Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Sunday, 6 January 2013

மறுக்கப்பட்ட இனங்களுள் மறைக்கப்பட்ட இனம் - "லெஸ்பியன்".....

-->


        பொதுவாக "ஓரின விரும்பிகள்" என்று சொன்னதும் பெரும்பாலும் நினைவுக்கு வருவது இரண்டு ஆண்களின் உறவு மட்டுமே.... ஒருபால் விருப்பம் என்றால் ஆண்கள் மட்டுமே நினைக்கப்படுவது ஒருபுறம் என்றால் இத்தகைய ஒருபால் உறவு தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரங்களில் கூட சத்தமில்லாமல் புறக்கணிக்கப்படுவது லெஸ்பியன்.... ஆண் ஆதிக்க சமுதாயமான நம் சமூகத்தில் இன்னும் பெண்களுக்கு அடிப்படை உரிமைகள் கூட முழுமையாக கொடுக்கப்படாத சூழலில், இதைப்போன்ற பால் தொடர்பான உரிமைகளை பற்றி  சொல்லவே வேண்டாம்....  LGBT என்று பால் விருப்பம் தொடர்பான ஒருங்கிணைப்பில் முதல் இடத்தை லெஸ்பியன்'களுக்கு கொடுத்துள்ளார்கள்..... ஆனால், முதல் இடத்தில் அந்த பெயரை குறிப்பிட்டதோடு, அதற்கு மேல் எவ்வித விழிப்புணர்வையும் அந்த பெண்களுக்கு கொடுக்கவில்லை.... என் சிறுகதையான "தொடர்பு எல்லைக்கு வெளியே" எழுதும்வரை எனக்கே கூட அப்படிப்பட்ட பெண்களின் மனநிலையை உணர முடியவில்லை.... சமீப காலத்தில் கே'க்களுக்காக பெருகி இருக்கும் வலைத்தளம், அமைப்புகள், மக்களின் தெளிவு என்று எதுவுமே லெஸ்பியன் பெண்களை எட்டவில்லை.... தங்களுக்குள் புதைத்துக்கொண்ட எண்ணங்கள் ஒரு கட்டத்தில் பொங்கி எழுந்து , அது பல பெண்களின் தற்கொலையாக மாறுவதை காணமுடிகிறது... 

           "தொடர்பு எல்லைக்கு வெளியே" சிறுகதை கூட கதை அல்ல, பல உண்மை நிகழ்வுகளின் நினைவு..... அப்படி உண்டாகும் இறப்புகளுக்கு காரணம் கூட முழுமையாக பால் ரீதியான காரணமாக காட்டப்படாமல், அது திரிக்கப்பட்டும், மறைக்கப்பட்டும் வேறுவிதமான காரணங்களாக உருவாக்கப்படுகின்றன.... பொதுவாக ஆண்களைவிட பெண்கள் மிகவும் சென்சிட்டிவ் மனம் உடையவர்கள்.... அதிலும் லெஸ்பியன் பெண்கள் இன்னும் அதிக சென்சிட்டிவ் ஆனவர்கள்..... அதனால், அதிக அன்பும், பிணைப்பும் கொண்ட அவர்களால், தங்களது பிரிவை எளிதாக மறக்க முடியாது..... விளைவுதான் தற்கொலை எண்ணங்களும், தற்கொலைகளும்..... நம் நாட்டைப்போன்ற "கலாச்சாரம், நாகரிகம்" என்று சொல்லப்படுகிற கட்டமைப்பை கொண்டுள்ள நாடுகளில் பெண்கள் நிச்சயம் தங்கள் சுய அடையாளத்தை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைக்க வெகு தொலைவு நாம் செல்லவேண்டும்.... பெண் உரிமைகளுக்காக பெண்ணியம் பேசிடும் எந்த பெண்ணியவாதிகளும், சமூக ஆர்வலர்களும் பெண்ணுடைய பாலியல் உரிமைகளுக்காக குரல் கொடுப்பதில்லை....

               பாரதியும், பெரியாரும் இருந்திருந்தால் இந்த நிலை மாறியிருக்கலாம்.... இன்னும் முழுமையாக மேற்குலக நாடுகளில் கூட லெஸ்பியன் தொடர்பாக முழுமையான விழிப்புணர்வும், மக்களின் மனநிலையும் மாறிடாத நிலையில் பிற்போக்கு சிந்தனை தலைதூக்கி நிற்கும் நம் நாட்டில் அவ்வளவு எளிதாகவும், விரைவாகவும் இவ்வளவு பெரிய மாற்றத்தை எதிர்பார்க்க முடியாதுதான்....




           கே பற்றிய விழிப்புணர்வு பாதையோடு லெஸ்பியன் பற்றியும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்ப்படுத்த தாமதித்தால் நிச்சயம், அது தனித்துவிடப்படும்.... எந்த காலத்திலும் அதைப்பற்றிய விழிப்புணர்வை தனியாக கொண்டுசெல்வது கடினம்.... ஆணோ, பெண்ணோ, மூன்றாம் பாலினமோ எவராக இருந்தாலும் தங்கள் பால் விருப்ப உரிமையை எதற்காகவும் விட்டுக்கொடுக்க வேண்டியதில்லை.... உரிமைகள் என்று சொன்னபிறகு, அதை பறிப்பது என்பது மிகத்தவறு.... அந்த தவறை நம் அரசும், சமூகமும் செய்துவருவதை தடுக்க லெஸ்பியன்’களையும் இந்த விழிப்புணர்வு பயணத்தோடு கொண்டுசெல்ல வேண்டும்..... தனி நபரின் உரிமைகளை மதிக்கும் சமூகம் உருவாக்க அவர்களையும் ஒன்றிணைத்து செல்வது அவசியம்.....

1 comment:

  1. Indrum intha samugam aan aathikathin pidiyil than ullathu. eduthukkattu marukkapattum maraikkapadum lesbian pengalin unarvugalum urimaigalum

    ReplyDelete