும் வாங்கிக்கொண்டு கிளம்பும் முன் சிவா, “நான் கூட இங்க வர்ற வரைக்கும் உன்னைய ஏமாத்துறனோன்னு கவலைப்பட்டேன்.... நல்லவேளையா, அந்த கவலைய நீ போக்குற மாதிரி செஞ்சிட்ட.... இனிமே எவனையாச்சும் இப்டி கூப்டு ஏமாத்துனதா தெரிஞ்சா அப்புறம் நேரடியா இன்டர்னட் டீலிங் தான்....” என்று மிரட்டிவிட்டு சென்றான்....
சிவா சென்றபிறகு, அஷ்வினும் வினோத்தும் செய்வதறியாது திணறினர்.... அன்று முதல் அவர்களால் இயல்பாக இருக்க முடியவில்லை.... பொதுவாக அப்பாவி இளைஞர்களை பார்க்கும் அஷ்வின் காமத்தில் பார்ப்பான், இப்போதெல்லாம் பயத்தில் பார்க்கிறான்... நம்ம வினோத்தோ, கிட்டத்தட்ட மனநோயாளியாகவே மாறி, அதீத “போபியோ” வுக்கு ஆட்பட்டுவிட்டான்..... மற்றவர்களின் கண்ணீரில் இன்பம் கண்ட வினோத், இப்போது தன் கண்ணீரை துடைக்க கூட நேரம் இல்லாமல் கவலைப்பட்டுக்கொண்டு இருந்தான்....
எப்படியோ நம்ம வில்லன்கள் இப்படி பயத்தில் சிக்கி தவிக்கும் வேளையில், இந்த வில்லன்களுக்கெல்லாம் வில்லனான வில்லாதி வில்லன் சிவா, அந்த நிகழ்வுக்கு பிறகு சென்றது ராஜாவின் வீட்டுக்கு....
கதை முடியும் தருவாயில் என்ட்ரி ஆகியிருக்கும் ராஜா ஒருகாலத்தில் அஷ்வினிடம் சிக்கி, அடிக்கடி அவன் மிரட்டல்களுக்கு பயந்து வினோத்திடம் சீரழிந்தவன்... உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டு துன்பத்தில் ஆழ்ந்திருந்தான் ராஜா.... எந்த வழியில் ராஜாவை சிவா ஏமாற்றி தன் வழிக்கு கொண்டுவந்து, இத்தகைய நிலைமைக்கு ஆட்படுத்தினானோ, அந்த வழியிலேயே சென்று அஷ்வினை பழிவாங்கினான் சிவா...
“இந்தா இருக்குடா நீ சொன்ன வீடியோ, மற்ற எல்லாமும்... இனி ஜென்மத்துக்கும் அப்டி ஒரு விஷயத்தை அவன் செய்ய மாட்டான்... இனிமேல் இதைப்பத்தி நீ எதுவும் கவலைப்படாத.... நிம்மதியா இரு” சிவா சொல்ல, ராஜா அழுதுவிட்டான்.....
அழுத ராஜா, “சாரிடா.... உன்னை லவ் பண்றன்னு சொல்லி, உனக்கு தெரியாம அஷ்வின் கூட டேட் போனதுக்கு நான் நிறையவே பட்டுட்டேன்டா.... உன்னை ஏமாத்த நெனச்ச நான் , இப்டி ஏமாறுவேன்னு நெனக்கவே இல்ல.... இதையல்லாம் நீ பெருசா நெனைக்காம, எனக்காக நீ இவ்ளோ ரிஸ்க் எடுத்து இத செஞ்சதுக்கு ரொம்ப தாங்க்ஸ்டா.... ஐ லவ் யூடா.... இனி என் மனதால கூட உனக்கு இப்டி நான் துரோகம் நினைக்க மாட்டேன் சிவா....” என்று நெகிழ, அவனை கட்டி அனைத்து தன் அன்பையும், காதலையும், ஆதரவையும் ஒருசேர ராஜாவுக்கு உணர்த்தினான் சிவா....
இதில் யார் செய்தது பெரிய “துரோகம்” என்ற கணக்கெல்லாம் இல்லை..... நம்மை நம்பியவருக்கு நாம் உண்மையாக இருந்தால் நிச்சயம் எத்தகைய சூழலிலும் நம்மை காப்பாற்றிக்கொள்ளலாம்.... “நான் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை என் எதிரிதான் தீர்மானிக்கிறான்” என்ற மாவோவின் கருத்தை போல, நீங்கள் விதைக்கும் விதைதான், விளைவாக விளையும் என்பதை உணர்ந்து உண்மையாக இருந்தால், அதற்கான உன்னத விளைவை நாம் பெறுவோம்.....

2 comments:

  1. Nice Narration na... NA ipo dha indha story ah paducha... as usual superb....!!

    ReplyDelete