Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Friday 5 October 2012

கே- புரிந்ததும், புரியாததும்.....



"நான் ஒரு கே" என்று சொன்னால் பெரும்பாலானவர்கள் ஏதோ தீண்டத்தகாதவர்களை பார்ப்பதைப்போல பார்க்கிறார்கள்.... இதுவும் கூட ஒரு வகையான நவீன தீண்டாமைதான்... இது தவறல்ல, நோய் அல்ல, சாதாரண விருப்பம் சம்மந்தப்பட்ட ஒன்றுதான் என்று நம் நாட்டில் இன்னும் புரிந்துகொள்ள தருணம் அமையவில்லை.... சரி, இதைப்பற்றி தெரியாதவர்கள் தவறாக புரிந்துகொள்வது ஒருபக்கம் இருக்கட்டும், நம்மைப்போன்ற ஒத்த உணர்வு கொண்டவர்கள் கூட இதைப்பற்றி தவறுதலான அபிப்ராயம் வைத்திருப்பதுதான் வருத்தமாக இருக்கிறது.... "நான் ஒரு கே" என்று நம்மைப்போன்றவர்களிடம் தெரிவித்தால் நான் மறுகணமே நான் போகப்பொருளாக, ஒரு செக்ஸ் மெஷினாக பார்க்கப்படுகிறேன்.... அதாவது, அந்த நிமிடமே நான் மனிதன் என்கிற தகுதியை அவர்களிடத்தில் இழந்துவிடுகிறேன்.... அதற்கு காரணமும் உண்டு....

மாற்றுப்பால் விரும்பிகளை (அதாவது ஸ்ட்ரைட்) விட ஒரு பால் விரும்பிகள் காமத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.... தெளிவாக சொல்லனும்னா காமத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.... சாதாரணமாக ஒருவர் செக்ஸ் பற்றிய முழுமையாக தெரிந்துகொள்வதற்கு முன், ஒரு கே பல முறை செக்ஸில் ஈடுபட்டுவிடுகிறான்.... பின்னாளில், அதைப்பற்றிய முழுமையான அறிவு இல்லாமல் கே உறவை தொடர்கிறான்.... கடைசிவரை ஒரு தெளிவான மனநிலைக்கு வராமலே திருமணம், குழந்தைகள் என்று சென்றுவிடுகிறான்.... பின்னர், இது மனதை அழுத்தி மிகப்பெரிய மன நோய்க்கு கூட ஆளாக்கி விடுகிறது.... இதற்கு முக்கியமான இரண்டு காரணங்கள் உண்டு.... முதல் மற்றும் முக்கிய காரணம், காமத்திற்கான வாய்ப்புகள் ஒரு கே'க்கு அதிகம் கிடைக்கிறது.... அந்த வாய்ப்புகளை மறுக்காமல் ஏற்றுக்கொள்கிறான்.... அந்த வாய்ப்பு தன் நண்பன் மூலமாகவோ, பயணங்களின் போதோ, இணையத்தின் மூலமோ எளிதாக கிடைத்து விடுகிறது..... இது சாதாரணமாக பெண்கள் மீது நாட்டம் கொள்ளும் நபர்களுக்கு கிடைப்பதில்லை... அதனால் அப்படி செக்ஸ்'கு முக்கியத்துவம் கொடுப்பதாக சிலநேரம் தோற்றம் கூட அளிக்கிறது.... இரண்டாவது காரணம், "இது சரியா? தவறா? என்கிற குழப்பம்.... எப்போது இந்த குழப்பம் ஒருவனது மனதிற்குள் எழுகிறதோ, அப்போதே அதை மேலும் மேலும் செய்ய விழைவது மனித மனதின் இயல்பு.... அதனால் இதற்கு காரணம், இது பற்றிய முழு தெளிவான அறிவும் கல்வியும் இல்லாமை... கே என்பதற்கும் மாற்றுப்பாலினத்தவருக்கும் இன்னும் வித்தியாசம் தெரியாமல் பல நபர்கள் இருக்கிறார்கள்.... "எனக்கு பசங்களை பார்த்தாதான் கிளர்ச்சி உண்டாகுது, அப்போ நான் ட்ரான்ஸ்ஜென்டரா?" என்று ஒரு நண்பர் கேட்பது இன்னும் வியப்பாக இருக்கிறது எனக்கு.... இரண்டுமே சமூகத்தால் அங்கீகரிக்கப்படவேண்டிய விஷயங்கள்தான் என்றாலும் இரண்டிற்கும் உள்ள அடிப்படை வேறுபாடுகள் கூட இன்றைக்கு பலருக்கும் தெரியாமல்தான் தங்கள் கே வாழ்வை தொடர்கின்றனர்.... இதுவரை நான் பல கே நண்பர்களிடம் பேசி இருக்கிறேன்....

 பெரும்பாலும் அனைவருமே மன ரீதியாக அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.... பேசும்போதே பலர் அழுவதுண்டு.... பலரிடமும் பேசும்போது, மறுமுனையில் நான் கேட்கிறேனா? இல்லையா? என்றெல்லாம் பார்க்காமல் மடை திறந்த வெள்ளமாய் பேசுவதுண்டு.... நிஜமாகவே இத்தனை காலம் அவர்கள் யாரிடத்திலும் சொல்லாமல், சொல்ல முடியாமல் நிறையவே புதைத்து புதைத்து அவர்கள் மனம் கிட்டத்தட்ட ஒரு குப்பை தொட்டியாய் மாறிவிட்டது என்றும் சொல்லலாம்.... பொதுவாக தான் இருக்கும் இடத்தில் மற்றவர்களைவிட ஒரு கே நிச்சயமாக தெளிவானவாகவும், பொருப்பானவாகவும் இருக்கிறான்...
 ஆனால், பலராலும் நண்பர்களிடத்தில் பழகுவது ஒரு போராட்டமாகவே இருக்கிறது.... பெரும்பாலும் தன் நண்பன் மீது வைத்திருக்கும் நட்பு காதலாக மாறி விடுவதுண்டு, அத்தகைய தருணத்தில் கே பற்றிய நிலைப்பாடு அவர்கள் நண்பரிடத்தில் வேறு மாதிரியாக இருக்கலாம்.... அந்த தருணத்தில், அவர்கள் நண்பனாக பழகவும் முடியாமல், தன் விருப்பத்தை சொல்லவும் காட்டவும் முடியாமல் தவித்து நண்பர்கள் வட்டத்தை சுருக்கிக்கொள்கிரார்கள்..... நான் சொன்ன எல்லாமே மனப்போராட்டங்கள்தான், அதை தீர்ப்பது ஒன்றும் பிரம்ம சூத்திரம் அல்ல, உங்களை ஒத்த கருத்துடயவர்களிடம் மனம் விட்டு பேசினாலே போதும், அந்த உளவியல் கலந்தாய்வே போதும்.... நான் இதுவரை கேட்டவரை இப்போது ஓரின விரும்பிகள் எல்லோருக்கும் இரண்டு ஒற்றுமைகள் இருக்கிறது.... ஒன்று, பெரும்பாலானவர்கள் சிறுவயதில் பாலியல் வன்புணர்வுக்கு ஆளானவர்கள்.... மழலையாக இருக்கும்போதோ, விவரம் தெரியாத நாட்களிலோ யாரோ சிலரால் பாலியல் ரீதியாக பயன்படுத்தப்பட்டவர்கள்.... இரண்டாம் ஒற்றுமை, விளையாட்டில் ஆர்வமின்மை.... இந்த ஒற்றுமை எனக்கே ஆச்சரியமாக இருந்தாலும், சமீபத்தில் ஒரு சமூக வலைதளத்தில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் பெரும்பாலானவர்கள் விளையாட்டில் ஆர்வமில்லாதவர்களாக இருக்கிறார்கள்......

இப்படி நம்முள் எத்தனையோ ஒற்றுமைகள், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் மொத்தமாக நாம் இந்த சமூகத்தில் "புறக்கணிக்கப்பட்டவர்களாக" மட்டுமே இன்னும் இருக்கிறோம்.... மற்ற ஒற்றுமைகளும் சில இருக்கின்றன..... அதாவது, பொதுவாக கே உணர்வு இருப்பவர்கள் ரொம்பவும் சென்சிட்டிவாக இருப்பார்கள், கடவுள் பக்தி உள்ளவர்களாக இருக்கிறார்கள்...... இதைப்பற்றி மேலும் நான் அடுத்த பதிவில் கூறுகிறேன்...... அத்தி பூத்தாற்போல சில நேரங்களில் சிலர் இந்த விஷயங்களை ஏற்பதும் உண்டு.... நிச்சயம், இது நல்ல மாற்றத்திற்கான தொடக்கமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இருப்போம்......

1 comment:

  1. atthanstum unmai nanbarey.... yevvakavu thelivaaha pesuhireerhal. gay enraal avasthai dhaan. aangalai parka pidikym alavirku penkal meedhu naatamillaye.... saalayil alagana aanum pennum senral kooda aanai dhan manam paarka thoonuiradhu. pennai paarka viruppamey illaye.. idhan mudivu dhan enna?

    ReplyDelete