Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Sunday, 6 January 2013

திருமணம் செய்ய போறீங்களா?..... ஒரு நிமிடம் ப்ளீஸ்.....நம் நாட்டை பொறுத்தவரையில், இன்னும் ஒருபால் திருமணங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை..... அதனால், பல காரணங்களாலும் தங்கள் சுய அடையாளத்தை மறைத்து பெற்றோர் மற்றும் குடும்பத்தின் நிர்பந்தத்தால் ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்கிறார்கள்.... இத்தகைய நபர்கள் பெரும்பாலும் மனரீதியாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.... நான் இங்கு சொல்வது, ஒருபால் விரும்பிகளை பற்றி மட்டும்தான், "பை" பற்றி இங்கு குறிப்பிடவில்லை.... bisexual நபர்களால், அத்தகைய வாழ்க்கையை சமாளித்து எடுத்து செல்ல முடியும்... ஆனால், ஒரு கே'யால் அப்படி கொண்டு செல்வதென்பது தன்னையும் ஏமாற்றி, தன்னை சார்ந்தவர்களையும் ஏமாற்றும் செயல்.... இப்போதும் பலர் அப்படி திருமணங்களுக்கு தயார் ஆகிக்கொண்டிருப்பவர்களாக இருக்கலாம்.... அத்தகைய நபர்கள், முதலில் நீங்கள் கே தானா? என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.... பெண்கள் மீது சிலருக்கு ஈர்ப்பே இருக்காது, அத்தகைய நபர்கள் எக்காரணம் கொண்டாவது திருமணத்தை தவிர்ப்பது நல்லது..... அல்லது, ஒரு மனநல மருத்துவரிடம் உங்கள் நிலைமையை சொல்லி கலந்தாய்வு செல்லவும்.... திருமணத்திற்கு பின்பு, உங்களால் உங்கள் மனைவியோடு பரஸ்பர இன்பத்தை பகிர்ந்துகொள்ள முடியாது.... திருமணம் செய்துகொண்டோமே! என்ற ஒரே காரணத்தால் விருப்பமின்றி மனைவியுடன் இல்லறத்தில் ஈடுபடுவீர்கள்.... பலப்பல கனவுகளுடன் உங்களை திருமணம் செய்துகொள்ளும் உங்கள் மனைவிக்கு இது ஒரு பேரிடியாக தோன்றும்.... சில காலத்தில் உங்கள் காமப்பசியை தீர்க்க, இணையம் மூலம் வேறு ஆண்களை நாடி செல்வீர்கள்.... உங்கள் ஆசையும், காமமும் நிறைவேறும் மனநிம்மதியில் நீங்கள் இருப்பீர்கள்.... ஆனால், உங்கள் மனைவிக்கு திருப்தி கொடுக்க முடியாத ஏமாற்றம், உங்கள் இல்லற வாழ்வில் பிரதிபலிக்கும்.... அதுவே சிறுசிறு சண்டைகளாக வெடித்து, ஒரு கட்டத்தில் பெரிய பூகம்பம் வெடிக்கும் கட்டத்தில் நிற்கும்.... மனைவியோடு இயல்பாக இல்லறம் அனுபவிக்க முடியாத விரக்தி, உங்களையும் மனதால் உறுத்தி தீவிர மன உளைச்சலுக்கு ஆளாக்கும்..... எத்தனை காலம்தான் உங்களுக்கு விருப்பம் இல்லாமல் உங்கள் மனைவியுடன் உறவு கொள்ள முடியும்? என்று நினைக்கிறீர்கள்..... நிச்சயம் சில காலத்தில், இரவை கண்டாலே அஞ்சத்துவங்குவீர்கள்.... ஒரு நண்பர் சொன்னது போல, "இப்போதல்லாம் இரவே வரக்கூடாது என்று தோணுது.... இரவே இல்லாமல் இருந்தால் எப்படி இருக்கும்?... நார்வே நாட்டில் பெரும்பாலும் பகலாக இருக்குமாமே, அங்கு போகலாம்னு தோணுது" என்றார்.... இப்படி அந்த நபர் இரவை வெறுக்க காரணம், இரவில் அவர் மனைவியுடன் உறவு கொள்ள பயந்து.... இரவு நெருங்க நெருங்க, அப்படிப்பட்ட நபர்களுக்குள் அன்றைய இரவை எப்படியாவது ஓட்டிட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருக்கும்.... அனுபவித்து ரசிக்க வேண்டிய இத்தகைய இல்லற நிகழ்வுகளை பயந்தே எத்தனை காலம் உங்களால் ஓட்ட முடியும்?.....

சிலர் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள ஆண்களை தேடி செல்வதிலும் பெரிய ஆபத்துகள் இருக்கிறது.... மனைவி, குழந்தை என்று ஆனபிறகு அப்படி கே வாழ்க்கையில் ஈடுபடுவது என்பது கத்தி மேல் நடப்பது போன்ற ஒன்று..... எந்த விதத்திலாவது அந்த இரட்டை வாழ்க்கை உங்கள் குடும்பத்திற்கு தெரிந்தால், அத்தோடு எல்லாம் முடிந்தது..... இதை பயன்படுத்தி, சில திருமணம் ஆன ஆண்கள் மிரட்டப்படுவதும் நடைபெற்றதை நான் பார்த்திருக்கிறேன்.... குடும்பத்திற்கு தெரியக்கூடாது என்று, தங்கள் உடமை மற்றும் நிம்மதியை இழந்தவர்களை நான் கண்டிருக்கிறேன்.... சில மனைவிகளுக்கு தங்கள் கணவர் கே என்று தெரிந்து, விவாகரத்து வரைக்கு சென்றது கூட நம் சீர்மிகு தமிழகத்தில் நடந்திருக்கிறது......

அமெரிக்காவில் இதைப்பற்றிய விழிப்புணர்வு நாம் எதிர்பார்ப்பதைவிட அதிகமாக இருக்கிறது..... அப்படி ஆண்கள் பெண்ணை திருமணம் செய்துகொள்ள நேர்ந்தால், சில நாட்களில் தன்னை பற்றிய முழு விபரத்தையும் மனைவியிடம் கூறிவிடுவார்களாம்.... அத்தகைய பெண்களுக்காக (கணவன் ஓரின விருப்பம் கொண்டவர் என்பதை அறிந்த பெண்கள்) சில அமைப்புகளும் அங்கே செயல்படுகின்றன.... எப்படி வாழ்க்கையை செலுத்துவது?... அதை எப்படி கையாள்வது?.... கணவனுக்கு எந்த அளவுக்கு துணை நிற்பது? போன்று பெண்கள் தங்களுக்குள் பேசி, வாழ்க்கையை நடத்துகிறார்கள்.... இத்தகைய அமைப்புகள் மூலம், இந்த காரணத்தினால் அங்கு திருமண முறிவு ஏற்படும் நிகழ்வுகள் வெகுவாக குறைந்திருப்பதாக கூறுகிறார்கள்.... சமீபத்தில் பிலடெல்பியா’வில் அப்படி ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது.... இதன்மூலம் மனைவியும் தெளிவான மனநிலைக்கு வருகிறாள், கணவனும் குற்ற உணர்வின்றி இருக்கிறான்.....

இந்த நிலைமை நம் நாட்டுக்கு வரவெல்லாம் வெகு ஆண்டுகள் ஆகும்.... இவ்வளவு கூட வேண்டாம், அமெரிக்க ஆண்கள் செய்வதைப்போல தங்கள் அடையாளத்தை யாராவது தன் மனைவியிடம் கூற முடியுமா? சொல்லுங்க..... சொன்னாலும், அதை புரிந்துகொள்ளும் பக்குவம் நம் பெண்களுக்கு கிடைத்திருக்கிறதா சொல்லுங்க..... கிராமங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள், “முன்னாடி போனா முட்டுது, பின்னாடி வந்தா உதைக்குது” என்பார்கள்.... அத்தகைய திரிசங்கு நிலைமையில்தான் திருமணம் முடிந்த பெரும்பாலான ஓரின விருப்பம் கொண்டவர்களும் இருக்கிறார்கள்..... சமூக வலைதளங்களில் பல ஆண்களும், தங்கள் இயலாமையை, வெறுமையை வெளியில் சொல்ல முடியாமல் பேசுவதை கண்டிருக்கிறேன்..... இவ்வளவு யோசிக்கும் ஒரு விஷயத்தை, திருமணத்திற்கு முன்பு ஒரு முறை யோசிக்கலாமே..... பொதுவாக பெரியவர்கள் சொல்வதைப்போல, “எல்லாம் கல்யாணம் ஆகிட்டா சரி ஆகிடும்” என்பார்கள்.... இதை நம்பி பலரும் ஏதோ அசட்டு நம்பிக்கையில் திருமணத்தை முடித்துவிட்டு திண்டாடுவதை கண்டும் காணாமல் இருக்க ஏனோ மனம் உறுத்தியது.... அதனால்தான், உங்களிடம் இதை பகிர்கிறேன்.....

உங்க வாழ்க்கையை தீர்மானிக்கப்போகும் முடிவு, அதை ரொம்பவே ஆராய்ந்து ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுங்க.... உங்களை திருமணம் செய்துகொள்ள நிற்பந்திப்பவர்கள் எவரும் உங்களுடன் கடைசிவரை உங்கள் கஷ்டத்தை அனுபவிக்க போவதில்லை.... அதனால், நல்லா யோசித்து முடிவெடுங்க...... நலமுடனும் வளமுடனும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துகள்...

7 comments:

 1. again a good post to the gay community :)

  ReplyDelete
 2. this 100/- correct, so please please please ungala neenga nalla purinjikonda piragu marriage pannalaamaa venaamaa nu mudivu pannunga.

  ReplyDelete
 3. Wonderful post my friend. Every one have to think of it.

  Regards
  Vijay @ Raj

  ReplyDelete
 4. நன்றி விக்கி, விஜய் ராஜ் மற்றும் chanararavi நண்பர்களே....

  ReplyDelete
 5. மிரட்டபடுகிறோம் ஓரு பெண்னை திருமணம் செய்துகொள்ள குடும்பத்தில் உள்ளவர்களால்.
  அம்மா - பாசத்தால்,அழுகையால்,காலில் விலரன்டா இப்படி பல.
  அப்பா - அதிகாரத்தால, மிரட்டலால்,காரணம் என்ன,
  உடன்பிறன்தோர்- கேள்வி கனைகளால்.,
  நண்பன் - ஏன்,எதற்காக,காதலா,என் நண்பனா இருந்தா நீ
  கல்யாணம் பண்ணிக்கோ.
  சுற்றத்தார் - அவனுக்கு ஏதோ நோயாயிருக்கும் இல்லனா அப்படி
  இப்படி கட்டு கதை பல.
  இவங்ககிட்ட மனதில் உள்ளத சொல்லவுமுடியல தப்பிக்கவும் தேரியல.

  ReplyDelete
 6. Nallapost vijay anna..
  Nachu commentu Kamal kumar..
  Nan(ennaiya mathari romba per) solla nenaikira, nenacha commenta Kamal kumar sollitaru..
  Namma vidhi idhu than..

  ReplyDelete
 7. Kamal, you're right. I live outside India just to escape from these :-(

  ReplyDelete