Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Sunday 6 January 2013

ஆதலினால் காதல் செய்வீர்......

என் கதையை படித்த நண்பர் ஒருவர் ஒரு வித்தியாசமான கேள்வியை கேட்டார்.... "ஓரின காதல் சாத்தியமா?" என்பதுதான் அந்த கேள்வி.... அதற்கு பதிலாக நான், "ஆண்- பெண் காதல் சாத்தியம் என்றால் இதுவும் சாத்தியம்தான்" என்றேன்.......பொதுவாக, காதல் என்பது "இனம், மொழி, மதம், நாடு" எல்லாம் கடந்தது என்பார்கள், என்னை பொருத்தவரை காதல் என்பது "பால் " வேறுபாடும் கடந்தது........  சமீபத்திய ஒரு ஆய்வு கூறுவது என்னவென்றால், "இல்வாழ்க்கையில் ஒரு ஆணும் பெண்ணும் ஒன்றாக வாழ்வதில் இருக்கும் மகிழ்ச்சியைவிட, ஒரு ஆணும்-ஆணும் இணையும் இல்வாழ்க்கையில் அதிக சந்தோசம் இருக்கிறது....." விட்டுக்கொடுத்தல், புரிதல், புரிந்துணர்வு என்று பல காரணங்களையும் ஆய்வாளர்கள் இதற்கு காரணமாக கூறுகிறார்கள்.... அதே நேரத்தில், இத்தகைய இல்வாழ்க்கையில் ஈடுபடும் நபர்கள் தத்தெடுக்கும் உரிமை சில நாடுகளில் உண்டு.... அப்படி தட்தெடுக்கப்படும் குழந்தைகள் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பின்பு தனித்து சென்றுவிடுகிறார்கள் அல்லது தனித்துவிடப்படுகிறார்கள்.... அதற்கு காரணம் இரண்டு ஆண்களால் ஒரு குழந்தையை திறம்பட பாசத்துடன் ஒரு குழந்தையை வளர்க்க முடியாதது அல்லது குழந்தை அத்தகைய பெற்றோரிடம் வளர்வதை விரும்புவதில்லை என்று காரணங்களை சொல்கிறார் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் மார்க் ரெக்னேரஸ்.....

பிறக்காத குழந்தைக்கு பெயர் சூட்டு விழா நடத்துவது போல இருக்கிறது, இப்போ நான் பேசிக்கொண்டு இருப்பது.... இன்னும் சட்டரீதியாகவே ஓரின சேர்க்கையை அங்கீகரிக்காத ஒரு நாட்டில், இத்தகைய தத்தெடுக்கும் பிரச்சினை பற்றி பேசுவது அபத்தம்தானே!.... சரி வாங்க, நாம் முதலில் சொன்ன ஓரின காதலுக்கு போவோம்..... கதைகளில் எழுதுவது, கதைகளோடு முடிந்துவிடுவதாக பலர் நினைக்கிறார்கள்.... நிச்சயம் இல்லை, இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக நம் சமூகத்தில் ஓரின காதல்கள் எட்டிப்பார்க்க தொடங்கியிருக்கு.... பலரின் மனதிற்குள் சொல்லப்படாத காதல்கள், சிலரால் சொல்லப்பட்டு வருகிறது ஆரோக்கியமான தொடக்கம் என்று நம்பலாம்... ஏனோ நம் நாட்டில் ஒரு கே என்றதும், சக ஓரின விருப்பம் கொண்டவனே ஒரு போகப்பொருள் போல பார்க்கிறான்... பலரின் மனதிற்குள் காதல் எண்ணம் இருந்தாலும், இங்கு அத்தகைய "காதல்"களை எதிர்பார்க்க முடியாது என்று ஊருடன் ஒத்துப்போவதாக எண்ணி அவர்களும் அந்த போக உலகிற்குள் தங்களை அர்ப்பனித்துக்கொள்கிறார்கள்.... அத்தகைய தேடலுடன் இருக்கும் நபர்களுக்கான ஒரு பதிவு இது.... முதலில் நீங்கள் காதலிக்க போவதாக எண்ணம் கொண்டவராக இருந்தால், உங்கள் காதலை எந்த எல்லைவரை கொண்டு செல்லப்போகிறீர்கள்? என்பதை முடிவு செய்துகொள்ளுங்கள்.... காரணம், மேலை நாடுகளுக்கும் நம் நாட்டுக்கும் உள்ள குடும்ப முறை.... பதின் வயது வந்ததுமே அங்கெல்லாம், அவரவர் வாழ்க்கையை அவரவர் தீர்மானித்துக்கொள்ளலாம் என்கிற நிலைமை, அத்தகைய நாடுகளில் இதை பெரிதாக பொருட்படுத்தவும் மாட்டார்கள் என்பதால் பெரிய அளவில் பிரச்சினை இருக்காது...... ஆனால், நம்  நாட்டிலோ, பிறப்பது முதல் பதின்வயது தாண்டி, ஒருவனுடைய திருமணத்திற்கு பின்புவரை அவனை தன் "பிள்ளையாக" மட்டுமே பார்க்கும் பெற்றோர், சாதி மாற்றி திருமணம் செய்தாலே அரிவாளை தூக்கும் உறவுகள், இன்னும் கே பற்றிய தெளிவான மனநிலை இல்லாத சமூகம் .... இவற்றையெல்லாம் தாண்டி/மீறி உங்கள் காதலை, இல்வாழ்க்கை வரை கொண்டு செல்லும் "இல்வாழ்க்கை காதலா?".... இப்படி பல எதிர்ப்புகளையும் மீறி, உங்கள் வாழ்க்கையை அத்தகைய நபருடன் கொண்டுசெல்ல போகிறீர்களா? அல்லது, வழக்கமான வீட்டில் பார்க்கும் திருமணம் வரை, காதலிக்கும் "டேட்டிங் காதலா?" என்பதை தீர்மாநித்துக்கொள்ளுங்கள்.... இன்னும் சில வகை காதல்களும் இருக்கின்றன..... ஒரு பெண்ணுடன் திருமண பந்தம் ஏற்ப்பட்ட பிறகும், தன் கே காதலை தொடர்வது இதில் வில்லங்கமான காதல்.... காரணம், இதில் மதில் மேல் பூனை போன்ற நிலைமைதான்.... எந்த பக்கம் விழுந்தாலும், அது புதைகுழிதான்..... அடுத்த காதல், வித்தியாசமான காதல்.... அதாவது, தான் பல ஆண்களுடன் உறவுகொண்டால் பால்வினை நோய்கள் வரலாம் என்ற காரணத்தால், நிரந்தரமாக தன் தேவைகளை பூர்த்தி செய்ய இப்போதெல்லாம் இந்த வகை "தற்காப்பு காதல்"கள் அதிகமாகி வருகின்றன..... இதை காதலென்று சொல்லக்கூடாதுதான், இருந்தாலும் அவர்கள் சொல்வது இதை காதல் என்று....

சரி மற்ற காதல்களை விட்டுவிடலாம், பிராதனமான காதலை பற்றி இப்போ பேசலாம்.... இங்கே நிறையபேருடைய விருப்பம், ஒரு உண்மையான காதலன் வேண்டும் என்பதுதான்.... அப்படி நீங்கள் எதிர்பார்க்கும் முன்னர், அந்த எதிர்பார்ப்பை உங்கள் காதலனுக்கும் பூர்த்தியாகும்படி நீங்களும் உண்மையாக இருக்க வேண்டும்.... காதலனை தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனம் தேவை.... பொதுவாகவே கே நபர்கள், மிகவும் சென்சிட்டிவ் மனம் கொண்டவர்கள்.... பொதுவாக செக்ஸ் பற்றிய பேச்சுக்களை மட்டுமே, சக ஓரின விரும்பிகளிடம் கேட்டு, ஒருவன் இயல்பாக பேசினால் கூட அவன் மீது காதல் பிறந்துவிடுகிறது..... இங்கே செக்ஸ் பற்றிய பேச்சை தவிர்த்து, இயல்பான பேச்சு பேசும் கே’க்கள் கூட மிகக்குறைவு என்பது வேறு விஷயம்.... கடுமையான வெயில் மிகுந்த ஒரு பாலைவனத்தில் தாகத்தால் தவிக்கும் ஒருவனுக்கு, குடிக்க ஒரு குவளை தண்ணீர் கொடுப்பவன் தெய்வமாக தெரிவான்.... அதைப்போல, சமூகத்தாலும், சுற்றத்தாலும் புறக்கணிக்கப்படும் ஒரு கே’விடம் ஆறுதலான வார்த்தைகள் பேசுபவன் காதலனாக தெரிவதும் நாம் தவிர்க்க முடியாத ஒரு எண்ணம்தான்..... என் சிறுகதையான “மார்ல சாஞ்சு அழனும்” படித்தவர்களுக்கு நான் சொல்வது புரியும்..... ஒரு காதல் கொஞ்சம் புளித்துப்போனால், அடுத்த காதலை தேடிப்போகும் மனநிலை கொண்ட ஒருவனுடன் காதல் கொண்ட ரொம்பவும் காதல் மீது மதிப்பு வைத்திருக்கும் நபரின் காதல் தான் கதை.... இந்த இரண்டு பிரிவினரும் நம் கே சமூகத்தில் நிறைந்து கிடக்கிறார்கள்.... அத்தகைய நபர்களை கண்டுபிடித்து காதலிப்பது கொஞ்சம் சிரமமான காரியம் என்றாலும், நடக்க கூடிய ஒன்றுதான்..... கனிவான பேச்சும், அரவனைப்பான வார்த்தைகளும் உங்களை நெருங்கும்போது, மிகுந்த கவனத்துடன் கையாளுங்கள்.... ஒன்றின் மீது நீங்கள் அதிகப்படியான நம்பிக்கை வைத்திருந்தால்தான், அதை இழக்கும்போது நீங்கள் அதிகமான மன வேதனை அடைவீர்கள்...... அதனால், அதிக நம்பிக்கை வைக்கும் முன்பு ஆழ்ந்து யோசிப்பது அவசியம் என்பதை உணருங்கள்....  இன்னொரு பிரிவு நபர்களுக்கும் நான் சொல்லிக்கொள்கிறேன், இந்த உலகத்தில் யாருமே “made for each other” கிடையாது..... அமையும் வாழ்க்கையை விட்டுக்கொடுத்தல்கள், புரிதல்கள் மூலம் மாற்றி அமைத்துக்கொள்பவந்தான் இங்கே எல்லாவற்றிலும் வெற்றிபெருகிறான்.... புதியதை பார்த்ததும் பழையதை தூக்கிப்போடும் மனநிலையை விட்டொழியுங்கள்.... அப்படி நீங்கள் தொடர்ந்தால், வாழ்க்கையில் எதிலுமே திருப்தி அடையாத மனநிலையால் அதீத “மனக்கொளாறு”க்கு ஆளாக நேரிடும்..... பிடித்தது கிடைக்கும்வரை தேடுவது காதல் இல்லை, கிடைத்ததை பிடித்ததாக ஆக்குவதுதான் காதல்.... நீங்கள் எளிதாக தூக்கிப்போடும் காதல், ஒருவரை எந்த அளவுக்கு பாதிக்கும்? என்பதை என்றாவது உணர்ந்திருக்கிறீர்களா?..... இந்த கே உலகம் ரொம்ப சின்ன உலகம்.... அதில் துரோகங்களும், ஏமாற்றங்களும், அவமானங்களும் நிறைந்து காணப்பட நீங்கள் காரணியாக இருந்து விடாதீர்கள்..... அதீத கவனத்துடன் உங்கள் காதலை தேர்ந்தெடுத்து, உங்கள் காதலனுடன் சிறகடித்து பறக்க வாழ்த்துகள்......

4 comments:

  1. விஜய்,
    உங்களுடன் நான் முழுக்க முழுக்க உடன்படுறேன். நான் காலெஜ் 2ம் ஆண்டு படுக்கும்போது என் நண்பனை சந்தித்தேன். முதலில் எனக்குத்தான் அவன்மீது காதல் பிறந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அவனுடன் பழகும் வாய்ப்பை ஏற்படுத்தி நன்கு பழகியபின் என் நிலையைப் பற்றி விளக்கினேன். 2 பேரும் எப்பவும் காதல் கதைகளைத்தான் பேசுவோம். பொதுவா நான் என்னை பெண்ணாக பாவித்தே பேசுவேன். அடிக்கடி முத்த பரிமாற்றம் இருக்கும். ஒரு ஆண் பெண் காதல் போலவே இருந்தோம். மொத்தத்தில் 2 முறை மட்டுமே செக்ஸ் வைத்துக்கொண்டோம். அதுவும் இணையத்தில் பேசப்படும் உறவு போல அல்லாமல், அந்த வயதில் எங்களுக்கு தெரிந்த மாற்றி மாற்றி கையடித்துவிட்டுக் கொண்டோம். கட்டி பிடிப்போம், முத்தம் கொடுப்போம். பின் கல்லூரி முடிந்தது. வேலைக்காக பிரிந்தோம். பின் 2 வருடங்கள் கழித்து மறுபடியும் போன்கள் மூலம் இணைந்தோம். நான் வெளிநாடு வந்துவிட்டேன். அவன் இன்னும் இந்தியாவில் இருக்கிறான். என்னோட நிட்சயதார்த்தின்போது சந்தித்துக்கொண்டோம். ஒன்றாக கட்டிபிடித்து தூங்கியும் உறவுக்கு போகவில்லை. விடிய விடிய தூங்கவில்லை என்பது நிதர்சனம். இப்போ திருமணம் முடிந்து எனக்கு குழந்தை இருக்கிறது. இன்றும் எனக்கு ஒரு நல்லது நடந்தாலோ அல்லது கஷ்ட்டம் வந்தாலோ நான் பகிர்ந்துக்கும் முதல் ஆள் என்னவந்தான். எங்களுக்குள் இருக்கும் உறவை நட்பு என்று பேசாமல், இன்றுவரை நாங்கள் காதலர்கள் என்றே இருவரும் பேசிக்குவோம்... உங்களுடைய பல கட்டுரைக்கு நான் ஒத்துப்போறேன். எங்கள் காதலை முக அழகு தீர்மானித்திருக்கலாம். ஆனால் செக்ஸ் அதில் முக்கிய பங்கு வகிக்கவில்லை. என்னுடை குடும்ப உறவில் (மனைவியுடன்) என் காதல் இடஞ்சலை ஏற்படுத்தவில்லை... ஆண்களூக்கு ஆண்களுடன் கண்டிப்பா காதல் வரும். அது ஆண் - பெண் காதல் போலவே இருக்கும். சொல்லப் போனால் ஆண்-பெண் காதலைவிட பாதுகாப்பாக இருக்கும் என்பது என்கருத்து. இப்பவும் எனக்கு இரு கஷ்ட்டம் வந்தால், அவனோட மார்பில் 5 நிமிசம் சாய்ந்திருந்தாலோ அல்லது அவனோட உள்ளங்கையை கோர்த்திருந்தாலோ என்னோட எல்லா பிரச்ச்னையும் நொடியில் பறந்துபோகும். என் மனைவிக்கும் இப்படியே... மனைவிக்கும் என் காதலனுக்கும் எந்த வித்தியாசத்தையும் நான் உணரவில்லை... வருசத்தில் ஒருநாளோ அல்லது இரண்டுநாளோ அவன் வீட்டுக்கு குடும்பத்தோட போவேன். நல்லா ஊர் சுற்றுவோம், சாப்பிடுவோம், குடும்பத்துடன் சந்திப்பாக இருப்போம். மிஞ்சிப்போனா ஒரு அரைமணி நேரம் தனியா பேசுவோம். பழைய காலங்களை நினைவுபடுத்திக்குவோம். காதலை புதுப்பிச்சிக்குவோம். பின் வாரம் ஒருமுறை போனில் உரையாடுவோம்... காதலுக்கு உடலுறவு முக்கியமில்லை. காதலை எப்படி எழுத்தில் வடிக்கிறதுன்னு தெரியல. ஆனால், ஒத்த அலைவரிசையுடைய என் நண்பர்கள் என்னை உண்ரமுடியும். ஏதோ இங்கே பகிர்ந்துக்கனும்னு தோணிச்சி. பகிர்ந்துக்கிட்டேன்.

    மேலும் இதுவரை கல்யாணத்திற்குமுன் 5 நபருடன் நான் உடலுறவு வைத்திருந்தேன். ஆனால் எவர்மீதும் எனக்கு காதல் வரவில்லை. இப்போ என் மனைவி & காதலுடன் நன்றாக இருக்கின்றேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே..... நீங்கள் சொல்வதைப்போன்ற அரிதான காதல்களை நானும் கண்டுள்ளேன்...... உங்களுக்கும் உங்கள் காதலருக்கும் ஒரு ராயல் சல்யூட்..... என் சிறுகதையான "சரவணன்-மீனாட்சி" கூட அப்படிப்பட்ட கதைதான்.... படித்திருக்கீர்களா?

      Delete
    2. All the best for ur love.. unga antha nanbaruku kalyanam aeirucha nu sollave illaye..
      Just eager to know..

      Delete
  2. உங்களோட எல்லா போஸ்ட்டும் படிச்சிருக்கேன். பலவிடயங்களில் ஒத்துப் போவதாலே உங்களை தொடர்ந்து பின்பற்றுறேன்..

    ReplyDelete