Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Wednesday, 9 January 2013

வணக்கம்......

உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளின் உள்ளாகவும் ஒருபால் ஈர்ப்பு எண்ணம் ஆழப்புதைந்திருக்கும்..... அதற்கான வாய்ப்பும், சந்தர்ப்பமும், தேவையும் உண்டாகும்போது அந்த எண்ணங்கள் வெளிப்படும்
                            -   சிக்மண்ட் பிராயிட்...

“பெரும்பாலான நபர்கள் வலது கை பழக்கம் உள்ளவர்களாக இருப்பதால், இடது கை பழக்கம் உள்ளவர்களை, இயற்கைக்கு எதிரானவர்கள் என்று சொல்ல முடியுமா?.... அதைப்போலத்தான் பெரும்பாலானோர் எதிர்பால் ஈர்ப்பில் விருப்பம் கொண்டிருந்தாலும், ஒருபால் ஈர்ப்பு என்பதும் இயற்கையே!”
                           -   மாக்னஸ் ஹர்ஷ்பீல்ட்...

 “கே உரிமை என்பது ஒரு மனிதனின் அடிப்படை உரிமை.... அதை தடுப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை”
-   ஹிலாரி கிளிண்டன்....
இப்படி உலகில் பலரும் போற்றும் பலரும் ஒருபால் ஈர்ப்புக்கு ஆதரவாக சொன்ன கருத்துகள் இவை.... ஒருவரது படுக்கையறையில் எட்டிப்பார்த்து, அங்கு நடப்பதை தவறென்று சொல்ல சட்டத்துக்கோ, அரசுகளுக்கோ, சமுதாயத்துக்கோ உரிமை கிடையாது.... அறிவியலும், மருத்துவமும், வரலாறும் தவறாக சொல்லாத ஒரு விஷயத்தை, சிலரது தவறான வழிநடத்தல்களால் தவறாக பார்க்க தொடங்கிவிட்டோம்....
நிச்சயம் ஒருநாள் ஒருபால் ஈர்ப்புக்கு ஆதரவான சட்டமும், மக்களின் மனநிலையும் உண்டாகும் என்பதில் எனக்கு துளியும் சந்தேகம் இல்லை... ஆனால், அதற்கு முன்பு “ஒருபால் ஈர்ப்பு என்றால் என்ன?” என்று நீங்களும் நானும் அறிந்துகொள்ள வேண்டும்... இது தவறில்லை என்று நாம் நம்பி உணரவேண்டும்.... வெறும் “செக்ஸ்” மட்டுமே ஒருபால் ஈர்ப்பு என்கிற எண்ணம் மாறி, அதை தாண்டிய உணர்வுகளும், வாழ்க்கையும் உண்டு என்பதை நீங்கள் உணரவேண்டும்....
இப்படி நாம் செய்யும் தவறுகளையும், நினைத்திருக்கும் தவறான எண்ணங்களையும் முதலில் மாற்றிக்கொண்டு, அதன்பிறகு சமுதாயத்தின் மாற்றத்தை வலியுறுத்தலாம்....
இந்த வலைப்பூ நிச்சயம் அதற்கான ஒரு தொடக்கமாக இருக்கும்.....
ஒருபால் ஈர்ப்பு என்றால் வெறும் செக்ஸ் மட்டுமே! என்கிற எண்ணம் மாறி, இன்னும் ஆயிரம் விஷயங்கள் இருப்பதை உணரவைக்கும்... உங்களுக்கு தன்னம்பிக்கை வரவழைக்கும், தவறுகளை எச்சரிக்கும், உங்களை உங்களுக்கே அடையாளம் காட்டும்....
காமம் கலக்காத கதைகள், வரலாறு அறிவியல் நிறைந்த கட்டுரைகள், தன்னம்பிக்கை நிரம்பிய விழிப்புணர்வு பகுதிகள், ரௌத்திரம் நிறைந்த விமர்சனங்கள், மனம் திறந்த உண்மை நிகழ்வுகள் என எல்லாம் நிறைந்த ஒரு முழுமுதற் தளமாக இது இருக்கும்....
இது நான் மட்டும் பேசும் இடமல்ல, உங்களுக்கான வாய்ப்பையும், எண்ணங்களை பகிர வாய்ப்புகளையும் கொடுக்கும் களம்.... நிறைய பேசுவோம்.....

                           அன்புடன்,
                     உங்கள் விஜய் விக்கி.....



நமக்காக போராட, நாம் இணைந்து போராடுவோம்.....

"நவீன தீண்டாமையால் ஒடுக்கப்பட்டு வாழும் இந்த கே சமுதாயத்தை, இந்த நாட்டில் எவ்வித மன உறுத்தலும் இன்றி அனைவரும் ஏற்கும் நாள்தான் நமக்கான வெற்றி.... அதற்கான ஒரு சிறு உந்துதலாக, கே பற்றிய மக்களின் தவறான எண்ணங்களை நீக்கிடவும், நம்மை பற்றி நாமே புரிந்துகொள்ளவும் இந்த தளம் நிச்சயம் உதவும்.... மனம் நொந்து வருபவர்கள், நிச்சயம் தலை நிமிர்ந்து செல்லும் அளவிற்கு பதிவுகள் இருக்கும்..... உங்கள் ஆதரவும், அன்பும் தந்து இந்த தளத்தின் எண்ணத்தை தரணி போற்ற செய்ய வாருங்கள் நண்பர்களே....."

No comments:

Post a Comment