Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Monday, 14 January 2013

மாவீரனும் ஒரு மகிழ்வன்தான்....

ஒருபால் ஈர்ப்பு நபர்களை பற்றிய சிலரின் பார்வை அவர்களை பெண்ணியத்தன்மை மிக்கவர்களாகவும், பயப்படும் நபர்களாகவும் நினைக்கிறார்கள்..... அவர்களுக்கு ஒரு முக்கியமான வரலாற்று வீரனை பற்றி நான் கூற விரும்புகிறேன்.... “மாவீரன்” என்று சொன்ன உடனே, உலகத்தில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் நினைவுக்கு வருபவன் “மாவீரன் அலெக்சாண்டர்”..... அவன் ஒரு கே என்றால், அத்தகைய கருத்தை அவர்கள் எப்படி நியாயப்படுத்துவார்கள்?..... உடல் அமைப்பு, ஆண்மை போன்றவற்றுக்கும் பால் ஈர்ப்புக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை என்பதை இதைவிட தெளிவாக யாராலும் கூறமுடியாது...
.
தன் முப்பதாம் வயதில் உலகத்தின் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கிய அலக்சாண்டர், தன் போர் பட்டறையில் காதலன் ஹெபாசியனுடன் வாழ்ந்ததை வரலாறு மூலம் நாம் அறியமுடிகிறது....

அலெக்ஸாண்டரின் தந்தையான மாசிடோனியா மன்னர் பிலிப் கூட பல மனைவிகளுடனும், ஆண் காதலர்களுடனும் வாழ்ந்திருக்கிறார்... அலெக்சாண்டர் எந்த பெண்ணையும் திருமணம் செய்துகொள்ள விரும்பாமல், உலகத்தை தன் ஆட்சிக்குள் அடக்கும் எண்ணத்தோடு மாசிடோனியாவை விட்டு வெளியேறினார்.... அலெக்சாண்டர் தன் பால்ய வயது நண்பனான ஹெபாசியனை காதலித்தார்... இருவரும் சிறுவயது முதல் ஒன்றாக வளர்ந்தவர்கள், அரிஸ்டாட்டிலிடம் ஒன்றாக பாடம் படித்தவர்கள்.... ஹெபாசியன் தன் பணியை குதிரைப்படை வீரனாக தொடங்கினான்... தன் காதலன் என்பதற்காக அவனை உயரிய பொறுப்பில் அமர்த்தாமல், திறமை சார்ந்தே ஒவ்வொருவருக்கும் பதவி வழங்கினார் அலெக்சாண்டர்.... சில நாட்களுக்கு பிறகு அலெக்சாண்டருக்கு தான் கைப்பற்றிய பெர்சிய நாட்டின் நீதிமன்றத்தில் ஒருவனுடன் காதல் உண்டானது.... பெர்சியர்களை எப்போதும் இரண்டாம் பட்சமாக பார்க்கும் கிரேக்க மக்கள் இதை ஏற்க மாட்டார்கள் என்பதால். அந்த காதலை புறந்தள்ளினார் அலெக்சாண்டர் (அது காதல் இல்லை, வெறும் ஈர்ப்புதான் என்று சிலர் சொல்கிறார்கள்)... பின்னர் ஆசிய கண்டத்தின் ஒரு மலை நாட்டின் இளவரசியை மணம் புரிந்தார்.... விருப்பப்பட்டு மணம் செய்தாரா? அல்லது, அரசியல் சூழலுக்காக அதை செய்தாரா? என்று தெரியவில்லை... ஆனால், இருவருக்கும் குழந்தை வெகுநாட்களுக்கு பின்பே பிறந்தது மட்டும் உண்மை... பின்பு தான் வென்ற பெர்சிய நாட்டின்  மன்னர் மகள்களை அலக்சாண்டரும், ஹெபாசியனும் மணம் செய்துகொண்டு ஒருவழியாக "சகலை" ஆனார்கள்... ஆனால், ஆசியாவை கைப்பற்றிய சிறிய இடைவெளியில் விஷக்காய்ச்சலால் ஹெபாசியன் இறந்தார்.... அலெக்சாண்டர் தாள முடியாத துயரத்தில் வீழ்ந்தார்.... சாம்ராஜ்யம் சரிந்தாலும், அதை மீட்கும் மன உறுதியுடன் கவலைப்படாத மாவீரன், தன் காதலன் இறந்தபோது அடைந்த துக்கம் அவன் வாழ்வின் கருப்பு பக்கங்கள் என்று சொல்லலாம்.... ஹெபாசியன் இறந்த எட்டாவது மாதத்தில் உலகை தன் வீரத்தால் வென்றெடுத்த மாவீரனும் தன் உயிரை விட்டான்.... காதலன் இறந்த எட்டு மாதத்தில் தானும் இறந்தார் அலெக்சாண்டர்..... அவர் இறக்கும்போது வயது 32 தான் எனும்போது யாருக்குத்தான் கவலை வராது!....

பல இறப்புகளை போர்க்களத்தில் கண்டவன், எதிரியின் தலைகளை வெட்டி வீசியவன், தன் காதலன் இறந்தபோது குழந்தை போல அழுததை நம்மால் ஆச்சரியமாகவே பார்க்க முடிகிறது.... காதல் என்றால் அப்படித்தான் போல.....
உலகை கைப்பற்ற வேண்டும் என்கிற ஒற்றை குறிக்கோளோடு கிளம்பிய அலக்சாண்டருக்கு, ஹெபாசியன் காதல் மட்டுமே ஒரே ஆறுதலாக இருந்திருக்கிறது.....
இப்படி உலகத்தை மிரட்டியவன், வரலாற்று பக்கத்தினை மிரட்சியுடன் ஆக்கிரமித்தவன், ஒருபால் ஈர்ப்பு எண்ணம் கொண்டவன் என்று சொல்லும்போது, நாம் ஒருபால் ஈர்ப்பு கொண்டிருப்பதை பெருமையாக சொல்லிக்கொள்ளலாம்....
வீரம், மன உறுதி, திறமை, திட்டமிடுதல் என சகலமும் அறிந்த அலக்சாண்டர் ஒரு ஆண் மகனுக்குரிய அத்தனை அம்சங்களையும் இயல்புக்கு அதிகமாகவே கொண்டிருந்தார்..... அவர் அரசியல் காரணங்களுக்காக மணம் புரிந்த இரண்டு பெண்கள் வெறும் சம்பிரதாய வாழ்க்கை துனைவிகள்தான்.... வாழ்க்கை முழுவதும் துணையாக இருந்தவன் ஹெபாசியன் மட்டுமே....
பொதுவாகவே ஸ்ட்ரைட் நபர்களைவிட ஒருபால் ஈர்ப்பு நபர்கள் அதிக பொறுப்புணர்வும், ஆளுமையும் மிக்கவர்களாக இருப்பார்கள்.... ஆனால், நம் நாட்டில் ஒருபால் ஈர்ப்பு நபர்களுக்குள் இருக்கும் தாழ்வுமனப்பான்மை, அத்தகைய ஆளுமை தன்மையை வெளிப்படுத்த விடாமல் செய்துவிடுகிறது.... அலக்சாண்டர் காலத்தில் ஒருபால் ஈர்ப்பை தவறாக யாரும் பார்க்கவில்லை (அவர் தந்தை பிலிப் கூட ஆண் காதலர்கள் கொண்டிருந்ததை நாம் பார்த்தோம்...) அதனால், அவருக்கு தாழ்வுமனப்பான்மை வரவைக்கும் அளவிற்கு அந்த சமூகம் இருக்கவில்லை.... ஒருவேளை அவர் வாழ்ந்த சமூகம் ஒருபால் ஈர்ப்புக்கு எதிராக இருந்திருந்து, தாழ்வு மனப்பான்மை இருப்பவராக இருந்திருந்தால் நிச்சயம் ஒரு “குறுநில” மன்னர் என்ற அளவை தாண்டி அவர் சென்றிருக்க மாட்டார் என்றே தோன்றுகிறது......
வீரத்தில் அலக்சாண்டர் மட்டுமில்லை.... சாக்ரடிஸ் பிளாட்டோ, அரிஸ்டாட்டில்  போன்றவர்களின் தத்துவங்கள், டாவின்சியின் ஓவியங்கள், மைக்கேல் ஏஞ்சலோவின் சிற்பம் மற்றும் ஓவியங்கள், சேக்ஸ்பியரின் எழுத்துகள் இன்னும் பலப்பல விஷயங்கள் ஒருபால் ஈர்ப்பு நபர்களிடத்தில் இருந்துதான் நாம் பெற்றிருக்கிறோம்..... அத்தகைய திறமை வாய்ந்த ஒருபால் ஈர்ப்பாளர்கள் நம் நாட்டில் தாழ்வு மனப்பான்மையும், மனகுழப்பத்திலும் தங்கள் திறமைகளை வெளிக்காட்ட முடியாமல் தவிக்கின்றனர்......
“ஒருபால் ஈர்ப்பு தவறு” என்கிற ஒரு மாயத்திரை தாழ்வு மனப்பான்மை மூலம்  நம்மவர்களின் திறமையை மூடி மறைக்கிறது.... அந்த திரையை தீயிட்டு கொளுத்தி, “இதுவும் இயல்பான ஒன்றுதான்” என்கிற நிலைமையை உருவாக்க வேண்டும்....
ஒருபால் ஈர்ப்பை தவறில்லை என்று உணரும் நாள், ஒவ்வொருவரும் தங்கள் தாழ்வு மனப்பான்மையிலிருந்து விடுபடும் நாள், நிச்சயம் நம் சமூகத்தில் மிகப்பெரிய திறமைகள் வெளிப்படும் என்று நம்பலாம்.....
அது உங்கள் கைகளில், மனங்களில் மட்டுமே இருக்கிறது..... நீங்கள் “செக்ஸ் மெஷின்” இல்லை, ஒருபால் ஈர்ப்பு தவறில்லை என்ற உண்மைகளை உணர்ந்து நீங்கள் “இயல்பாக” மாறும் நாள் நிச்சயம் உங்களுக்கான புதிய பிறப்பை உண்டாக்கும் என்று நம்புகிறேன்.....
அதை மருத்துவமோ, அறிவியலோ, சட்டமோ, சமூகமோ உங்களுக்குள் மாற்ற முடியாது.... உங்கள் மனம் தான் அதை மாற்ற வேண்டும்.... மாற்றும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது....

6 comments:

  1. http://chennaiguyysforum.activeboard.com/t52264962/topic-52264962/

    ஒரு கடிதம்...




    அன்பு நண்பர் விஜய் அவர்களுக்கு,

    வணக்கம்! என் பெயர் HARD!!

    ஆம்...அத்தகைய புனை பெயரில் ஆர்குட்டின் "Chennai guyss gay sex stories" வலை தளத்தில் பல கதைகளை பதிந்து இருக்கிறேன்!
    இப்போது பணிசுமையின் காரணமாய் என்னால் எனது பங்களிப்பை செய்ய இயலவில்லை!
    சென்னை தோஸ்த் அமைப்பின் பிரசன்னா மற்றும் உங்களை போன்றவர்கள் ஓரின ஈர்பாளர் சமூகத்தின் மேம்பாட்டிற்கு ஆற்றி வரும்
    பணி போற்றுதலுக்கு உரியதே! உங்களை போன்றோர் கதை, கட்டுரைகள், கூட்டங்கள், பேரணிகள், கலந்தாய்வுகள் என எவ்வளவு பங்களிப்பை
    செய்தாலும் அது சமூகத்தில் ஓரின உறவாலர்களின் மீதான பழமைவாத எண்ணத்தை சிறிதும் மாற்றிவிடாது! உங்களையே எடுத்து கொள்ளுங்கள்....கதைகளின் மூலம் இன்னும் பிற கட்டுரைகளின் மூலம் 'கே' சமூகத்தின் மீது நன்மதிப்பு ஏற்படும் வண்ணம் எழுதுகிறீர்கள்...ஆனால் உங்கள் எழுத்து யாரால் படிக்கப்படுகிறது என்று சிந்தித்து பாருங்கள்....இது 90% தன்பால் ஈர்ப்பு கொண்டவர்கள் பெரும்பாலும் உறுப்பினர்களாக கொண்ட வலை தளங்களிலேயே பதிய படுகிறது! ஓரின ஈர்ப்பு என்பது இயல்பானது என்பதை ஓரின சமூகம் எப்போதோ அறிந்து கொண்டு விட்டது! ஆகையால் உங்கள் எழுத்துக்கள் போய் சேர வேண்டிய இடம் தன்பால் ஈர்பற்ற (straight ) சமூகத்திடம் தான்!! ஏனெனில் அவர்களே இப்போது உங்கள் எழுத்துக்களை படித்து ஓரின ஈர்ப்புள்ள தங்கள் சக நண்பரை அல்லது உறவினரை ஏற்று கொள்ளும் மன நிலைக்கு வர வேண்டி உள்ளது! அப்படிப்பட்ட மனநிலையை சமூகத்தில் ஏற்படுத்தும் பட்சத்தில் நமக்கான அங்கிகாரம் கிடைக்க தொடங்கிவிடும்!! நாமும் நம் ஓரின பால் நாட்டத்தை சமூகத்திடம் தயக்கமின்றி வெளிபடுத்தலாம்! சென்னை தோஸ்த் பிரசன்னா போன்றவர்கள் இதில் ஓரளவு வெற்றி பெற்று இருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சிக்குரியது!! ஒரு 'கே' வுக்கு அவன் இயல்பான மனிதன் என்று கலந்தாய்வு செய்வதை விட அவன் பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் தான் கலந்தாய்வு தேவை...ஏனெனில் இப்போது 'கே' நண்பர்களுக்கு உள்ள பிரச்சனை சமூகம் தங்களை ஏற்று கொள்ளவில்லையே என்ற கவலை தானே தவிர வேறில்லை...மற்றபடி அவர்கள் அவர்களின் ஒருபால் நாட்டத்தை இயல்பாக ஏற்று கொண்டுவிட்டனர்...அதற்கு காரணம் உங்களை போன்றோர் செய்யும் பங்களிப்பு! நான் சொல்ல முனைவதெல்லாம் உங்கள் பங்களிப்பு நம்மை போன்றரை இனி மையபடுத்தி இல்லாமல் சமூகத்தை மையபடுத்தி இருக்கட்டும்!! சமூகம் ஏன் நம்மை சிறுபான்மை இனமாக பார்க்கிறது?? ஏனெனில் நீங்களோ நானோ நான் 'கே' என்பதை வெளியில் சொல்லவில்லை...இப்படி ஒவ்வொரு 'கே' வும் நினைக்கும் பட்சத்தில் நம் இனம் எப்போதும் சமூகத்தில் சிறுபான்மை இனமாகவே இருக்கும்...சிறுபான்மை இனம் சமூகத்தில் ஒடுக்கப்படும் என்பது பொது விதி அன்றோ! :) :) அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் ஓரின திருமணத்திற்கு போராடுகிறார்கள் நாம் இன்னும் அடிப்படை உரிமைக்கே போராடி கொண்டிருக்கிறோம் என்று வருத்தம் கொள்கிறீர்கள்...அமெரிக்க நாட்டிலும் ஓரின விருப்பதை முதலில் யாரும் ஏற்று கொள்ளவில்லை தான்...ஆனால் அங்கே 'coming out' என்ற பெயரில் அமெரிக்க இளைஞர்கள் தங்களை சமூகத்திடம் ஒளிவு மறைவின்றி வெளிபடுதியதால் தான் 'கே' சிறுபான்மை இனம் அல்ல...பெரும்பான்மையான ஆண்கள் இந்த விருப்பத்தில் இருகிறார்கள் என்பதை ஏற்று கொண்டு அம்மக்கள் அதை ஏற்றனர்! நீங்களும் நானும் முகமூடியை கழற்றி எறியாதவரை சமூகமும் நம்மை ஏற்று கொள்ள போவதில்லை!! முகமூடி எதுவும் இன்றி எதையும் எதிர் கொள்ளும் திறந்த மனதுடன் சமூகத்தை எதிர் கொள்ளும் திறன் படைத்தவர்களுக்கு தான் எந்த ஒரு போராட்டத்தையும் முன்னெடுக்கும் தகுதியும் உரிமையும் இருக்கிறது!

    'கே' நண்பர்களுக்கு ஒரு செய்தி....உங்களை வெளிப்படுத்தி கொள்ளுங்கள் என்று சொல்வது உங்கள் படத்தை சமூக வலை தளங்களில் அல்லது பிற ஊடக வாயிலாக கொடுத்து என் உண்மையான விவரம் இன்னது...நான் ஒரு ஹோமோ....என்று விளம்பரபடுத்தி கொள்வதல்ல....மூன்றாம் நபருக்கு உங்கள் பாலின அடையளாத்தை வெளிபடுத்த வேண்டாம்....முதலில் உங்கள் பெற்றோர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்கு வெளிபடுத்துங்கள் போதும்....இப்படி ஒவ்வொரு 'கே' வும் தன்னை வெளிப்படுத்தி கொண்டால் ஓரின பெரும்பான்மை ஏற்பட்டு மெல்ல சமூகம் அவற்றை ஏற்கும்!... ஆடவன் ஒருவனுடனான உங்கள் காதல் உண்மையாக இருக்கும் பட்சத்தில்....அந்த ஆடவனிடம் நீங்கள் காட்டும் அக்கறை,அன்பு,காதல் இவற்றை பார்த்து உங்கள் நெருங்கிய நண்பர்களும் பெற்றோர்களும் உங்கள் உறவு நிலையை ஆதரிப்பார்கள் என்பது நான் அனுபவப்பட்ட உண்மை! ஆம் நண்பர்களே...நான் என் ஓரின ஈர்ப்பு நிலையை என் நண்பர்களுக்கும் பெற்றோருக்கும் வெளிப்படுத்தி விட்டேன்!! இப்போது என் பத்து ஆண்டு கால காதலனுடன் உல்லாசமாக கொண்டாடிக்கொண்டு இருக்கிறேன்! ;)


    அன்புடன்,
    HARD.

    ReplyDelete
  2. Replies
    1. சரண் அவர்களுக்கு தனி பதிவில் பதில் சொல்லிவிட்டேன் நண்பா....

      Delete
  3. after reading this i am very proud that i am a gay

    ReplyDelete
  4. Nalla post na.. Araju panna reply nachunu irunthathu..
    Nalladhu nadakattum...

    ReplyDelete
  5. இவர் ஓரின ஆர்வலர் கிடையாது. இரு பால் விரும்பி ஆவார்

    ReplyDelete